Published:Updated:

போதைப் பொருட்கள் எரிப்பு: மதுரையில் பொதுமக்கள் அவதி!

போதைப் பொருட்கள் எரிப்பு: மதுரையில் பொதுமக்கள் அவதி!
போதைப் பொருட்கள் எரிப்பு: மதுரையில் பொதுமக்கள் அவதி!

போதைப் பொருட்கள் எரிப்பு: மதுரையில் பொதுமக்கள் அவதி!

போதை பொருட்களால் நாளுக்குநாள் நமது தேசம் அழிவுக்கு சென்று கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்த பலநடவடிக்கைகள் அரசு எடுத்து கொண்டுதான் இருகின்றது.

போதைப் பொருட்கள் எரிப்பு: மதுரையில் பொதுமக்கள் அவதி!

அந்தவகையில் நாளை ‘’சர்வதேச புகையிலை இல்லா தினம்’’ வருவதை தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிவாகத்துறை சார்பில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா, புகையிலை பொருட்கள் அழித்தல் செயல்பாடுகள் நடைபெற்றது.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் தொகை மட்டும் பத்து லட்சம் ரூபாய் ஆகும். அனைத்தும் தீ வைத்து முற்றிலும் எரிக்கப்பட்டது.

போதைப் பொருட்கள் எரிப்பு: மதுரையில் பொதுமக்கள் அவதி!

இது பற்றி அவர் நம்மிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் கெ. வேலுச்சாமி, “ தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகமாகவே பறிமுதல் செய்து இருக்கின்றோம் என்றார்.

புகையிலை எதிர்ப்பு நாளில் போதைப் பொருட்களை எரிக்கிறேன் பேர்வழி என அதிகாரிகள் செய்த செயல் பொதுமக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. அவ்வளவு பொருட்களை திறந்தவெளியில் பொதுமக்கள் புழங்கும் இடத்தில் எரித்தததால், எழுந்த புகைமண்டலத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காரணம் எரிக்கப்பட்டவைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பதே.

போதைப் பொருட்கள் எரிப்பு: மதுரையில் பொதுமக்கள் அவதி!

இது அருகில் வசிப்போருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திறந்த வெளியில் எரிக்காமல் முறையாக அதை எரித்திருக்கலாம் என பொறுமியவாறு சென்றனர்.

- சி.சந்திரசேகரன், (மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு