Published:Updated:

பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து, மதிமுக, நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாகப்பட்டிணம்: பிரபாகரன் சிலை அகற்றியதை கண்டித்து நாகப்பட்டிணத்தில் ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து, மதிமுக, நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தினர் நிறுவிய பிரபாகரன் சிலையை அகற்றிய காவல்துறையையும், தமிழக அரசையும் கண்டித்து கறுப்புக்கொடி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முதலில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் தலைமையிலும், நாகை மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலையிலும் நாகப்பட்டிணம், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் செய்து தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறையை கண்டித்தும் ஆர்ப்பட்டாம் செய்தனர்.

பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து, மதிமுக, நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

குஷ்புவுக்கும், நக்மாவுக்கும் கோயில் கட்டினால் அதை தடுக்க மறுக்கிறது தமிழக அரசு. ஒரு தேசிய தலைவனுக்கு கோயிலில் சிலை வைத்தால் என்ன தப்பு என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரபாகரன் சிலையை மீண்டும் அந்த இடத்தில் நிறுவ வேண்டும் இல்லையென்றால், எங்களுடைய போராட்டம் ஓயாது என்று கோஷமிட்டனர். அப்போது அங்கு வந்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து, மதிமுக, நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சியினருக்கு மைக் அனுமதி மறுக்கப்பட்டது. மாநில துணை அமைப்பாளர் வழக்கறிஞர் நல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபற்றது. ஆர்ப்பாட்டத்தில் பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் நல்லத்துரை, ''காவல்துறையில் தெற்கு பொய்கை நல்லூரில் கோயில் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பிராபகரன் சிலையை அகற்றி விட்டீர்கள். இனி நாங்கள் ஊர் ஊராக உள்ள கோயில்களில் பிரபாகரன் சிலையை வைத்து வழிபடுவோம். அப்படி அனுமதி கொடுக்கவில்லை என்றால் நாங்களே கட்டுவோம் என்று பேசினார்.

ஏ. ராம்

படங்கள்: க. சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு