பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக் கத்தை வென்று இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த் திருக்கிறார் அபினவ் பிந்த்ரா!

பத்து மீட்டர் 'ஏர் ரைஃபிள்' துப்பாக்கிச் சுடும் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் தனிநபர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் அபினவ் பிந்த்ராதான். ஏற்கெனவே ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக்ஸில் ரத்தோர் பெற்ற வெள்ளிப் பதக்கமே இதுவரை சாதனை யாகக் கருதப்பட்டது. அதை அபினவ் முறியடித்திருக்கிறார்.

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஹாக்கி விளையாட்டில் எட்டு முறை இந்தியா

தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறது என்றாலும், தனிநபர் போட்டிகளில் இதுவரை தங்கம் வென்றதில்லை என்பது முக்கியமான விஷயம்.

வசதியான குடும்பத்தில் பிறந்த அபினவ், இதற்கு முன்பே பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றிருக்கிறார். ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

1982 செப்டம்பர் மாதம் 28-ம் தேதி பிறந்த அபினவ், பதினைந்தாவது வயதிலேயே காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டவர். 2001-ம் ஆண்டு மியூனிச் நகரில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்தார்.

அபினவ்வின் தாத்தா இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர்.

''தாத்தா ராணுவத்தில் இருந்ததால் வீட்டில் துப்பாக்கிகள் இருந்தன. சிறுவயதிலேயே அவற்றின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டானது. துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அப்போதே உருவானது. எங்கள் குடும்பம் சண்டிகருக்கு இடம் பெயர்ந்தபோது அங்கே துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சேர்ந்தேன். கர்னல் தில்லான் என்பவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் மூலமாகத்தான் இந்தப் போட்டியின் அடிப்படைகளை நான் கற்றுக்கொண்டேன்'' என்கிறார் அபினவ் பிந்த்ரா.

ஒலிம்பிக்ஸ் போட்டியில் அபினவ் கலந்துகொள்ள முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. காரணம், அவர் கடுமையான முதுகு வலியால் அவதிபட்டுக் கொண்டிருந்தார். இப்போது தங்கப் பதக்கத்தை வென்றுவிட்ட நிலையில், ஜெர்மனிக்கு சென்று அங்குள்ள டாக்டர்களிடம் முதுகு வலிக்கு சிகிச்சை பெற அபினவ் திட்டமிட்டிருக்கிறார்.

2002-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றபோது, பஞ்சாப் மாநில அரசாங்கம் அவரை சரியாகக் கௌரவிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. அதைப்பற்றி அபினவ் கவலைப்படவில்லை. ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே தன்னுடைய லட்சியம் என்று அப்போதே உறுதியாக அறிவித்திருந்தார். அது இப்போது ஈடேறிவிட்டது.

''இந்தப் பதக்கத்தை வெல்வதற்கு கடைசி ஷாட்டில் 10.4 பாயின்ட்கள் அவருக்குத் தேவையாக இருந்தது. ஆனால், அவரோ 10.7 பாயின்ட்களைப் பெற்று தங்கத்தைக் கொய்துவிட்டார். இதற்காக அவர் கடுமையாக உழைத்தார்'' என்று அவரைப் பாராட்டியிருக்கிறார், தேசிய பயிற்சியாளரான பேராசிரியர் சன்னிதாமஸ்.

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கும்போது இந்த முறையாவது இந்தியா 'ஒரு பதக்கம் பெறுகிற நாடு' என்ற அவப்பெயரிலிருந்து மீளுமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருந்தது. அபினவ் பிந்த்ரா வென்றுள்ள இந்தத் தங்கப் பதக்கம் ஒரு தொடக்கமாக இருக்கட்டும். இம்முறை யாவது இந்தியா ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்லட்டும். கங்கிராட்ஸ் அபினவ்!