'எனக்குக் கோபம் வந்தால், அவருக்கு அடங்கிவிடும்... அவருக்குக் கோபமான இடம் என்றால், அந்தப் பக்கமே நான் திரும்பிப் பார்க்க மாட்டேன்... எத்தனை கோடிகள் வந்தாலும் சரி, அந்த இடம் எனக்குத் தேவை இல்லை என்றே முடிவெடுப்பேன். இது சண்முகநாதனுக்கு மட்டுமல்ல... அவருடைய குடும்பம், என்னுடைய குடும்பம் எல்லோருக்குமே தெரியும். என் வாழ்நாள் முழுக்க என்கூடவே இருப்பார் சண்முகநாதன்... நான்தான் அவர்... அவர்தான் நான்..!''

-- ஐந்தாவது முறையாக நாடாளும் ஒரு முதல்வர், தன் உதவியாளர் பற்றி இதைவிட உருக்கமாக வேறென்ன சொல்ல முடியும்?

காவல்துறையில் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த சண்முகநாதன், இளம் தலைவர் கருணா நிதியின் மேடைப் பேச்சைக் குறிப்பெடுத்து அரசுக்குக் கொடுத்தபோது... கருணாநிதிக்கு எதிராக வழக்குப் போடுவற்கு அந்தக் குறிப்பு உதவியது. குறிப்பின் கச்சிதமும், வார்த் தைகளின் நேர்த்தியும் பிறகு

கருணாநிதியின் பார்வைக்கு வந்தபோது... 'யார் இந்த புத்திசாலி?' என்று ஆர்வமாக விசாரித் தார். பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது... தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது, வற்புறுத்தி சண்முகநாதனை அழைத்துத் தன் உதவியாளராக அமர்த்திக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் ஸ்கூட்டரில் கருணாநிதி வீட்டுக்கு வரும் சண்முகநாதன், கையோடு மதியச் சாப்பாட்டையும் கொண்டுவந்து விடுவார். ஸ்டாலின் சிறுவனாகப் பள்ளியில் படித்தபோது, அவருக்கு கோபாலபுரம் வீட்டில் வேலை பார்க் கும் செயல்மணிதான் சாப்பாடு கொண்டு போவார். செயல்மணி ஊருக்குப் போய் விட்டால், 'தம்பிக்கு நானே சாப்பாடு கொண்டு போறேன்' என்று உரிமையோடு ஸ்டாலினுக்கு லஞ்ச் கொண்டுபோவார் சண்முகநாதன்.

அன்று தொடங்கி இன்றுவரை, இந்தியாவின் படுஷார்ப்பான அரசியல் தலைவர்கள்கூட சட்டென்று புரிந்துகொள்ள சிரமப்படும் கருணா நிதி என்ற தலைவரின் ஒவ்வொரு அசைவுக்கும் பளிச்சென்று அர்த்தம் கண்டு, அவர் குறிப்பறிந்து உதவிகள் செய்துவந்த சண்முகநாதன் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கருணாநிதியின் அருகில் இல்லை!

''அவருக்கும் வயதாகவில்லையா..? எத்தனை காலம்தான் குடும்பத்தைக்கூட கவனிக்காமல் எந்நேரமும் தலைவரின் பின்னாலேயே அவரால் இருக்க முடியும்? ஓய்வெடுக்க நேரம் வந்து விட்டதென சண்முகநாதன் முடிவு செய்தார். முதல்வரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்!'' என்று தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டாலும்... ''அத்தனை சுலபத்தில் பிரியக்கூடியவர் அல்ல அவர். கடந்த சில நாட்களாகவே உள்ளூர நிலவி வந்த கசப்புகள் பரஸ்பரம் வெடித்தன. வேலை பளு, முதுமையின் காரணமாக அண்மையில் ஒருநாள் பொறுமையிழந்து முதல்வர் உதிர்த்த சில வார்த்தைகளை சண்முகநாதனால் தாங்க முடியவில்லை. கிளம்பிவிட்டார்!'' என்கிறார்கள் வேறு சிலர்!

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் தனது சொந்த ஊரான திருக்கண்ணமங்கை பகுதியில் இருக்கும் சண்முகநாதனை மறுபடி கோபால புரத்துக்கு அழைத்து வந்து முதல்வரை சந்திக்க வைக்க சிலர் முயல்கிறார்கள் என்று தகவல்கள் வந்தாலும்... ''இம்முறை அது சாத்தியமில்லை!'' என்றே தகவல்கள் கிடைக்கின்றன.

நாய்க்குட்டி கோபம்!

பல வருடங்களுக்கு முன், கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி ஆசையாக வளர்த்த

நாய்க்குட்டி ஒன்று காணாமல் போனது. அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர். நாய்க்குட்டி பற்றி காவல்துறையிடம் புகார் கொடுத்தார் சண்முகநாதன். ஆனால், அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் கருணாநிதி வீட்டில் சலசலப்பு எழுந்தது. இந்த சிறிய விஷயத்தை சரியாகக் கையாளவில்லையே என சண்முகநாதனின் காதுபட யாரோ பேசிவிட்டார்கள்! சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டார் இவர். சிலர் மூலமாக கருணாநிதி தூதுவிட்டும் ஒரு பலனும் இல்லை. அந்த சமயத்தில், நெல்லையில் இருந்த வைகோ, சென்னைக்கு வந்ததும் போய்ப் பேசினார். ''தலைவரை விட்டு நீங்கள் வரலாமா?'' என்று சமாதானம் செய்தார். திரும்பி வந்தார் சண்முகநாதன். எதுவுமே நடவாததுபோல், கம்ப்யூட்டரின் வேகத்தோடு தன் பணிகளைத் தொடர்ந்தார். இப்படி இன்னும் ஓரிரு முறைகள்கூட நடந்ததுண்டு. ஆனால், இம்முறை..?

குடும்பக் கோபம்... குமுறிய சண்முகநாதன்!

முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர் ஒருவர் இது தொடர்பாகப் பேசும்போது, ''முதல்வர் எந்த விஷயத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் குறிப்பறிந்து, அதனை எடுத்து வந்து நீட்டுவார். தேவையில்லாத விஷயங்களை யாரிடமும் எதற்காகவும் பேசமாட்டார். குடும்ப ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ முதல்வருக்கு ஏதேனும் கோபம் என்றால், அவரிடம் சிக்கும் ஒரே நபர் சண்முகநாதன்தான். இருந்தாலும், அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் சண்முக நாதன்.

ஆனால், சமீப நாட்களாக முதல்வர் அலுவலகம், முதல்வர் குடும்பம் என்று பல்வேறு இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளில் தேவையில்லாமல் தான் பகடைக்காய் ஆக்கப்படுகிறோமோ என்ற வருத்தம் சண்முகநாதனுக்கு இருந்தது. குடும்ப உறுப்பினர்களும், சென்சிடிவ் பதவியில் உள்ள சில அதிகாரிகளும் தன்னிச்சையாக மேற்கொண்ட பல நடவடிக்கைகளுக்கு சண்முகநாதன் பொறுப்பாக்கப்பட்டார். அல்லது, 'இதை ஏன் முதலில் என்னிடம் சொல்லவில்லை?' என்றோ... 'இதை ஏன் அங்கே போய் சொன்னீர்கள்?' என்றோ முதல்வர் குடும்பத்து உறுப்பினர்களால் மாறி மாறி கூண்டில் நிறுத்தப்பட்டார்!'' என்கிறார்கள் தி.மு.க-வின் உள்வட் டத்தைச் சேர்ந்த சிலர்.

தயாநிதிமாறன், கலாநிதிமாறன் ஆகியோருக்கு எதிரான நிலைப் பாட்டை தலைவர் குடும்பம் எடுத்தபோது, 'இந்த விஷயத்தில் இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டி யதில்லை...' என்று முதல்வரிடம் சொன்னாராம் சண்முகநாதன். முதல்வரின் துணைவியார் ராசாத்தி யம்மாள், அவர் மகள் கனிமொழி ஆகியோரிடமும் இது தொடர்பாகத் தன்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டாராம். இந்த விஷயம் அவர்கள் மூலமாக முதல்வருக்குப் போனபோது, 'சில விஷயங்களை, சிலரிடம் நீங்கள் பேச வேண்டியதில்லை. உங்கள் வேலையைப் பார்த்தால் போதும்!' என்று அவர் கண்டிக்கப்பட்டாராம்.

அங்கிருந்து வந்த போன்...

''முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையி லான கருத்து வேறுபாடுகள் சரியாகி... அவர்கள் ஒன்று சேரப்போகும் தகவல் ராசாத்தியம்மாளுக்குத் தெரியா மலே வைக்கப்பட்டிருந்தது. மாறன் சகோதரர்களும், ஸ்டாலின் - அழகிரியும் ஒன்றாகச் சேர்ந்து கோபாலபுரம் இல்லத்துக்கு வரப் போகும் தகவல், முதல்வருக்கேகூட ஓரளவு சஸ்பென்ஸாகத்தான் வைக்கப்பட்டிருந்தது. திடீரென்று

அத்தனை பேரும் அங்கே வந்து நின்றபோது, முதல்வரே சற்று திக்குமுக்காடித்தான் போனார். வந்தவர்களோடு கோலாகலமாக அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, சி.ஐ.டி. நகர் வீட்டிலி ருந்து போன் வந்தது. இந்த சங்கமம் பற்றி அங்கிருந்து விசாரித்தார்கள். முதல்வரும், 'திடீரென்று எல்லோரும் வந்திருக்கிறார்கள்' என்று வியப்பு காட்டியதோடு, 'சி.ஐ.டி. நகர் வீட்டுக்குப்போய் ஆசி வாங்கிவிடுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்.

அதேசமயம், சி.ஐ.டி. நகருக்கு, தான் சொல்வதற்கு முன்பாக இதை யார் சொன்னது என்று பிறகு அவர் விசாரித்திருக்கிறார். சண்முகநாதனை நோக்கி கைநீட்டப்படவும்... அப்போதே இதுகுறித்து கோபம் காட்டினார் முதல்வர். பதிலுக்கு இவரும், 'அங்கிருந்து தான் செல்போனில் கூப்பிட்டுக் கேட்டார்கள். நானும் மாறன் சகோதரர்கள் வந்திருப்பதை உறுதிப் படுத்தினேன். இந்தச் சூழலில் நான் வேறென்ன செய்திருக்க முடியும்?' என்று பதிலுக்குக் கேள்வி கேட்டார். அதுதான் இப்போதைய பிரிவுக்கான ஸ்டிராங்கான காரணம்!'' என்றும் கூறுகிறார்கள்.

''குடும்பங்கள் இணைந்ததைத் தொடர்ந்து, இடைப்பட்ட காலத்தில் நடந்துவிட்ட சில விஷயங்களில் தேவையில்லாமல் சண்முகநாதன் மீது சிலர் சந்தேகப்பட்டார்கள். அந்த சந்தேகத்தினால் உண்டான குடைச்சல்களால் அவருடைய எரிச்சல் கூடிக்கொண்டே வந்தது. 'எனக்கும் வயசாகுது. ஓய்வு கொடுத்து விடுங்கள்... நிம்மதியாகப் போய் சொந்த ஊரில் இருந்து விடுகிறேன்...' என்று நேரடியாகவே முதல்வரிடம் சொல்ல ஆரம்பித்தார். கடைசியில் திருச்சி விவகாரம்தான் மொத்தமாக அவரைக் கிளம்ப வைத்துவிட்டது!'' என்று விவரம் சொல்லும் சிலர்... அந்த திருச்சி விவகாரம் குறித்து இப்படிக் கூறுகிறார்கள்... -

திருச்சி திருகுவலி!

''திருச்சி கோட்டைப் பகுதி போலீஸ் உதவி ஆணையர் பதவி காலியாக இருந்தது. அங்கிருந்த ராஜசேகரன் என்பவர் ஜீயபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டதும், அந்த இடத்தைப் பிடிக்கப் பலரும் போட்டி போட்டார்கள். இதில் கோவி மனோகரன் என்பவரை தலைமைச் செயலாளரிடம் சிபாரிசு செய்தாராம், லோக்கல் அமைச்சர் கே.என்.நேரு. அந்த சிபாரிசு, டி.ஜி.பி-யான ஜெயினுக்கு பரிந்துரைக்கப்பட்டு, கடந்த வாரம் கோவி மனோகரனை அந்தப் பதவியில் நியமித்து உத்தரவு போட்டு விட்டார்கள். இதையறிந்ததும், திருச்சி புறநகர் ஏரியாவில் டி.எஸ்.பி-யாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் காந்தி என்பவர், எப்படியோ சண்முகநாதனைப் பிடித்துவிட்டார். சண்முக நாதனும் தலைமைச் செயலாளரிடம் பேசினார். மனோகரனுக்குப் போட்ட உத்தரவை கேன்சல் செய்துவிட்டு, காந்தியை கோட்டைப் பகுதிக்கு உதவி ஆணையராக நியமித்தார்கள். 'காந்திக்கு நீதித் துறை முக்கியப் பிரமுகர் ஒருவர் சிபாரிசு...' என்று சொல்லித் தான் இந்த டிரான்ஸ்ஃபரை சண்முகநாதன் சாதித்தார் என்று சிலர் அமைச்சர் நேருவின் காதில் போட... அண்மைக்காலமாக முதல்வரிடம் நல்ல செல்வாக்கில்

இருக்கும் நேரு கொதித்துப்போய் நேரடியாக முதல் வரின் காதுக்கே இதைக் கொண்டு போனாராம். 'எனக்குத் தெரியாமலேயே என் ஏரியாவில் இட மாற்றங்களை எப்படி சண்முகநாதன் செய்யலாம்?' என்று நேரு கேட்க... இதுபற்றி சண்முகநாதனிடம் முதல்வர் காரமாக விசாரிக்க... அப்போது நடந்த வார்த்தைப் பரிமாற்றங்கள்தான் சண்முகநாதனை வெளியேற வைத்தன!'' என்று வட்டத்தை முடித்து வைக்கிறார்கள் விவரமான சிலர்.

டிரான்ஸ்ஃபர்... கேன்சல்..!

''அண்மையில் நடந்த குடும்ப சங்கமத்துக்குப் பிறகு சண்முகநாதனின் இருப்பு பிடிக்காமல் இருந்தனர் சிலர். அவர்களுக்கு இந்த வெளியேற்றம் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது!'' என்று கூறும் அதிகாரிகள் சிலர், ''கோட்டையிலும் முதல்வருக்கு மிக அருகில் இருக்கும் வேறு சில அதிகாரிகளுக்கும் இதில் குஷிதான்!'' என்று காதைக் கடிக்கிறார்கள்.

''தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிலம், அபார்ட்மென்ட்கள் ஒதுக்குவது தொடர்பாக நடந்து வரும் தவறுகள் குறித்து முதல்வருக்குத் தகவல்

கொடுத்துக்கொண்டே இருந்தார் சண்முகநாதன். அதன்மீது முதல்வர் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், முதல்வருடன் நெருக்கமாக இருக்கும் - ஒளி கக்கும் இன்னொரு அதிகாரி, சண்முக நாதன் மீது கோபமாகிவிட்டார். முதல்வரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் அவர், சண்முகநாதனின் தவறுகளைப் பட்டியலிட்டுச் சொல்லி, எரிச்சலைக் கூட்டிக் கொண்டே இருந்தார்.

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுகளில் நடந்த தவறுகள் எதிர்காலத்தில் அரசுக்குப் பெரும் பிரச்னையை உருவாக்கும் என்பது சண்முகநாதனின் கருத்து. அதேபோல, போலீஸ் டிரான்ஸ்ஃபர்கள் விஷயத்தில் நடக்கும் தவறுகள், அமைச்சர்களது செயல்பாடுகள், தவறுக்கு ஆளாகும் அமைச்சர்கள் என்று நிறைய விஷயங்கள் சண்முகநாதனைக் கவலையடையச் செய்தன. ஒருமுறை முதல்வரிடம், 'காலையில் ஒருவருக்கு டிரான்ஸ்ஃபர் போடுகிறீர்கள். மாலையில் அதை கேன்சல் செய்கிறீர்கள்! மக்கள் இதையெல்லாம் துக்ளக் ஆட்சியாகப் பார்க்க மாட்டார்களா?' என்று உரிமையுடன் கேட்டாராம். அதைக்கூட ஆரோக்கியமாக எடுத்துக்கொண்ட முதல்வரை, இப்போது சிலர் வெற்றிகரமாக தங்கள் விருப்பப்படி இயக்கிவிட்டார்கள்!'' என்று சொல்கிறார்கள்.

சமாதானம் சாத்தியமா?

''என்ன, நீங்க சின்னப் பிள்ளை மாதிரி ஊருல போய் உட்கார்ந்துகிட்டிருக்கீங்க? அப்பா நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்படுறாரு, தெரியுமா? உடனே வாங்கண்ணே!'' என்று ஸ்டாலின் உரிமையோடு சண்முகநாதனை போன் மூலம் அழைத்ததாகவும், ''இல்லப்பா! நான் வ`ரலை... பிறகு சந்திப்போம்!'' என்று சோர்வுடன் சொல்லி இவர் போனை வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இருந்தாலும், ''முதன்முதலில் கருணாநிதிக்கு இவரை அறிமுகம் செய்துவைத்த திருவாரூர் தென்னன் மூலம் சமாதான முயற்சிகள் தொடர்கின்றன!'' என்றும் கூறுகிறார்கள். சும்மாவா... கருணாநிதி என்ற அதிசய சூப்பர் கம்ப்யூட்டரின் முக்கியமான 'மெமரி கார்ட்' அல்லவா சண்முகநாதன்!

- வி.அர்ஜுன், எஸ்.சரவணகுமார், ஜாசன்