ரவிக்குமார் எம்.எல்.ஏ.

பயன் தருமா பயிர் காப்பீட்டுத் திட்டம்?

'தரைமேல் பிறந்து தண்ணீரில் மிதக்கும் நிலைமை மீனவர்களுக்கு மட்டும்தான்!' என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மக்கள் தண்ணீரில்தான் மிதந்தார்கள். வாகனங்கள் சென்ற சாலைகளில் படகுகள் மூலம்தான் பயணம் செய்யவேண்டியிருந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் காணாத அபரிமிதமான

வெள்ளத்தால் தமிழகம் நிலைகுலைந்து போயிருக்கிறது. தற்போது வெள்ளம் வடிந்தாலும், அது ஏற்படுத்திவிட்டுச் சென்ற அவலங்கள் இன்னும் குறையவில்லை! தமிழக அரசு நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாது. இதற்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களின் துணைக்குழு அமைக்கப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதலமைச்சர் நேரடியாக இதில் அக்கறை எடுத்துக்கொண்டு, அவ்வப்போது உரிய ஆணை களைப் பிறப்பித்து வருகிறார். வெள்ள நிவாரணம் வழங்குவது பற்றிய மத்திய அரசின் உத்தரவுகளில் குறிப்பிட்டிருப்பதை விடவும் அதிகமாக நிவாரணம் வழங்குவதற்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று, உடனடியாக அவற்றை வழங்குவதற்கும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். ஆனாலும்கூட பாதிக்கப் பட்டவர்கள் மேலும் நிவாரணம் வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். குறிப்பாக, விவசாயிகள் தங்க ளுக்கு வழங்கப்படும் நிவாரணம் போதாது என்று முறையிடுகிறார்கள். அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், தமிழக முதல் வரோ அதை ஏழாயிரத்து ஐந்நூறு என உயர்த்தி வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். அப்படியிருந்தாலும்கூட, தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்தை ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகவும் குறைவு என்பதே விவசாயிகளின் கருத்து. அதைத்தான் இடதுசாரிக் கட்சிகள் எடுத்துச்சொல்கின்றன. ஏக்கர் ஒன்றுக்கு நெல் பயிரிடுவதற்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய் செலவாகிறது என வைத்துக்கொண்டாலும், ஹெக்டேருக்கு இருபத்தைந்தாயிரம் செலவு பண்ணவேண்டும். விளைச்சலால் வரும் லாபத்தைத் தள்ளினாலும்கூட, போட்ட முதலில் கொஞ்சமாவது கிடைத்தால்தான் விவசாயி பிழைக்க முடியும். இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவு செய்த விவசாயிக்கு ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் நிவாரணம் என்பது போதுமானதல்ல. ஆனால், இதில் மாநில அரசு அதிகமாக எதுவும் செய்யமுடியாத நிலை! ஏனென்றால், 'பேரிடர் நிவாரண நிதி'யில் எழுபத்தைந்து சதவிகிதத்தை மத்திய அரசும், இருபத்தைந்து சதவிகி தத்தை மாநில அரசும் கொடுக்கின்றன. நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டுதலை மத்தியஅரசுதான் உருவாக்கித் தந்துள்ளது. அப்படியிருக்கும்போது, மாநில அரசு தன்னுடைய இஷ்டம்போல நிவா ரணத்தை உயர்த்தித் தருவது சாத்தியமில்லை. சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். இதை இடது சாரி கட்சிகள் உணரவேண்டும்.

தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பேரிடர் நிவாரண நிதிக்கான வழிகாட்டுதல்களில் இன்றைய விலைவாசிக்கு ஏற்ப, திருத்தம் செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினால்... நிச்சயம் பலன் கிடைக்கும். தமிழக அரசும் இந்த உண்மையை எடுத்துச்சொல்லி, தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இதற்காகக் குரல் எழுப் பும்படி கேட்கவேண்டும்.

பேரிடர் நிவாரண நிதியின் விதிகளில் திருத்தம் செய்தாலும்கூட, விவசாயிகளின் துயர் முழுவதுமாகத் தீர்ந்துவிடும் எனச் சொல்லமுடியாது. ஏனென்றால், நிவாரணம் என்பது ஓர் உதவிதானே தவிர, விவசாயி களின் மொத்த இழப்பையும் ஈடுகட்டுவதற்கான ஓர் ஏற்பாடு அல்ல. அப்படியானால், விவசாயிகளின் நிலைதான் என்ன என்ற கேள்வி நமக்கு எழும். இதற்காகத்தான் 'பயிர் இன்ஷுரன்ஸ் திட்டம்' இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தான் விவசாயிகளுக்கு ஓரளவுக்காவது நிம்மதி தரக்கூடியது. ஆனால், இந்தத் திட்டத்தைப் பற்றி விவசாயிகளுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை என்பதுதான் சோகம். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டு விவசாயிகள் இந்தத் திட்டத்தை அவ்வளவாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

தேசிய வேளாண்மைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு விவசாயிகள் பயிர் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த மே மாதம் வரை தமிழ்நாட்டில் சுமார் பத்து லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பதிந்திருக்கிறார்கள். சுமார் இரண்டே முக்கால் லட்சம் விவசாயிகள் பயனடைந் திருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், இது நமக்கு அருகிலுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில நிலவரத்தைப் பார்த்தால், மிகமிகக் குறைவு என்பது புலனாகிறது! ஆந்திராவில் ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவிலோ அது எழுபத்தெட்டு லட்சமாக இருக்கிறது. பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கையும்கூட அங்கெல்லாம் மிகமிக அதிகம். ஆந்திராவில் முப்பத்தோரு லட்சம் பேரும், கர்நாடகாவில் முப்பத்து நான்கு லட்சம் விவசாயிகளும் இந்தத் திட்டத்தால் பயனடைந்திருக்கிறார்கள். ஆக, ஆந்திர மாநிலத்தில் இருப்பதில் பத்தில் ஒரு பங்குகூட தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் செயல் படுத்தப்படவில்லை!

பயிர் இன்ஷுரன்ஸ் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகத்தான் தமிழக அரசு தெரிவிக்கிறது. முந்தைய ஆட்சிக்காலத்தில் இந்த இன்ஷுரன்ஸ் திட்டத் தில் பயிர்க் கடன் வாங்கிய விவசாயிகள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் கடன் பெறாத விவசாயிகளுக்கும்கூட இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அது மட்டுமின்றி, இப்படி இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும் விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரீமியம் தொகையில் பாதியைத் தமிழக அரசே மானியமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2006-07-ம் ஆண்டில் இதற்காக எட்டு கோடி ரூபாயும், அதற்கடுத்த ஆண்டில் பதினைந்து கோடி ரூபாயும், நடப்பு ஆண்டுக்கு நாற்பது கோடி ரூபாயும் இதற்கெனத் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இருபத்தைந்து லட்சம் விவசாயிகளை இந்தத் திட்டத்தில் சேர்ப்பதென தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அது எட்டப்படுமா என்பது தெரியவில்லை!

பயிர் இன்ஷுரன்ஸ் திட்டம் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படாததற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இங்குள்ள பொதுத் துறை வங்கிகள் பயிர்க் கடன்களை வழங்குவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே வழங்கினாலும், பயிர் இன்ஷுரன்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதில்லை. பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள், நகைக்கடன்களை விவசாயக் கடன்களாகக் காட்டி ரிசர்வ் வங்கியை ஏய்த்து வருகின்றன. கடனுக்கு ஈடாக நகை இருப்பதால், பயிர் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கச்சொல்ல வேண்டிய தேவை வங்கிகளுக்கு ஏற்படுவதில்லை. அது மட்டுமின்றி, நான்கு சதவிகித வட்டியில் குறிப்பிட்ட அளவு விவசாயிகளுக்குக் கடன் வழங்கவேண்டும் என ரிசர்வ் வங்கி சொல்லியிருந்தாலும், அதை பொதுத் துறை வங்கிகள் கடைப்பிடிப்பதில்லை. விவசாயிகளுக்காகக் குரல் எழுப்பும் இடதுசாரி கட்சிகளின் தொழிற்சங்கங்கள்தான் பொதுத் துறை வங்கிகளில் கோலோச்சுகின்றன. ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட பிரச்னைகளைப் பற்றி ஏனோ அதிகம் கவலைப்படுவதில்லை!

பயிர் இன்ஷுரன்ஸ் திட்டத்தை முழுமையாகச் செயல் படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலொழிய, ஆண்டுதோறும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளைக் காப்பாற்றுவது கஷ்டம். ஏற்கெனவே தமிழகத்தில் விவசாயம் செய்யப்படும் நிலத்தின் பரப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. இப்படியே போனால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு... பெரும் உணவுப் பற்றாக் குறையைத் தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முன்னு ரிமை அளிக்கவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் ஆணையத்தின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த முன்வந்தால்... விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்திய விவசாயத் துறையை முன்னேற்றுவதற்காக அமைக்கப்பட்ட 'விவசாயிகள் ஆணையம்' மத்திய அரசிடம் வழங்கியிருக்கும் அறிக்கையில், 'பயிர் இன்ஷு ரன்ஸ் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்துவது எப்படி?' என விரிவாக ஆலோசனைகள் வழங்கியுள்ளது. விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்காக அறுப தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன்களைத் தள்ளுபடி செய்ததாகச் சொல்லும் மத்திய அரசு, இந்த ஆலோசனைகளை ஏனோ கிடப்பில் போட்டு வைத்துள்ளது. பயிர்க் கடன்களோடு 'ஒருங்கிணைந்த இன்ஷுரன்ஸ் திட்டம்' ஒன்றை உருவாக்குமாறு அந்தப் பரிந்துரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த இன்ஷுரன்ஸ் திட்டத்தில் பயிர், கால்நடைகள், விவ சாயிகள் ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதற்காக, 'கிராமப்புற இன்ஷுரன்ஸ் மேம்பாட்டு நிதி' ஒன்றை உருவாக்க வேண்டுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அளவில் விவசாயிகள் ஆணையங்களை அமைக்கவேண்டும். அதில் விவசாயிகள் தம்முடைய குறைகளை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அனைத்து வகையான பயிர்களும் கட்டாயமாகக் காப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. தற்போதுள்ள 'நபார்டு' வங்கியை 'விவசாயிகளுக்கான தேசிய வங்கி' எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் அல்லது விவசாயிகளுக்காக தேசிய அளவில் புதிதாக ஒரு வங்கியை உருவாக்கவேண்டும். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை மட்டுமின்றி, தானியங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு போகும்போது ஏற்படும் இழப்பையும்கூட இன்ஷுரன்ஸ் திட்டத்தில் உள்ளடக்கவேண்டும் என்பது அந்த அறிக்கையின் மற்றொரு பரிந்துரையாகும். இவற்றையெல்லாம் செயல்படுத்துமாறு மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். மாநில அரசு தன்னால் செய்யக்கூடியதை உடனடியாக நிறைவேற்றவும் முன்வர வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற மாநில விவசாய அமைச்சர்களின் மாநாட்டிலும் பயிர் இன்ஷுரன்ஸ் திட்டம் குறித்து விவாதம் நடந்தது. அதில் கலந்துகொண்ட நம்முடைய விவசாயத் துறைச் செயலாளர், 'பயிர் இன்ஷுரன்ஸ் திட்டத்தில் இப்போது உள்ள வட்டார அளவிலான மதிப்பீட்டு முறையை மாற்றி, தனிப்பட்ட விவசாயி நட்டமடைந்தால், அவருக்கு இழப்பீடு கிடைக்கும் விதமாகத் திருத்தம் செய்யவேண்டும்' என வலியுறுத்தினார். அது ஒரு முக்கியமான ஆலோசனையாகும்.

வெள்ளம் வரும்போது விவசாயிகளுக்காகக் கண்ணீர் விடுவது, வெள்ளம் காய்ந்ததும் விவசாயிகளை மறந்து விடுவது என இல்லாமல் நிரந்தரமான தீர்வுகளை முன்வைத்து அரசும், அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும். அறிக்கைகளும், மறுப்பு அறிக்கைகளும் அரசியல் செய்யப் பயன்படுமே ஒழிய, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரத்தைத் தீர்க்க உதவாது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அப்போது, 'தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் இன்ஷுரன்ஸ் திட்டத்தால் பயனடைய வழி செய்வோம். அவர்களுக்கான இன்ஷுரன்ஸ் பிரீமியம் தொகையை முழுமையாக மானியமாக வழங்குவோம்' என்று கூறுவதற்கு நம் அரசியல் தலைவர்கள் முன் வருவார்களா?

- ரவிக்குமார் எம்.எல்.ஏ.