ரவிக்குமார் எம்.எல்.ஏ.

பட்டினியே சிறந்த மருந்து!

'நோயற்ற வாழ்வே -குறைவற்ற செல்வம்' என்பது முது மொழி. இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருப்பது போலவே, நோயாளிகளும் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றாலும், வறுமைதான் அடிப்படை! வறுமை காரணமாக, பிறக்கும்போதே சத்துக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் நோயாளிகளாகவே வளர்கின்றனர். தம்முடைய குடிமக்கள் நோயாளிகளாக இருப்பதைப் பற்றி நம்முடைய அரசாங்கங்கள் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை.

இந்திய குடிமக்களின் வருமா னத்தில் கணிசமான பகுதி மருந்து வாங்குவதற்குத்தான் செலவிடப் படுகிறது. பொதுசுகாதார வசதிகள் மிகவும் குறைவாக இருக்கும் நம்முடைய நாட்டில் மருத்துவமனைகளும், மருந்து விற்பனையும் பெரும்பாலும் தனியார்கள் கையில்தான் இருக்கின்றன. அவர்கள்

வைத்தது தான் விலை, வாங்குவதுதான் கட்டணம். அதற்குமேல் இலவச இணைப்பாக கிட்னி திருட்டுப் போன்றவற்றிலும் தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுகின்றன என்பது தனிக்கதை.

மருந்து விலைகள் அண்மைக் கால மாக அதிகரித்தபடி இருக்கின்றன. விலைவாசி கூடும்போது மருந்து விலை மட்டும் அப்படியேவாஇருக்கும் என்று கேட்கப்படலாம். ஆனால், அது ஆகாயத்தில் பறக்கிறது என்பதுதான் நம்முடைய கவலை. இந்தியாவில் மருந்து விலைகளைக் கட்டுப் படுத்தும் தேசிய மருந்து விலைகள் கட்டுப்பாட்டு அமைப்பு, (என்.பி.பி.ஏ.) அதிகஅளவில் பயன்படுத்தப்படும் ஆறு மருந்துகளின் விலையை அண்மையில் உயர்த்தியிருக்கிறது. 'வைட்டமின் இ, ரானிடைடின், பாரா குளோரோல் மெட்டாக்சிலெனோல், மெட் ரோனைடோசோல்' முதலான மூல மருந்துகளைக் கொண்டு தான் பல்வேறு மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுமார் மூன்று சதவிகிதம் முதல் பன்னிரண்டு சதவிகிதம் வரை இந்த மருந்து களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெருமளவில் பயன்படுத்துகின்ற மருந்துகளின் விலைகள் சுமார் இருபது சதவிகிதம் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மருந்து விலை உயர்வதற்கு இங்குள்ள கம்பெனிகளோ, அரசாங்கமோ மட்டும் காரணம் அல்ல. உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ.) அறிவுறுத்தலின்படி இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தமே (ட்ரிப்ஸ்) இதற்கு முக்கியக் காரணம். அந்த ஒப்பந்தத்தின்படி, இங்குள்ள சட்டங்களைத் திருத்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக இந்திய அரசு அவற்றை மாற்றி அமைத்திருக்கிறது.

மருந்து விற்பனை என்பது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புரளுகின்ற மிகப்பெரும் தொழில். சர்வதேச அளவில் உருவாக்கப்படும் மருந்துகளின் காப்புரிமையை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங் கள், 'இந்திய மருந்து கம்பெனிகள் தங்களுடைய மருந்துகளைக் காப்பியடித்து விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன' என்று குற்றம் சாட்டுகின்றன. ஓர் மருந்தை மார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னால், அதற்கு முன்னால் பல நிலைகளில் அது பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும். இதை 'க்ளினிக்கல் டெஸ்ட்' என்பார்கள். அதில் பல படிநிலைகள் உள்ளன. ஆறு ஆண்டுகள் முதல் பத்தாண்டுகள் வரை அத்தகைய சோதனைகள் செய்யப்பட்டு, அதன்பின்னரே ஒரு புதிய மருந்து விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.

'தாங்கள் இப்படி பல்லாயிரம் கோடி டாலரை முதலீடு செய்து க்ளினிக்கல் டெஸ்ட்களை நடத்தி மார்க்கெட்டுக்குக் கொண்டுவரும் மருந்துகளை, எவ்வித சிரமமும் இல்லாமல் காப்பியடித்துப் பல இந்திய மருந்து கம்பெனிகள் விற்றுக்கொண்டிருக்கின்றன' என்பது பன்னாட்டு நிறுவனங்களின் குற்றச் சாட்டு!

ஹைதராபாத்தில் உள்ள 'நாட்கோ' என்ற நிறுவனம் 'ஃபைசர்' என்ற பன்னாட்டு நிறுவனம் தயாரித்துள்ள புற்றுநோய் மருந்தான 'சூடன்ட்' என்ற மருந்தைக் காப்பியடித்து விட்டது என்ற வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது. இதுபோல பல வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற கம்பெனிகளின் ஆராய்ச்சி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு எங்கள் மருந்துகளை அங்கீகரிக்க வேண்டும் எனக்கோருவது எந்த விதத் திலும் சரியாக இருக்காது என்பதே வல்லுனர்களின் கருத்து. பன்னாட்டு நிறுவனங்களைப்போல் ஆராய்ச்சியில் முதலீடு செய்ய வேண்டுமென்றால், இந்த அளவுக்கு மலிவாக மருந்துகளைக் கொடுக்க முடியாமல் போய்விடும் என்பது இந்திய கம்பெனிகளின் வாதம். இதில் பாதிக்கப்படுவது என்னவோ மருந்தை வாங்கிச் சாப்பிடுகிற அப்பாவி பொது மக்கள்தான். இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட எய்ட்ஸ் நோய்க்கான பதினெட்டு மருந்துகளை 2004-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.) தடை செய்தது இதற்கொரு உதாரணம்.

'உலக அளவிலான தரமதிப்பீடுகளை ஏற்றுக் கொள்வதோடு காப்புரிமைச் சட்டங்களையும், இந்திய மருந்து கம்பெனிகள் ஒப்புக்கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்துகிற பன்னாட்டு நிறுவனங்கள், அதற்காகப் பல்வேறு காரணங்களை எடுத்து வைக்கின்றன. காப்புரிமை மீறப்படுவதால்தான் இந்தியாவில் புதிய மருந்துகளை அறிமுகம் செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் தயங்குகின்றன. அதனால் இந்திய நோயாளிகள் பெருமளவில் அவதிப்படுகிறார்கள் என்பது அவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான வாதமாகும். இது ஏற்கத்தக்கதல்ல.

உலக அளவில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிற முக்கியமான மருந்துகள் யாவும் இந்தியாவிலும் ஏறக்குறைய அதே காலத்தில் விற்பனைக்கு வந்துவிடுகின்றன. இதில் தாமதம் எதுவும் ஏற்படவில்லை. உதார ணத்துக்கு மூட்டு வலி மருந்தான செலிக்கோஸிப், ரெஃபெக்கோஸிப் ஆகிய மருந்துகள் உலக அளவில் 1999-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டன. அதற்கு அடுத்த ஆண்டே அவை இந்தியாவில் 'சன் பார்மா' முதலிய கம்பெனிகளால் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. ஃபைசர் கம்பெனியால் 1998-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வயாக்ரா இந்தியாவில் ரான்பாக்ஸி, காடில்லா போன்ற கம்பெனிகளால் 2001-ல் விற்பனைக்கு வந்துவிட்டது. சர்க்கரை வியாதிக்கான ரோசிக்ளிட்டஸோன் மேலியேட் என்ற மருந்து உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே இரண்டாயிரமாவது ஆண்டில் இந்தியாவிலும் சன் பார்மா போன்ற கம்பெனிகளால் விற்பனைக்கு வந்து விட்டது. எனவே, புதிய மருந்துகள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது என்ற வாதம் பொய்யானதாகும்.

பன்னாட்டு நிறுவனங்களின் வாதத்தை ஏற்று காப்புரிமையைத் தீவிரப்படுத்தினால் மருந்து விலைகள் கன்னாபின்னாவென்று ஏறிவிடும் என்று இந்திய மருந்து கம்பெனிகள் கூறுகின்றன. உதாரணத்துக்கு, மேலே குறிப்பிடப்பட்ட சர்க்கரை நோய்க்கான மருந்து, அமெரிக்காவில் மாத்திரை ஒன்று மூன்று முதல் ஐந்து டாலர் வரை விற்கிறது. ஆனால், இந்தியாவிலோ பத்து மாத்திரை 35 ரூபாய்க்கு கிடைக்கிறது. செலிக்கோஸிப் மாத்திரை ஒன்று அமெரிக்காவில் மூன்று டாலர். இந்தியாவிலோ பத்து கேப்சூல்கள் கொண்ட ஸ்ட்ரிப் ஒன்று நாற்பது ரூபாய்க்கு கிடைக்கிறது. அதாவது அமெரிக்காவைவிட பத்து மடங்கு குறைவான விலையில் இவை இங்கே விற்கப்படுகின்றன என்று இந்திய கம்பெனிகள் கூறுகின்றன.

உலக வர்த்தக நிறுவனத் தின் நிபந்தனைகளுக்கேற்ப உள்நாட்டு சட்டத்தைத் திருத்துவதால், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் மருந்துகளின் விலை உயராது. அதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று இந்திய அரசின் சார்பில் சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல. இந்தியா போன்ற நாடுகளில் தொற்றுநோய்களால் ஏற்படும் பாதிப்பு அதிகம். அவற்றைக் கட்டுப்படுத்த ஆன்டிபயாடிக் மருந்துகள் அவசியம். அந்த மருந்துகளை அதிகம் உட்கொண்டால், அதற் கேற்ப நோய்க்கிருமிகள் தம்மைத் தகவமைத்துக் கொண்டுவிடும். அதன்பிறகு அதைவிட ஸ்ட்ராங்கான டோஸ் தேவைப்படும். இதனால் முதல் தலைமுறை ஆன்டிபயாடிக் மருந்துகள் இங்கே பயன்படாது. புதிய புதிய மருந்துகள் தேவைப்படும். உதாரணமாக, அமெரிக்காவில் தொண்ணூறு சதவிகித மக்கள், முதல் தலைமுறை ஆன்டிபயாடிக் மருந்துகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தியா விலோ அது பத்து சதவிகித மக்களின் நோய்களைக்கூட குணமாக்குவது இல்லை என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. எனவே, உலக வர்த்தக அமைப்புக்கு ஆதரவான இந்திய அரசின் அணுகுமுறை, சாதாரண மக்களின் தலையில் கைவைத்திருக்கிறது என்பதே உண்மை.

மத்திய அரசின் தாராளமயக் கொள்கை காரணமாகவே மருந்து விலைகள் ராக்கெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கின்றன. தற்போது இடதுசாரி கட்சிகளின் பிரேக்கும் இல்லாத நிலையில் இதைத் தட்டிக்கேட்பதற்குக்கூட ஆள் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக செயல் படுத்த முடியாமல் இருந்த மக்கள் விரோதத் திட்டங்களை எல்லாம் அவசர அவசரமாக இனி மத்திய அரசு செயல் படுத்தும். வரும் காலங்களில் இன்னும் மருந்து விலை பலமடங்கு அதிகரிக்கும். அரசு மருத்துவமனைகளிலும் வைத்தியம் பார்க்க முடியாமல், தனியார் மருத்துவ மனைகளுக்குச் செல்லவும் காசு இல்லாமல் இந்திய பொதுஜனம் நோயில் மடிவது தவிர வேறுவழி கிடையாது.

'பட்டினியே சிறந்த மருந்து' என்று இந்தியாவில் ஒரு முது மொழி உண்டு. அதை நினைத்து நாமெல் லாம் ஆறுதல் அடைய வேண்டியதுதான்!