Published:Updated:

டெல்லி ஆளுநர் - கெஜ்ரிவால் மோதலால் மாறி மாறி பந்தாடப்படும் அதிகாரிகள்!

டெல்லி ஆளுநர் - கெஜ்ரிவால் மோதலால் மாறி மாறி பந்தாடப்படும் அதிகாரிகள்!
டெல்லி ஆளுநர் - கெஜ்ரிவால் மோதலால் மாறி மாறி பந்தாடப்படும் அதிகாரிகள்!

டெல்லி ஆளுநர் - கெஜ்ரிவால் மோதலால் மாறி மாறி பந்தாடப்படும் அதிகாரிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லி ஆளுநர் - கெஜ்ரிவால் மோதலால் மாறி மாறி பந்தாடப்படும் அதிகாரிகள்!

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த முறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நியமனத்தில் பரஸ்பரம் ஒருவர் நியமனத்தை மற்றவர் ரத்து  செய்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில  மாதங்களாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் ஆளுநருக்கும் இடையே யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்று நேரடி மோதல்கள் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு ஒரு உறுதியான முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் மத்திய அரசு நேரடியாகத் தலையிடாமல் கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வந்தது.

இந்நிலையில்,டெல்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு பீகார் அதிகாரிகளை நியமித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்திருந்த உத்தரவை ஆளுநர் ரத்து செய்ததோடு, புதிய அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் டெல்லி மாநில இணை ஆணையராக இருந்த எம்.கே மீனாவை, ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக ஆளுநர் நஜீப் நியமித்துள்ளார். அதே போல  ஒரு இணை ஆணையர் உள்ளிட்ட 8 அதிகாரிகளும் ஊழல் தடுப்பு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது மத்திய அரசின் திரைமறைவு வேலைகளுக்கு  உதாரணம் என ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் மணிஷ் சிசோடியா கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், துணை நிலை ஆளுநரின் இந்த செயல்பாடுகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார்.

கெஜ்ரிவால் தொடர் அதிரடி

இந்நிலையில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக ஆளுநர் நஜீப் நியமித்த எம்.கே. மீனாவுக்கு டெல்லி அரசிடம் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், " ஊழல் தடுப்பி பிரிவு தலைவர் என்ற பதவியே தற்போது கிடையாது. ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் கமிஷனர் பதவி மட்டுமே உள்ளது. எனவே இல்லாத பதவிக்கு நீங்கள் பொறுப்பு வகிக்க முடியாது என்பதால் டெல்லி காவல்துறைக்கே நீங்கள் திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

உள்துறை செயலரையும் மாற்றினார் கெஜ்ரிவால்

இதனிடையே ஆளுநர் நஜீப் ஜங்கின் உத்தரவின்பேரில் டெல்லி மாநில இணை ஆணையராக இருந்த எம்.கே மீனாவை, ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமித்த டெல்லி மாநில அரசின் உள்துறை செயலாளராக தரம்பாலை அப்பதவியில் இருந்து அதிரடியாக மாற்றியுள்ளது கெஜ்ரிவால் அரசு.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநில அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

டெல்லி ஆளுநர் மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையேயான மோதலில் தாங்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவதும், பந்தாடப்படுவதும் அதிகாரிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு