Published:Updated:

'உங்களுக்கு அப்பா, அம்மா வெச்ச பேரே துரைமுருகன்தானா?'

'உங்களுக்கு அப்பா, அம்மா வெச்ச பேரே துரைமுருகன்தானா?'
'உங்களுக்கு அப்பா, அம்மா வெச்ச பேரே துரைமுருகன்தானா?'

'உங்களுக்கு அப்பா, அம்மா வெச்ச பேரே துரைமுருகன்தானா?'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'உங்களுக்கு அப்பா, அம்மா வெச்ச பேரே துரைமுருகன்தானா?'

துரைமுருகன் என்றாலே அவர் அடிக்கும் கிண்டல், கேலிகளுக்கு பஞ்சம் இருக்காது. சட்டமன்றம் ஆகட்டும், கட்சி பொதுக்கூட்டம் ஆகட்டும் டைமிங்கும், ரைமிங்குமாக  போட்டு தாக்கும் துரைமுருகனின் பேச்சுக்கு திமுக தொண்டர்களிடம் எப்பவுமே மாஸ்தான். அதேப்போன்றுதான் அவர் கொடுக்கும் பேட்டியும்.

இந்த வார ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இடம்பெற்றுள்ள சில கேள்வி - பதில்கள் இங்கே....

உங்களுக்கு அப்பா, அம்மா வெச்ச பேரே துரைமுருகன்தானா?

''அப்பா வெச்ச பேரு முருகன்தான். என் ஊர் காங்குப்பம். அப்பா பேர் துரைசாமி. இரண்டையும் இனிஷியல் ஆக்கினா இங்கிலீஷ்ல 'K.D.Murugan' -னு வந்துச்சு. அப்பா பேரை மட்டும் வெச்சுக்கலாம்னு பார்த்தா, 'து.முருகன்’னு இடக்கா இருந்துச்சு. 'எதுக்குடா வம்பு?’னு 'துரைமுருகன்’னு நானே பேரை மாத்திக்கிட்டேன். ஆக, முருகன்தான் என் இயற்பெயர். ஏன், அதுல எதுவும் பிரச்னையா உங்களுக்கு?!''

கடைசியா எந்த சினிமா பார்த்தீங்க?

''கொஞ்ச நாள் முன்னாடி ஒரு படம் பார்க்கப் போனேன். பேர்கூட ஞாபகம் இல்லை. ஒரே சத்தம். முடியலை! இப்போலாம் டி.வி-யில சீரியல்கூடப் பார்க்கிறது இல்லை. தலைவர்கூட இருந்தா 'ரோமாபுரி பாண்டியன்’ பார்ப்பேன்... அவ்வளவுதான்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு