Published:Updated:

அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்குவீர்: முதல்வர்

விகடன் விமர்சனக்குழு
அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்குவீர்: முதல்வர்
அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்குவீர்: முதல்வர்

சென்னை, அக்.29,2011

அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்குவீர்: முதல்வர்

மக்கள் வாழ்வு வளம் பெற அனைவரும் சேமிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், வீட்டுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்தில் ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை தொடங்கி சேமித்திட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக சிக்கன தினம் நாளை (அக்.30) அனுசரிக்கப்படுவதையொட்டி, அவர் இன்று வெளியிட்ட செய்தி:

"சேமிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் 30 ஆம் நாள் 'உலக சிக்கன நாளாக' நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு என்பதால் எதிர்கால வாழ்க்கை நலனை கருத்தில் கொண்டு சேமிக்கும் பழக்கம் சிறு வயது முதலே வர வேண்டும்.

நாடும், வீடும் நலம் பெற, மக்கள் வாழ்வு வளம் பெற அனைவரும் சேமிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

அஞ்சலகங்களில் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கும் போது அத்தொகை 'சிறு துளி பெருவெள்ளம்' போன்று பெருந்தொகையாகி நாட்டு முன்னேற்றத்திற்காகவும், நல்ல பல வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.

எனவே தான் தமிழக அரசு சேமிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது.

இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம் பெறவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கிடவும், வீட்டுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்தில் ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை தொடங்கி சேமித்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்," என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.