உச்சத்தில் கச்சா..!

லாபத்தில் அமெரிக்கா...

எம்.ஏ.ஜவஹர்

சென்ற இதழ் தொடர்ச்சி....

தனக்கு சாதகம் ஏற்படவில்லையென்றால் ஒரு விஷயத்தை அமெரிக்கா எப்படியெல்லாம் கையாளும் என்பதற்கு சில சாட்சிகளைப் பார்க்கலாம். இவை கச்சா எண்ணெய் விலை விவகாரத்தில் அமெரிக்க பங்கின் சூட்சுமத்தை நமக்கு உணர்த்தும்...

சாட்சி-1

எகிப்து, தன் வசம் இருந்த சூயஸ் கால்வாயை 1956-ல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தக் கூடாதென தடைவிதித்தது. தன்னுடைய எதிரி நாடான இஸ்ரேலை அவை ஆதரித்ததால் எகிப்து இந்த முடிவை எடுத்தது. இதன் மூலம் அமெரிக்காவின் வர்த்தகக் கப்பல்கள் சூயஸ் கால்வாயை சுற்றிக்கொண்டு, ஆப்ரிக்கா வழியாகப் பயணம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால், தனக்கு வர்த்தக ரீதியாக ஏகப்பட்ட கால விரயமும் பொருள் விரயமும் ஏற்படும்

என கணக்குப் போட்ட அமெரிக்கா, சூயஸ் கால்வாயில் தடுப்பாக எகிப்து நிறுத்தியிருந்த கப்பலை, தன்னுடைய கூட்டு நாடுகளின் படை மூலம் தகர்த்து கால்வாயைத் திறந்தது.

உள்ளுக்குள் வர்த்தக லாபத்தை வைத்துக்கொண்டு வெளியில், 'நீர்நிலை வழிப்பாதைகளை போக்குவரத்துக்குப் பயன்படுத்த யாரும் தடையாக இருக்கக்கூடாது' என்ற கொள்கை முகமூடியை அணிந்துகொண்டது அமெரிக்கா. இதற்காக அமெரிக்கா கையாண்ட அதிகாரபோக்கு, உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா மீது பயம் கொண்டு பார்க்க வைத்தது.

சாட்சி-2

1973... அப்போது வளைகுடா நாடு களின் ஒற்றுமை இப் போதைவிட அதிகம். அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த 'யாம் கிபூர்' யுத்தத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தங்களின் செல்லப் பிள்ளையான இஸ்ரேலை ஆதரித்தன. இதைக் கண்டித்து பெட்ரோல் உற்பத்தி செய்யும் அத்தனைவளைகுடா நாடுகளும் அமெரிக்காவுக்கு பெட்ரோல் சப்ளை செய்வதை நிறுத்திவிட்டன. 'சொட்டு பெட்ரோலைக்கூட அமெரிக்காவுக்கு கொடுக்க மாட்டோம்' என ஒட்டுமொத்தமாகத் தீர்மானம் போட்டன. இதனால் அமெரிக்காவில் விமானங்கள், வாகனப் போக்குவரத்து போன்றவை கடும் நெருக்கடிக்குள்ளானது. பெட்ரோல் விலை பல மடங்கு அதிகரித்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸனுக்கோ கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இனி ஒருபோதும் இப்படிப்பட்ட நிலை ஏற்படக்கூடாது என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா அப்போதுதான் வளைகுடாவுக்குள் தன் வலையை விரிக்க ஆரம்பித்தது.

இதற்குப் பின்னர் 1978-ல் நடந்த ஈரான்-ஈராக் யுத்தமும் அமெரிக்கா ஏற்படுத்தியதுதான். 1993-ம் ஆண்டு குவைத்தை ஈராக் ராணுவம் கைப்பற்றும் வரை விட்டுவிட்டு பின்பு, இதையே காரணம் காட்டி மற்ற அரபுநாடுகளை தன் வசம் கொண்டுவந்தது அமெரிக்கா. இதையடுத்து ஈராக் படைகளை விரட்டுவதாகக் கூறி குவைத்துக்குள் நுழைந்த அமெரிக்கா, அங்குள்ள எண்ணெய்க் கிணறுகளை தன் வசம் கொண்டுவந்தது. இன்று மத்திய வளைகுடா எண்ணெய்நாடுகள் அனைத்துமே (ஈரான் தவிர) தவிர்க்க முடியாமல் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர் களாகிவிட்டன.

சமீபத்தில், 'பிரிட்டிஷ் சீக்ரெட் சர்வீஸ்' என்ற அமைப்பு தான் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்த ரகசிய ஆவணங்களை, 'இனிமேல் காக்கவேண்டாம்' என கருதி வெளியிட்டது. அதில் ஒன்றுதான் 70-களில் சவூதி அரேபியாவையும் குவைத்தையும் அமெரிக்கா மிரட்டியதைப் பற்றிய ஆவணம்.

அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன் சவூதி அரே பியா, குவைத் நாட்டு ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து, 'அமெரிக்காவுக்கு பெட்ரோல் சப்ளை பண்ணுவதற்கான கட்டுப்பாடுகளை உடனே நீக்கி எங்களுக்கு சாதகமாக நடக்காவிட்டால்... உங்கள் நாட்டின் ஆட்சியையே மாற்றி எங்களுக்கு சாதகமான ஆட்சியை நிறுவ நேரிடும். அல்லது எங்களுடைய ராணுவம் மூலம் உங்களுடைய எண்ணெய் வயல்களைக் கைப்பற்றவும் தயங்கமாட்டோம்' என மிரட்டியுள்ளார் என அந்த ஆவணம் கூறுகின்றது.

சாட்சி-3

இதேபோல, சமீபத்தில் உணவுப் பொருட்களின் விலை உலகச் சந்தையில் தாறுமாறாக உயர்ந்தபோது அமெரிக்கா, தன்னுடைய நேச நாடான ஜப்பானுடன் சேர்ந்து ஐ.நா-வில் ஒரு மாதிரித் தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது.

அதாவது, உணவு ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகள் உணவு ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். அதோடு, இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதால்தான் உலக அளவில் உணவு விலை உயர்ந்துவிட்டதாக கேலி பேசினார் புஷ். உணவு விலை உயர்ந்தால் மட்டும் அதை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா நிர்ப்பந்தம் கொடுக்குமாம். ஆனால், பெட்ரோல் விலையை நாளுக்கு நாள் உயர்த்தும் அமெரிக்காவை யாரும் கேட்கக்கூடாதாம்! தன்னுடைய சுயநலம் பாதிக்கப்படுமானால், அமெரிக்கா எந்த அளவுக்கு தீவிரமாக நிலைமையைச் சீர்செய்ய முயலும் என்பதற்கு இந்த மூன்று சாட்சியங்களே போதுமானது.

இன்றைய விலையேற்றத்தில் அமெரிக்காவுக்கு என்ன லாபம்?

உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் மக்கள் தொகை சுமார் ஐந்து சதவிகிதம்தான். ஆனால், உலக பெட்ரோல் பயன்பாட்டில் அது சுமார் 24 சதவிகிதத்தை விழுங்குகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அமெரிக்கா, தன் நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களில் பெரும்பாலானவற்றை இன்று வரையில் பயன்படுத்தவே இல்லை என்பதுதான்! மற்ற நாடுகளில் தன்னுடைய கம்பெனிகள் மூலம் வளைத்துப்போட்ட பெட்ரோலியத்தையே இதுநாள் வரை உபயோகப்படுத்துகிறது. அதோடு, எண்ணெய் விலை உயர்வு மூலம் கொள்ளை லாபம் பார்த்துவருகிறது. வளைகுடா நாடுகளைத் தவிர நைஜீரியா, அல்ஜீரியா, அங்கோலா போன்ற நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்களை அமெரிக்க கம்பெனிகள் கூட்டு ஒப்பந்தம் என்கிற பெயரில், 'நான் எண்ணெய் எடுத்துத் தருகிறேன்' என்று வளைத்துவிட்டன. இதன் மூலம் உலக எண்ணெய்வளத்தில் சுமார் 25 சதவிகிதம் பங்குகள் அமெரிக்க கம்பெனிகளிடம் இருக்கின்றன. தொழில்நுட்பத்தைக் கொடுப்பது, பதிலுக்கு ஷேர் வாங்கிக் கொள்வது என்பதுதான் அமெரிக்காவின் வியாபாரத் திறன்!

உதாரணத்துக்கு அமெரிக்காவின் 'எக்ஸான் மொபில்' (EXXON-MOBIL) என்ற ஆயில் கம்பெனி வசம் மட்டும் உலகில் 21 நாடுகளில் எண்ணெய்வயல்கள் உள்ளன. அதிர்ச்சி அடையாமல் இந்தத் தகவலைப் படியுங்கள். உலகில் மிக அதிகமாக பெட்ரோல் தயாரிக்கும் நாடான சவூதி அரேபியா, ஒரு நாளைக்கு 10 மில்லியன் பேரல் எண்ணெய் தயாரிக்கிறது. ஆனால், அமெரிக்காவின் பல கம்பெனிகளில் ஒன்றான எக்ஸான்-மொபில் கம்பெனியின் எண்ணெய் தயாரிப்பு பங்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா? 6.8 மில்லியன் பேரல். உலகிலேயே அதிகமான எண்ணெய் தயாரிக்கும் சவூதியைவிட கொஞ்சம்தான் குறைவு. அமெரிக்காவின் ஒரு கம்பெனியே இப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த கம்பெனி கடந்த வருஷம் அமெரிக்க அரசுக்கு கட்டிய வரி மட்டும் சுமார் 32 பில்லியன் டாலர். அதன் கடந்த வருஷ லாபம் மட்டும் சுமார் 100 பில்லியன் டாலர். இந்த வருமானமெல்லாம் வெறும் கச்சா எண்ணெய்க்கு மட்டும்தான். அதை சுத்திகரிப்பு செய்யும்போது கிடைக்கும் உபரி பொருட்களால் வரும் வருமானம் தனி!

இதுபோல 'செவ்ரான்க்ராப்,' 'கோங்கோபிலிப்ஸ்' என இன்னும் பல அமெரிக்க கம்பெனிகளும் உலக எண்ணெய் மார்க்கெட்டை தங்கள் கையில் வைத் திருக்கின்றன. இவை அமெரிக்க அரசாங்கத்துக்கு வருஷத்துக்கு மொத்தம் 100 பில்லியன் டாலர் வரை வரி கட்டுகின்றன. வரியே இவ்வளவு என்றால் வருமானம் எவ்வளவு இருக்கும்? இந்த இடத்தில் ஓப்பீட்டளவில் பார்க்கப் போனால், அமெரிக்க ஆயில் கம்பெனிகள் மட்டும் ஆண்டுக்கு கட்டும் வரிப்பணம் இந்திய அரசின் 70 சதவீத மொத்த வருமானம். அதாவது, அந்த கம்பெனிகள் வரியாக செலுத்தும் சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் என்பது, இந்தியாவின் ஒருவருட பட்ஜெட்டான ஏழு லட்சம் கோடியில் சுமார் எழுபது சதவீதத்துக்கும் அதிகம்.

இதனால்தான், வளைகுடா நாடு களில் அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துவதோடு எண்ணெய் உற்பத்தி குறைவது மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தி மொத்த எண்ணெயையும் தன்னுடைய கம்பெனிகளின் பகாசுர உதடுகளால் உறிஞ்சிக் கொள்கிறது அமெரிக்கா. விலை உயர்ந்தால் கொள்ளை லாபம் அடைவது அமெரிக்க கம்பெனிகள்தானே... அதனால் உயர்வது அமெரிக்க பொருளாதாரம்தானே! அதனால்தான், கடந்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் ஒரு பேரல் 28 டாலரிலிருந்து 146 டாலராக உயர்ந்திட அது வழி செய்திருக்கிறது.

உலகில் எந்த இடத்தில் பெட்ரோல் விலை உயர்ந்தாலும் அதன் லாபத்தில் ஒருபகுதி அமெரிக்காவுக்குத்தான் கிடைக்கிறது. இதுதவிர, வளைகுடா நாடுகளுக்குக் கிடைக்கும் லாபம் முதலீடாக எங்கே போகிறது தெரியுமா? பெட்ரோலியம் மூலம் வருஷத்துக்கு 360 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டும் சவூதி அரேபியா, இதில் பெரும்பகுதியை அமெரிக்க வங்கிகளிலும், கம்பெனிகளிலும்தான் முதலீடு செய்துவருகிறது. ஆக மொத்தத்தில் பெட்ரோல் விலை உலகத்தில் எங்கே உயர்ந்தாலும் அதன் மூலம் கணிசமான லாபம் அமெரிக்காவுக்குத்தான்.

'எண்ணெய் விலை ஏற்றத்தால் அமெரிக்க மக்களும்கூட அதிக விலை கொடுத்துத்தானே வாங்க வேண்டி இருக்கிறது?' என்று சிலர் கேட்கலாம். எந்தவொரு நாடும் கொள்கை முடிவெடுத்து செயல்படும்போது, ஒட்டுமொத்த நலனைத்தான் பார்க்குமே தவிர, தனிப்பட்ட மனிதர்களின் சாதக - பாதகங்களை சிந்திக்காது. இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் அமெரிக்காவும் அப்படித்தான்!

எண்ணெய் லாபிக்கு எதிராக உணவு லாபி!

சோவியத் ரஷ்யா என்ற வல்லரசு இருந்திருந்தால் அமெரிக்காவின் நாடுபிடிக்கும் குறுக்கு வழிமுறைகளும் அதன் மூலம் தன்னுடைய பொருளாதாரத்தை மட்டும் வலுப்படுத்திக்கொள்ளும் தந்திரங்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். கேட்க ஆள் இல்லாமல் கோயில் காளை போல அலையும் அமெரிக்காவுக்கும் ஒபெக்குக்கும் இந்தியா நினைத்தால் பாடம் புகட்டலாம். உலகத்தில் அமெரிக்கா எப்படி ஒபெக் நாடுகளை வைத்து எண்ணெய் லாபி பண்ணுகிறதோ, அதுபோல இந்தியாவும் உணவை ஏற்றுமதி செய்யும் தாய்லாந்து, பிலிபைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளை வைத்துக் கொண்டு உணவு லாபி பண்ணலாம். அதாவது, உணவு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சொல்லிக்கொள்ளும் (தன்னிறைவு) நிலையில் உள்ள இந்தியா தன் தலைமையிலேயே உணவு ஏற்றுமதி நாடுகளை ஒருங்கிணைத்து எண்ணெய் விலை உயர்ந்தால் உணவு விலையும் உயரும் என்ற கடிவாளத்தைப் போட்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு முட்டுக் கட்டை போடலாம். பெட்ரோல் முக்கியமா, பூவா முக்கியமா என்ற விவாதம் வரும்போது பூவாவுக்கு முக்கியத்துவம் தானாக வந்துவிடும். இதனை உலக நாடுகளுக்கு இந்தியா புரியவைக்க வேண்டும். ஆசியாவிலேயே தன்னை ஒரு பெரும் சக்தியாக வளர்த்துக் கொள்ள ஆசைப்படும் இந்தியா, இது போன்ற விஷயங்களில் முன்னின்று சில காரியங்களைச் செய்துதான் ஆக வேண்டும். இதற்காக உணவு உற்பத்தியில் பெரிய அளவில் ஈடுபட்டுக் கொண் டிருக்கும் நாடுகளை வைத்து ஒபெக் போன்றதொரு கூட்டமைப்பைகூட ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்போதுதான் பெட்ரோல் விலை உயர்வில் அமெரிக்கா திட்டமிட்டு செய்து கொண்டிருக்கும் சூட்சுமங்களை உடைத்தெறிவதோடு, கச்சா எண்ணெய் விலை உயர்வு என்ற கடிவாளத்திலிருந்து இந்தியா தப்பிக்க முடியும்.