Published:Updated:

தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்பவர்களுக்கு தேர்தல் பதில் சொல்லும்: கருணாநிதி

தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்பவர்களுக்கு தேர்தல் பதில் சொல்லும்: கருணாநிதி
தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்பவர்களுக்கு தேர்தல் பதில் சொல்லும்: கருணாநிதி

தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்பவர்களுக்கு தேர்தல் பதில் சொல்லும்: கருணாநிதி

சென்னை: தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்பவர்களுக்கு சட்டமன்றத் தேர்தல் பதில் சொல்லும் என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்பவர்களுக்கு தேர்தல் பதில் சொல்லும்: கருணாநிதி

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனின் ‘வாழ்வும்-தொண்டும்’ என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது, ''என்னால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. காரணம், எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது தான். ஆனால், நான் என்றைக்குமே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்ததில்லை. அந்தவகையில் இந்த நிகழ்ச்சிக்கு 4 மணிக்கே நான் தயாராகி விட்டேன்.

1942 ஆம் ஆண்டு திருவாரூருக்கு அண்ணா வந்தபோது அன்று நடந்த கூட்டத்தில் ஒரு இளைஞர் பேசினார். அவர் அன்பழகன். அண்ணாவால் அழைத்து வரப்பட்ட அன்பழகனுக்கும் எனக்கும் அன்று தான் நட்பு ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகளாக அவரும், நானும் இயக்கத்தை வளர்த்து இருக்கிறோம். அன்பழகனும் நானும் ஒன்றுப்பட்டு இருப்பது பலருக்கு எரிச்சலை உருவாக்குகிறது.

தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்பவர்களுக்கு தேர்தல் பதில் சொல்லும்: கருணாநிதி

அவர்களை பற்றி நான் விரிவாக பேச விரும்பவில்லை. பல எதிர்ப்புகளை தாங்கிய இயக்கம் தி.மு.க., நானும் அவரும் எவ்வளவு நாள் இருப்போம் என்று பேசுகிறவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், எது நேர்ந்தாலும், தூக்கு மேடையை பார்த்து முத்தமிடக்கூடிய மன திடம் தி.மு.க.வுக்கு இருக்கிறது. இந்த பயணம் என்றைக்கும் பயணிக்கும். நிற்காது, தொடரும்.

திராவிட சமுதாய வெற்றிகளை எங்கள் உழைப்பால், ஒற்றுமையாக இருப்பதால் பெற்று இருக்கிறோம். அந்த வெற்றிகளை பெறுவதற்கு நாங்கள் பட்ட கஷ்டம் என்ன? திராவிட இயக்கத்தால் யார்? யாரெல்லாம் உயர்ந்தார்களோ? அவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்தை தூற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கொச்சைப்படுத்துகிறார்கள். கல்லடிகளையும், சொல்லடிகளையும் கண்டு நாம் பயப்பட தேவையில்லை. திராவிடத்தை காக்க எல்லோரும் களம் அமைப்போம், போராடுவோம்.

தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்பவர்களுக்கு தேர்தல் பதில் சொல்லும்: கருணாநிதி

இந்த இயக்கம் விடுதலை இயக்கம். இன்றைக்கு சமுதாயத்தில் பல மாற்றங்கள் வருவதற்கு தி.மு.க. தான் காரணமாக இருந்து இருக்கிறது. அந்தவகையில் விடுதலை உணர்வு தடுக்கப்பட்டால் தி.மு.க. போராடவும் தயங்காது. பா.ஜ.க. வந்து விட்டது என்று பயமுறுத்துகிறார்கள். இது பயப்படுகிற இயக்கம் அல்ல. அச்சுறுத்தலுக்கு அஞ்சாது. எடுத்துக்கொண்ட உயர்ந்த லட்சியத்தை, உறுதியை நிறைவேற்ற உன்னிப்பாக இருப்போம் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

சமஸ்கிருதத்தை தமிழர்கள் மத்தியில் திணிக்க நினைக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அந்தநாளில் நாம் விடுதலை போராட்டத்தை தொடங்க வேண்டும். எக்காரணத்தையும் கொண்டும் தமிழ் சமுதாயத்தை விட்டு விட மாட்டோம். வீறு கொண்டு எழச்செய்வோம். திராவிட இயக்கம் தேய்ந்து விட்டது என்றும், தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்றும் இந்த நாட்டில் இருப்பவர்கள் நினைத்தார்கள் என்றால், அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன், சட்டமன்ற தேர்தல் உங்களுக்கு விடை சொல்லும்.

யாரை கண்டும் நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் வெகுளிகள் அல்ல, ஏமாளிகள் அல்ல. சில நேரங்களில் ஏமாளிகள் போல் தோன்றும். தேர்தலில் பெறும் வெற்றியை பார்த்து அவர்கள் அதிசயிப்பார்கள்" என்றார்.

படங்கள்: சு.குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு