Published:Updated:

அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு: துரித விசாரணைக்கு ஜெ. உத்தரவு

விகடன் விமர்சனக்குழு
அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு: துரித விசாரணைக்கு ஜெ. உத்தரவு
அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு: துரித விசாரணைக்கு ஜெ. உத்தரவு

சென்னை அக்.29,2011

அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு: துரித விசாரணைக்கு ஜெ. உத்தரவு

மதுரை அருகே அத்வானி ரத யாத்திரைக்காக செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக விரைந்து விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தச் சதிச்செயலை முறியடிப்பதற்கு காரணமாக இருந்த ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், அதிமுக கவுன்சிலர் மோகன், காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த நிபுணர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுகுறித்து பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சதிச்செயலை முன்கூட்டியே முறியடித்ததற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சதிச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.