'விருது' கிருஷ்ணம்மாளின் வியப்புப் பயணம்!

''நீங்க காந்தியை பார்த்திருக்கீங்களா?''

சேவைக்கான மாற்று நோபல் பரிசு, அமெரிக்க சியாட்டில் பல்கலைக்கழகத்தின் 'ஓபஸ்' எனும் உயரிய விருது ஆகியவற்றைத் தன்னுடைய தொண்டுக்கான அங்கீ காரங்களாக சூடிக்கொண்டு மீண்டும் தன் கூட்டுக்கே வந்து சேர்ந்திருக்கிறது கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் என்ற கிராமத்துப் பறவை.

திருவாரூர் அருகே உள்ள கீழ்வெண் மணி கிராமத்தில் அரைப்படி அதிகக் கூலி கேட்டதற்காக ஆண்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட 44 பேரை 1968-ல் ஒரே குடிசைக்குள் அடைத்து கொளுத்திக் கொன்றனர் முதலாளித்துவ மூர்க்கர்கள். தமிழகத்தையே அதிரவைத்த இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு, மதுரையில் இருந்து திருவாரூர் வந்து

அப்பகுதியில் இருக்கும் ஏழைகளுக்காக பாடுபடத் தொடங்கினார் கிருஷ்ணம்மாள். அந்த சேவைக்கான உலக கௌரவம்தான் அவர் தற்போது வாங்கியிருக்கும் விருதுகள்.

அமெரிக்கா, ஸ்வீடன் பயணங்களை முடித்துவிட்டு கடந்த டிசம்பர் 10-ம் தேதி இந்தியா திரும்பி இருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனிடம் பயணம் குறித்துக் கேட்டோம்.

''அமெரிக்க ஏர்போர்ட்லேயே ஏகப் பட்ட தமிழர்கள், அமெரிக்கர்கள் வந்து என்னை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. முதல்ல பாஸ்டன் என்ற இடத்துல இருக்கிற ராம்தத்தா என்பவர் வீட்டுல தங்கி இருந்தேன். காந்திஜியைப் பத்தி அங்கே நான் பேச ஏற்பாடு செஞ்சிருந்தாரு. அந்தக் கூட்டத்துல பேசின பிறகு, காந்தியக் கொள்கையில் ஈடுபாடுகொண்ட சகோதரி ஜென்னிலேட் என்பவர், நார்த் ஆம்ப்டன் நகர்ல ஒரு கூட்டத்துல என்னை பேசக் கூப்பிட்டாங்க. ஏகப்பட்ட அமெரிக்கர்கள் கலந்துகிட்ட அந்த மீட்டிங்ல நான் பேச ஆரம்பிக்கும்போது, 'நீங்க காந்தியைப் பாத்திருக்கீங்களா?'னு கேட்டாங்க. 'பார்த்திருக்கேன்'னு சொன்னேன். பிறகு நான் காந்தியைப் பத்தி பேசினதைக் கேட்டு, 'இவ்வளவு நல்லவரா'ங்குற ஆச்சர்யத்தோட அழுதுட்டாங்க.

ஒரு சில இடத்துல, 'தீவிரவாதம் பெருகிக் கிடக்குற இந்த காலத்துலயும் காந்திய வழி எடுபடுமா?'னுகூட கேட்டாங்க. காந்தி வன்முறைய எப்படி அஹிம்சையால ஜெயிச்சார்னு நான் விளக்கமாச் சொன்னேன். நிறைய தமிழர்கள் எனக்கு உதவினாங்க. நவம்பர் 16-ம் தேதி சியாட்டில் யுனிவர்சிட்டிக்குப் போனேன். அங்கே ரெண்டு நாள் மாணவர்களிடம் நம்முடைய சேவை களைப் பற்றி விளக்கிப் பேசினேன். 'நல்ல நோக்கத்தோட மக்களுக்கு சேவை செய்ற உங்களுக்கு ஓபஸ் விருதைக் கொடுப்பதன் மூலமாக எங்கள் மாணவர்களுக்கு, நாமும் இதுபோல் மக்களுக்கு சேவை செய்து அவார்டு வாங்க வேண்டும்ங்குற எண்ணம் உருவாகும்'னு அங்க இருந்த பேராசிரி யர்கள் சொன்னாங்க. 17-ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில என்னுடைய வாழ்க் கையை பரத நாட்டியமா நடிச்சு காமிச்சாங்க. அதை ஆயுசு பூரா மறக்க மாட்டேன்.

நான் அங்க இருந்த 40 நாட்களில் 150 இடங்களில் காந்தியைப் பற்றி பேசியிருக்கிறேன்...'' என அமெரிக்க அனுபவங்களை அசை போட்ட கிருஷ்ணம்மாள், தன்னுடைய ஸ்வீடன் பயண அனுபவம் பற்றி, ''அந்த நாட்டுல ரொம்பக் குளிரா இருந்ததால அதிகமா வெளியில போக வர முடியல. அவார்டு கொடுக்கும்போது, அந்த நாட்டு பார்லிமென்ட் உறுப்பினர்கள் ஒவ்வொருவருத்தரும் எங்கிட்ட ரொம்ப நேரம் பேசிக் கிட்டிருந்தாங்க. இரண்டு நாட்டு பயணத்தை முடிச்சுட்டு இப்ப மறுபடியும் என்னோட அம்மா மடிக்கே வந்துட்டேன். வழக்கமான வேலைகள் நிறைய இருக்கு...'' என்றார்.

சேவை உணர்வையும், காந்தியக் கொள்கைகளையும் உலகத்துக்கு இன்னொரு தடவை உரக்கச் சொல்லிவிட்டு வந்த அந்தத் தாயுள்ளத்துக்கு ஜூ.வி-யின் பல லட்சம் வாசகர்கள் சார்பாக அன்பைத் தெரிவித்துவிட்டு வந்தோம்.

- வீ.மாணிக்கவாசகம்