கேப்டன் டீமின் முதல் ஒன்பது பேர்...

சர்வ அமாவாசை சென்டிமென்ட்படி மார்ச் 26 அன்று, சுபயோக நேரமான காலை 10.31 மணிக்கு தன்னுடைய கட்சியின் முதல் ஒன்பது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார், தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் விஜயகாந்த். ஒன்பது வேட்பாளருக்குமே அவர் நிர்ணயித்திருக்கும் முக்கியத் தகுதி, இரண்டு கோடிக்கு மேல் செலவு செய்ய வசதியுடையவரா என்பது மட்டுமே! பட்டியல் வெளியானதும் நம்முடைய ஜூ.வி. டீம் களமிறங்கி, அந்த ஒன்பது வேட்பாளர்களைப் பற்றி சேகரித்த தகவல் தொகுப்பு இதோ...

சேலம்

தே.மு.தி.க-வின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலா ளர் அழகாபுரம்

மோகன்ராஜ்தான் சேலம் தொகுதியின் வேட்பாளர். மாநகர மேயராக இருந்த அ.தி.மு.க-வை சேர்ந்த சுரேஷ்குமாரின் உடன்பிறந்த சகோதரர்தான் மோகன்ராஜ். கட்சியைத் தாண்டி மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் மோகன்ராஜ், வசதி வாய்ப்பில் குறைவில்லாதவர். வேட்பாளர் நேர்காணலுக்குச் சென்றபோது, 'எட்டு கோடி ரூபாய் செலவு செய்ய ரெடியா இருக்கேன் தலைவரே...' என்று தயங்காமல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அதன் அடிப்படையிலேயே சேலம் தொகுதியில் இவரை வேட்பாளராக அறிவித்திருக் கிறார்களாம்.

நாமக்கல்

மகேஸ்வரனை நாமக் கல் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் விஜயகாந்த். மாநில மாணவர் அணி துணைச் செயலாளராக இருக்கும் மகேஸ்வரனின் அப்பா நல்லதம்பி, முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர். கட்சியில் கோஷ்டிகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, சில மாதங்கள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் மகேஸ்வரன். 'என்னால் மூன்று கோடி ரூபாய் வரை தேர்தலுக்காக செலவு செய்ய முடியும்' என்பதை விஜயகாந்த்திடம் சொல்லி வந்தாராம் மகேஸ்வரன். அதுமட்டுமல்ல, 'தொகுதிக்குள் என் அப்பாவுக்கு இருக்கும் செல்வாக்கு எனக்கு வாக்காக மாறும்' என தன்னுடைய பிளஸ்களை பட்டியல் போட... சான்ஸ் இவர் வீடு தேடி வந்ததாம்.

திண்டுக்கல்

சென்னையில் உள்ள பி.எம்.ஆர். இன்ஜினீயரிங்கல்லூரியின் சேர்மன் முத்துவேல்ராஜ், போடியை சேர்ந்தவர். திண்டுக்கல்லில் பெண் எடுத்திருக்கிறார். கட்சியில் நிதிநிலை குழு உறுப்பினராக இருக்கும் முத்துவேல்ராஜ், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர். மாமியார் வீடு என்ற வகையில் முத்துவேல்ராஜுக்கு வேண்டுமானால்... திண்டுக்கல் அறிமுகமான ஊராக இருக்கலாம். ஆனால், தொகுதி மக்களுக்கு முத்துவேல்ராஜ் புதுமுகம்தான்!

மதுரை

மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ராமமூர்த்தியின் மனைவி முத்துலட்சுமி. விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே ரசிகர் மன்றத்தில் இருப்பவர். தற்போது மதுரை வடக்கு மாவட்ட மகளிர் அணியின் துணைச் செயலாளர். தொகுதி சீரமைப்புக்குப் பிறகு மதுரை தொகுதியில் யாதவர் இனத்தின் ஓட்டுகள் மெஜாரிட்டியாக வருவ தால், அந்த சமூகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமிக்கு யோகம். ''ஆக்சுவலி... அண்ணி பிரேமலதாவை இங்கே கேப்டன் நிறுத்துவாருனு நாங்க பந்தயம் கட்டிக் கிட்டிருந்தோம்!'' என்று வியக்கிறார்கள். மதுரை

தே.மு..தி.க-வில்! வேட்புமனுத் தாக்கல் வரை அந்த எதிர் பார்ப்பை இவர்கள் விடுவதாகவும் இல்லை!

திருச்சி

தே.மு.திக-வின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எம்.ஜி. விஜயகுமார்தான் திருச்சி வேட்பாளர். நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். ஆரம்பகால விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் தீவிர உறுப்பினராக இருந்தவருக்கு கட்சி தொடங்கியதும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பொறுப்பு கிடைத்திருக்கிறது. ரசிகர் மன்றத்தில் இருந்தபோதே திருச்சி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 26-வது வார்டில் தி.மு.க. மாநகர செயலாளர் அன்பழகனை எதிர்த்துப் போட்டியிட்டு 900 வாக்குகள் பெற்றிருக்கிறார். வசதி வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாதவர்தான் இவரும்.

தேனி

பெரியகுளம் ஒன்றியச் செயலாளர் சந்தானம் தேனி யின் வேட்பாளர். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சந்தானம், பிளஸ்-டூ வரை படித்திருக்கிறார். கோஷ்டிப் பூசல் எதிலும் சிக்காதவர். சந்தானத்தின் மகள் திருமணத்துக்கு, மூன்று மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் வந்திருக்கிறார். அப்போது சந்தானம் காட்டிய பவர்தான் அவரைப் பளிச்சென்று தெரிய வைத்ததாம். அதோடு, தேனி தொகுதி முழுக்க முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களே பரவலாக இருப்பதால், சந்தானத்துக்கு சான்ஸாம்.

விருதுநகர்

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே விருதுநகரை 'மாஃபா' பாண்டியராஜனுக்கு கொடுத்திருக்கிறார்கள். மெத்தப் படித்த பாண்டியராஜன் தன்னுடைய தொகு திக்கு ஆகும் செலவை மட்டுமல்லாமல்... 'மேலும் இரண்டு தொகுதிக்கும் இன்சார்ஜாக இருந்து தேர்தல் வேலை பார்த்துக்கொள்கிறேன்' என்று உற்சாகமாகச் சொல்லி இருந்தாராம். சென்னையில் வசித்து வரும் இவருடைய வேரெல்லாம் சிவகாசியில்தான்! இப்போது தேர்தலுக்காக விருதுநகர் வ.உ.சி. தெருவில் புதிதாக வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்குகள் பெற்றிருப்பதும், கட்சியினரைத் தாண்டி இவருக்கென வேலை பார்க்க இன்டடெலக்சுவல் படை இருப்பதும், தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தில் ஒன்றான நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதும் பாண்டியராஜனின் கூடுதல் பிளஸ்கள். தொகுதியில் கடந்த ஒருவருட காலமாகவே பல்வேறு மக்கள் நல நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததையும் சொல்லவேண்டும்.

திருநெல்வேலி

திசையன்விளையைச் சேர்ந்த மைக்கல் ராயப்பனை திருநெல்வேலி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் விஜய காந்த். அரசியல் அனுபவமே இல்லாத மைக்கல் ராயப்பன், சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஃபைனான்ஸியராக இருக்கிறார். சென்னையிலும் மும்பையிலும் சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்திவருகிறார். தொகுதி மக்களுக்கும் சொல்லிக்கொள்ளும் அளவில் அறிமுகம் இல்லாதவர். இவருக்கு ஸீட் கொடுக்க இரண்டு காரணங்கள் மட்டும்தான். கிறிஸ்துவர், கோடீஸ்வரர்.

கன்னியாகுமரி

கிறிஸ்துவ சமூகத்தின் ஃபேவரிட் தொகுதி என்பதால் மட்டுமல்ல... கன்னியாகுமரி தொகுதி ஆஸ்டினுக்குத்தான் என்பதை வேறு பல வகையிலும் கட்சிக்காரர்கள் முன்கூட்டி முடிவு செய்திருந்தார்கள். அ.தி.மு.க-வில் இருந்து விலகிவந்த ஆஸ்டின், தொகுதிக்குள் தனக் கென ஒரு செல்வாக்கு வளையத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். எந்தக் கட்சியில் இருந்தாலும், அவருக்கென ஓட்டுப் போட இங்கே ஒரு கூட்டம் உண்டு. கூட்டணி பலத்தோடு இருக்கும் திராவிடக் கட்சிகளே ஆஸ்டினை கண்டு யோசிக்க ஆரம்பித்துள்ளன. தற்போது தே.மு.தி.க-வில் மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் ஆஸ்டின். விஜயகாந்த்துடன் நெருங்கிப் பேசும் நபர்களில் இவரும் ஒருவர். சொல்லணுமா... செலவுக்கு அஞ்சாதவர்.

''யாரும் என்னை குழப்ப முடியாது!''

கேப்டன் ஸ்டெடி!

'தனித்துப் போட்டியா... கூட்டணியா?' என்ற கேள்விகளுக்கு மத்தியில் மார்ச் 26-ம் தேதி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்னியாகுமரி, இந்தத் தேர்தலில் பல கட்சிகளுக்கும் பிள்ளையார் சுழி தொகுதியாகி விட்டது. பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர் அத்வானி இங்குதான் தமிழகத்தில் போட்டியிடும் தம்முடைய கட்சியின் முதலாவது வேட்பாளர் பெயரை அறிவித்து, பிரசாரத்தைத் தொடங்கினார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ்-சுக்காக மாயாவதியும் இங்கு பிரசாரத்துக்கு வரவிருக்கிறார். அந்த வரிசையில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட கையோடு விஜயகாந்த்தும் குமரியில்தான் பிரசாரத்தில் குதித்தார்.

களியக்காவிளையில் இருந்து மீனவ கிராமங்களுக்குள் புகுந்த விஜயகாந்த்துக்கு உற்சாக வரவேற்பு. களியக்காவிளையில் பேசும்போது, ''நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய கட்சி தனித்துப் போட்டியிடும். ஆனாலும் சிலர், 'ஏப்ரல் 16-ம் தேதி வரைக்கும் யோசிங்க'ன்னு சொல்றாங்க. இனி யோசிக்க என்ன இருக்கு..? அப்படி யோசிப்பதாக இருந்தால் ஒன்பது தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து இருப்பேனா? என்னை யாரும் குழப்ப முடியாது!'' என்றவர், தன் உக்கிரத் தாக்கு தலில் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டார்! குமரி மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''கேப்டன் ரொம்ப தெளிவாத்தான் முடிவெடுத்திருக்கிறார். மீனவ மக்களுக்கு எம்.ஜி.ஆர்-னா உசுரு. இவரு 'கறுப்பு எம்.ஜி.ஆர்' ஆச்சே..! குமரி மாவட்டத்தில் இருக்கும் எல்லா மீனவ கிராமங்களுக்கும் செல்லும் வகையில் அவரோட பிரசாரத் திட்டத்தை வகுத்தோம். நல்ல பலன் கிடைச்சுருக்கு. முன்னாள் எம்.பி-யான ஆஸ்டினையே வேட்பாளரா அறிவிச்சிருக்கிறதும் இங்கே எங்களுக்கு கூடுதல் பலம். தொகுதியைக் கைப்பற்றி கேப்டன் மணிமகுடத்தில் வைரமா பதிப்போம்!'' என்றவர்கள்,

''உண்மையைச் சொல்லணும்னா, ஆஸ்டினுக்கு இந்தத் தடவை தேர்தல்ல போட்டியிட ஆசையேயில்லை. எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியும் கல்வி நிறுவனங்களின் அதிபருமா இருக்குற ஜேப்பியாரை நிறுத்தத்தான் பேச்சுவார்த்தை நடத்தினார். அது சரிப்பட்டு வராததால் நகர செயலாளர் ஜெய்சிங்கை நிறுத்த முடிவெடுத்து, அவருக்காக விஜயகாந்த்கிட்டப் பேசினார். ஆனா, அதுக்கு சம்மதிக்காம, ஆஸ்டினையே வேட்பாளராக்கிட்டாரு தலைவர்!'' என்கிறார்கள்.

'தனித்துப் போட்டி' என்று விஜயகாந்த் தனி ரூட்டில் போனாலும் அவரை கூட்டணியில் சேர்க்கத் தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருவதாகச் சொல்கிறது காங்கிரஸ் வட்டாரம். நம்மிடம் பேசிய காங்கிரஸார் சிலர், ''எங்க கூட்டணியில் சேர குறைந்தபட்சம் பத்துத் தொகுதிகள் கேக்குறாரு விஜயகாந்த். எங்க சைடோ அஞ்சுதான் தருவேன்னு சொன்னாங்க. சட்டமன்றத் தேர்தலில் வேணும்னா, கூடுதல் தொகுதி கொடுக்குறதா சொல்லியிருக்காங்க. தே.மு.தி.க. அதுக்கு சம்மதிக்காமத்தான் முதல் கட்டமா ஒன்பது வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டிருக்கு. காங்கிரஸ் மேலிடம் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து 'இந்த ஒன்பது தொகுதிகளிலும் நீங்களே நில்லுங்கள். மீதித் தொகுதிகளில் எங்கள் கூட்டணியை ஆதரியுங்கள்'னு சொன்னா, அதுக்கு அவரு சம்மதிக்கவும் வாய்ப்பிருக்கு. அப்படி வந்தாலும் வரலாம்கிறதுக்காகத்தான் விஜயகாந்த் இதுவரைக்கும் காங்கிரஸை அட்டாக் பண்ணிப் பேசாம இருக்காரு...'' என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

ஒன்று உறுதி... எந்தப் பெரிய கட்சியின் அதிரடிக்கும் சளைக்காமல் அசரடிக்கும் முடிவுகளை எடுக்கத் தயாராகவே இருக்கிறாராம் விஜயகாந்த். கட்சிக்கான தேர்தல் அங்கீகாரமும், கௌரவமான வெற்றியும்தான் அவருடைய ஒரே குறி!

- ஆண்டனிராஜ்
படம் ஆ.வின்சென்ட் பால்

- ஜூ.வி. எலெக்ஷன் டீம்