Published:Updated:

சர்ச்சையை ஏற்படுத்திய இரு விரல் சோதனை: டெல்லி அரசு விளக்கம்!

 சர்ச்சையை ஏற்படுத்திய இரு விரல் சோதனை: டெல்லி அரசு விளக்கம்!
சர்ச்சையை ஏற்படுத்திய இரு விரல் சோதனை: டெல்லி அரசு விளக்கம்!

சர்ச்சையை ஏற்படுத்திய இரு விரல் சோதனை: டெல்லி அரசு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 சர்ச்சையை ஏற்படுத்திய இரு விரல் சோதனை: டெல்லி அரசு விளக்கம்!

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடத்தப்படும்  இரு விரல் சோதனை முறை குறித்த டெல்லி சுகாதார அமைச்சகத்தின் சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த அறிக்கை தவறாகப்  புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விளக்கம் தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதி செய்ய நடத்தப்படும் இரு விரல் சோதனை அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அந்த சோதனையை மத்திய சுகாதாரத் துறை தடை செய்துள்ளது.

இந்நிலையில், கடந்த மே 31 ஆம்  தேதியன்று டெல்லி சுகாதார துறை அனுப்பிய சுற்றறிக்கையில், "அடிப்படையான இச்சோதனையை விலக்கி வைப்பது பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காமல் தடுக்கச் செய்யும். இதனால் குற்றவாளிகள் தப்பிக்கும் சூழல் ஏற்படும். எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்தோடு இரு விரல் சோதனை மேற்கொள்ளலாம்"  என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பெண்கள் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து டெல்லி அரசின் சுற்றறிக்கை தவறாகப்  புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கியுள்ள சுகாதாரத்துறை  அமைச்சர் சத்யேந்திர ஜெயின், "பலாத்காரத்துக்குள்ளான பெண்களுக்கான சிகிச்சை வழிகாட்டு நெறிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இரு விரல் சோதனை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் நடத்தப்படக்கூடாது.

பலாத்காரத்தை உறுதி செய்ய வேறு சில அறிவியல் நடைமுறைகள் இருப்பதால் இரு விரல் சோதனை கூடவே கூடாது. இருப்பினும், சிகிச்சையின் நிமித்தம் ஒரு மருத்துவக் குழு பரிந்துரைத்தால், இச்சோதனையை மேற்கொள்ளலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது" என்றார்.

இருவிரல் சோதனை விவகாரம் சர்ச்சையை உண்டாக்கியதைத் தொடர்ந்து டெல்லி சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு