Published:Updated:

ஹெல்மெட் தட்டுப்பாடு: அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்

விகடன் விமர்சனக்குழு
ஹெல்மெட் தட்டுப்பாடு: அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்
ஹெல்மெட் தட்டுப்பாடு: அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்
ஹெல்மெட் தட்டுப்பாடு: அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்

நெல்லை: தமிழகத்தில் தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஹெல்மெட்டு களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் எல்லையோர மாவட்டங்களில் வசிப்பவர்கள் தலைக்கவசம் வாங்குவதற்கு பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

இரு சக்கர வாகங்களில் செல்பவர்கள் விபத்துக்களில் சிக்கி உயிர் பலியாவதை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஜூலை 1- ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும் ஆதரித்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் சூடுபிடித்து உள்ளன.

ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச் சரிக்கை விடுத்து இருப்பதால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் இதுவரையிலும் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட ஹெல்மெட் கடைகள் இப்போது கிராமப்பகுதிகளிலும் தனியாக கடை விரித்து விற்பனையை தொடங்கி விட்டன.

ஐ.எஸ்.ஐ தரத்துடன் கூடிய ஹெல்மெட்டுகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதால் தரமான ஹெல்மெட்டுகளை தேடி மக்கள் அலைகிறார்கள். ஒரே சமயத்தில் மக்கள் தலைக்கவசத்தை தேடி அலைவதால் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வாடிக்கையாளர்கள் ஹெல்மெட் வாங்குகிறார்கள். வாகன ஓட்டி கள் மட்டும் அல்லாமல் பின்னால் பயணம் செய்பவர்களுக்காகவும் ஹெல்மெட் வாங்க வேண்டியதிருப் பதால் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இந்த தட்டுப்பாடு காரணமாக ஹெல்மெட் விற்பனையாளர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்ய தொடங்கி விட்டனர். கடந்த மாதம் வரையிலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஹெல்மெட்டுகள் இப்போது இரு மடங்கு விலைக்கு விற்கப்படுவதாக புலம்புகின்றனர் வாகன் ஓட்டிகள்.

ஹெல்மெட் தட்டுப்பாடு: அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்

இது பற்றி நம்மிடம் பேசிய நெல்லையை சேர்ந்த ராஜகோபால் என்பவர், ‘‘ இரண்டு மாதத்துக்கு முன்பு எனக்காக தரமான ஹெல்மெட் வாங்கினேன். அந்த சமயத்தில் அதன் விலை. 940 மட்டுமே. இப்போது பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் அவசியம் என்பதால் இன்னொரு ஹெல்மெட் வாங்க அதே கடைக்கு போனேன். நான் ஏற்கெனவே வாங்கிய அதே ஹெல்மெட்டின் விலை இப்போது ரூ.1850 என்று சொன்னார்கள். அதிர்ச்சியாக இருந்தது.

சில கடைகளில் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்துறாங்க. முதல் நாளில் பணம் கொடுத்து ரசீது பெற்றால் மறுநாளில் தான் ஹெல்மெட் கிடைக்கும் என்கிறார்கள். இதனை கண்காணிக்கவோ, இந்த திடீர் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவோ அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்காதது வேதனையாக இருக்கு. தட்டுப்பாடு இல்லாமல் ஹெல்மெட் கிடைக்க வழிசெய்ய வேண்டும். அதுவரையிலும் வாகன ஓட்டிகளை போலீஸார் வழிமறித்து துன்புறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார், வேதனையுடன்.

ஹெல்மெட் தட்டுப்பாடு: அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்

இதனிடையே, உள்ளூரில் ஹெல்மெட் விலை உச்சிக்கு சென்று விட்டதாலும், கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாலும் எல்லையோர மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புனலூர், கொல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று ஹெல்மெட் வாங்கி வருகிறார்கள். குமரி மாவட்ட வாகன ஓட்டிகள், திருவனந்தபுரம் சென்று ஹெல்மெட் வாங்குகிறார்கள். ஆந்திர எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் அந்த மாநிலத்திற்கு சென்று குறைந்த விலையில் தரமான தலைக்கவசத்தை வாங்கி வருகிறார்கள்.

சில கடைக்காரர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று மொத்தமாக ஹெல்மெட் வாங்கி வந்து உள்ளூரில் அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அவலமும் நடக்கவே செய்கிறது. ஹெல்மெட் தட்டுப்பாடு காரணமாக போலீஸாருக்கே தலைகவசம் கிடைக்காத நிலை உள்ளது. அதனால் சில மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் காவலர்களுக்காக மொத்தமாக டெல்லி, மும்பை போன்ற இடங்களில் ஆர்டர் கொடுத்து விட்டு, அதன் வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தத்தில், தமிழக வாகன ஓட்டிகளை தலைக்கவசம் பாடாய்ப்படுத்துவது என்னவோ உண்மை!

- ஆண்டனிராஜ்