ஓரம்போ... சூடாமணி வண்டி வருது!

சூடாமணி டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்... என்ன பெயரே சூடாக இருக்கா? ஆனால், கொஞ்சம் கூலான மேட்டர்தான். நீராவியில ரயில் ஓடிச்சு, அப்புறம் பெட்ரோல், டீசல், இப்ப மின்சாரத்துல ஓடிக்கிட்டிருக்கு. ஆனா, தண்ணில ரயில் ஓடுமா?

''ஏன் ஓடாது?'' என்று கேட்டு ஆச்சர்யப்படுத்தினார் சென்னை அருகே இருக்கும் பாடியைச் சேர்ந்த சீனிவாசன்.

''ஐ.சி.எஃப் - ரயில் பெட்டிகள் தயாரிக்கிற தொழிற்சாலையில் முப்பத்தஞ்சு வருஷம் சர்வீஸ். சீனியர் டிஸைன் அண்ட் டெவலப் மென்ட் இன்ஜினீயராக இருந்து ரிட்டையர் ஆயாச்சு...'' என்றபடி ஆரம்பித்தார் சீனிவாசன்.

''என் வாழ்க்கை முழுக்க ரயிலோடயும் ரயில் பெட்டிகள் தயாரிப்புலேயுமே கழிஞ்சது. இந்த சமயத்துலதான் டீசல்லேயும், மின்சாரத்துலேயும் ஓடிக்கிட்டிருக்கிற ரயில்களை வேற மாதிரி இயக்க முடியுமானு ஒரு யோசனை. அப்ப தோணுனதுதான் தண்ணீர்ல

ரயில ஓட வைக்கிற ஐடியா. உடனே, செயல்ல இறங்கிட்டேன். அந்த முயற்சிலே முழு திருப்தி வந்ததும், கிண்டியில இருக்கிற காப்புரிமை அலுவலகத்துல என்னோட கண்டுபிடிப்பைச் சொல்லி விளக்கினேன். இப்போ, 'சூடாமணி டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்'னு பதிவும் பண்ணிட்டேன்.

ஒரு ரப்பர் பந்தை தண்ணீருக்குள் மூழ்க வைத்தால் என்ன வேகத்தில் வெளியே வருகிறது? இதுதான் என்னோட முயற்சியின் அடிப்படை. இதில் கொஞ்சம் மாறுதல்களை ஏற்படுத்தி, சில விஷயங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து செயல்படுத்தியிருக்கிறேன்.

பெரிய நீச்சல் குளம் மாதிரி ரயில்வே ஸ்டேஷன் இருக்கும். அடுத்த ஸ்டேஷனும் அதே மாதிரிதான். இரண்டுக்கும் இடையே வீராணம் குழாய் மாதிரி பெரிய குழாய். அது முழுக்க தண்ணீர்! இந்த தண்ணீருக்குள்தான் ரயில் பெட்டி பயணம் செய்யும்'' என்றவர்,

வீட்டு மொட்டை மாடிக்கு நம்மைக் கூட்டிச் சென்றார். அங்கு வலது பக்கம் ஒரு தண்ணீர் தொட்டி, இடது பக்கம் ஒரு தண்ணீர் தொட்டி. இடைப்பட்ட இருபதடி நீளத்துக்கு ஒரு அடி விட்டம் உள்ள குழாய். ஒரு பக்கத்து தொட்டியின் அடிப்பாகத்திலிருந்து குழாய் ஆரம்பித்து, இன்னொரு தொட்டியின் மேல் பாகத்தில் (படத்தைப்பார்க்கவும்) இணைக்கப் பட்டிருந்தது. இரண்டு தொட்டி முழுவதும் தண்ணீர்; குழாயிலும் தண்ணீர்.

''டேய் ஸ்ரீநாத்'' என்று தன்னுடைய பேரனை அழைத்து, ''இந்தா, இதை தண்ணீக்குள்ள அமுக்கு'' என்றார். ஒன்றரை அடி நீளமுள்ள பிவிசி பைப் அது. இரண்டு பக்கமும் சீல் செய்யப்பட்டிருந்தது. ''இதுதான் சார், மாதிரிக்கு செய்யப்பட்ட ரயில் பெட்டி'' என்றார் சீனிவாசன். மிகுந்த சிரமத்துடன் ஸ்ரீநாத் முதல் தொட்டிக்குள் மூழ்கி அந்த மாதிரி ரயில் பெட்டியை(?) தொட்டியுடன் இணைக்கப்பட்டிருந்த பெரிய குழாய்க்குள் அமுக்கித் தள்ளிவிட, ஆர்வமானார் சீனிவாசன். ''இது ஒரு ஸ்டேஷன்னு வச்சுக்கோங்க. இன்னொரு தொட்டி இன்னொரு ஸ்டேஷன். இடைப்பட்ட குழாய்தான் பாதை...'' என்று ஆர்வமாகி இன்னொரு தொட்டியின் அருகே வந்து காத்திருக்க, சில நிமிடங்களில் தண்ணீரைக் கிழித்தபடி வெளியே வந்து விழுந்தது அந்த ரயில் பெட்டி.

''இதுதான் சார் என்னோட 'சூடாமணி டிரான்ஸ் போர்ட் சிஸ்டம்'. ஒரு மாடலுக்காக இந்த ரயில் பெட்டி. ஒவ்வொரு பகுதியிலும் ரயில்வே ஸ்டேஷன் என்பது நீச்சல் குளம் மாதிரிதான் இருக்கும். வழிநெடுக வீராணம் திட்டம் மாதிரி பெரிய பெரிய பைப்புகள் அமைக்கணும். கூடவே, ரயில் பெட்டிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யணும். உள்ளே தண்ணி புகுந்துவிடக்கூடாது.

132 பேர் பயணம் செய்யும்படி ஒரு திட்டத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றிருக்கிறேன். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நாம் பயணம் செய்யும் பாதை, அதாவது குழாய்... மேல் நோக்கி இருக்கும். அப்போதுதான் ஈர்ப்பு விசை அதிகமாகும்; வேகமாக பயணம் செய்யமுடியும். ஒரு கிலோமீட்டருக்கு ஒரு மீட்டர் உயரம் இருக்கவேண்டும். ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒவ்வொரு மீட்டர் உயரத்தை கூட்டிக்கொண்டே போனால் வேகம் அதிகரிக்கும். குழாய்கள் எப்படி வடிவமைக்கப்படவேண்டும், எந்த உலோகத்தால் தயாரிக்கப்படவேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையும் ஆராய்ந்து முடித்துவிட்டேன்.

நீச்சல் குளத்தில் இருந்து, பயணம் செய்ய இருக்கும் ரயில் பெட்டியை அப்படியே பெரிய டனல் குழாய்க்குள் அழுத்தவேண்டும். இதற்கு மட்டும்தான் எரிபொருள் செலவாகும். 132 பயணிகள் என்றால் கிட்டதட்ட 8 டன் எடை இருக்கிற ரயில் பெட்டியை தண்ணீருக்குள் மூழ்கி குழாய்க்குள் தள்ளிவிட ஒரு யுனிட் மின்சாரம் போதுமானது. அதன்பிறகு, ஈர்ப்பு விசைப்படி வேகமாக தண்ணீருக்குள் எந்த எரிபொருளுமே இல்லாமல் பயணிக்க ஆரம்பிக்கும் ரயில் பெட்டி. இதுபற்றி ரொம்ப விளக்கமாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எழுதி அனுப்பி இருந்தேன். திடீர்னு பத்து நாட்களுக்கு முன்னாடி அங்கிருந்து அழைப்பு. ஆச்சர்யத்தோட போனேன். மோடியோட பிரைவேட் செக்ரெட்டரி கைலாசநாதன்ங்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி வரவேற்றார். 'முதல்வருக்கு இந்த திட்டம் பிடிச்சிருக்கு. இங்குள்ள அதிகாரிகளோடு விவாதிக்கவேண்டும்' என்றார். அதன்படி, இருபதுக்கும் மேற்பட்ட உயர்அதிகாரிகள் குழுவை சந்தித்து விளக்கினேன். ஒரு கிலோமீட்டருக்கு பத்து கோடி ரூபாய் செலவாகும் என்று என் பட்ஜெட்டைச் சொன்னேன். அங்கிருந்த டிரான்ஸ்போர்ட் திட்ட அதிகாரி ஒருவர், ''இல்லை... இல்லை... இரண்டு மடங்கு ஆகும்'' என்றார். முடிவில், 'நல்ல திட்டம் மாதிரி தெரிகிறது. சோதனைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் செயல்படுத்திப் பார்க்கலாம். முதல்வரிடமும் இதுபற்றி சொல்கிறோம். முதல்வரை நீங்கள் சந்திக்கவேண்டும் காத்திருங்கள்' என்றார்கள். இந்த சமயத்தில், அகமதாபாத்தில் குண்டுவெடிப்புகள் நடந்துவிட்டதால் எல்லாமே தள்ளிப்போய்விட்டது. குண்டுவெடிப்பு நிகழாமல் இருந்திருந்தால், என் கண்டுபிடிப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கும்'' என்று வருத்தப்பட்டார் சீனிவாசன்.

எரிபொருள் செலவு இல்லாமல் ரயில் ஓடுவது ஆச்சர்யமான விஷயம்தான். சீனிவாசன் சொல்வதை யாராவது செவிகொடுத்துக் கேட்பார்களா என்று பார்ப்போம்!

- பா.ராஜநாராயணன்
படங்கள் பொன்.காசிராஜன்