Published:Updated:

ஈரமில்லாத ஈரான் சட்டம்!

ஈரமில்லாத ஈரான் சட்டம்!

சேவியர்
ஈரமில்லாத ஈரான் சட்டம்!
ஈரமில்லாத ஈரான் சட்டம்!
ஈரமில்லாத ஈரான் சட்டம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தலைவரே... அவளுக்கு நாளை மரண தண்டனை.''

'அதற்கென்ன... நிறைவேற்று!'

'இல்லை... வந்து... அவள் ஒரு கன்னிப் பெண்!'

'ஓ! அப்படியா அப்போ வழக்கம் போல், இன்று இரவு அவளுக்குக் கன்னி கழித்துவிடு. சாகும்போது அவள் கன்னியாக இருக்கக் கூடா தல்லவா..!''

இந்த உரையாடல் கற்கால சர்வாதிகார சரித்திரம் அல்ல. ஈரானின் இன்றைய சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் கன்னிப் பெண்களின் கதறல் நூறு சதம்

நிகழ்கால நிஜம்! தற்போது, ஈரான் நாட்டு பாசிஸ ராணுவத்தினரின் வேலைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ஒரு பாசிஸ வீரர். ருகோல்லா கொமேனி கண்டுபிடித்த இயக்கம்தான் இந்த பாசிஸ மிலிட்டரி. அதாவது, நாட்டிலுள்ள பதினைந்திலிருந்து நாற்பந் தைந்து வயதுக்கு இடைப்பட்டவர்களைக் கொண்டு கட்டி எழுப்பப் படும் ஒரு மக்கள் படை. 1979-ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. 'இரண்டு கோடி இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு, இரண்டு கோடி போர் வீரர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்!' எனும் அறை கூவலுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த இயக்கம்!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். அல்லது வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய முக்கியமான பணி, நாட்டில் மத நம்பிக்கையை அழுத்தமாகப் பரப்பு வது... மதரீதியான விதிமுறைமீறல்களைத் தடுப்பது, வழிபாட்டு இடங் களைப் பாதுகாப்பது, போர்களில் ஈடுபடுவது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், தலைவன் என்ன கட்டளையிடுகிறானோ, அதை மறுப்புச் சொல்லாமல் நிறைவேற்றுவது!

கடந்த ஜூன் மாதம் ஈரானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மஹ்மத் அஹ்மதின்ஜா. இவருடைய தேர்தலே ஒரு பித்தலாட்டம் என அமெரிக்கா, இங்கிலாந்து உட்படப் பெரும்பாலான நாடுகள் பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டன. இந்தியா வழக்கம்போல வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு நமக்கெதுக்கு வீண்வம்பு என சைலண்டாகி விட்டது. ஈரானிலோ இவருக்கு எதிராக பலத்த போராட் டங்கள் நடைபெற்றன.

ஈரமில்லாத ஈரான் சட்டம்!

இந்தப் போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயதான ஒரு சிறுவனும், 15 வயதான ஒரு சிறுமியும் அடக்கம். 'பார்க்கவே ரொம்ப சின்னப் பசங்களாக இருக்கிறார்களே' என பரிதாபப்பட்டு அவர்களை விடுவித்தார் பாசிஸ இயக்க வீரர் ஒருவர். அவ்வளவுதான்... இரக்கம் காட்டியவரைத் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டார்கள்காரணம், ஈரானின் பார்வையில் 9வயதான சிறுமிகளும், 13 வயதான சிறுவர்களும் கூட பெரியவர்கள்தான்!

அந்த பாசிஸ வீரர்தான், 'ஜெரு சலேம் போஸ்ட்' பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்து உலகை உலுக்கிவிட்டார்!

''எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக் கின்றனர். என் பெயரைச் சொல்ல மாட்டேன்...'' என அச்சத்துடன் ஆரம்பிக்கிறார் அவர். ''எனது பதினா றாம் வயதில் நான் பாசிஸ குழுவில் சேர்ந்தேன். சாப்பாடு போட வழியில்லாத அம்மா, எனக்கு சாப்பாடாவது கிடைக்கட்டும் என பாசிஸ குழுவில் சேர்த்து விட்டார். இல்லாவிட்டால்... பட்டினியில் செத்துவிடுவேனோ, போதைக்கு அடிமையாகி விடுவேனோ எனும் பயம் அம்மாவுக்கு.

பாசிஸ குழுவில் எக்கச்சக்கச் சிறுவர்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. சிறு வயதிலேயே ரவுடிகளைப் போல அவர்கள் சுற்றித் திரிவார்கள். கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்வார்கள். இளம் பெண் களைப் பார்த்தால் 'தொட்டு'த் தொட்டு சில்மிஷம் செய்வார்கள். இளம் பெண்கள் மறுப்புச் சொல்லாமல் ஒத்துழைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. ஒருவிதத்தில் இதெல்லாமே சிறுவர்கள் மீதான வன்முறைதான்!'' என்றவர், இப்படித் தொடர் கிறார்...

''எங்களுக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. எங்கள் தலைவன் அலி ஹமினீ கட்டளையிடும் செயலைத்தான் நாங்கள் செய்கிறோம். கொல்வதோ, அழிப்பதோ, தடுப்பதோ எதுவானாலும் சொல்வதைச் செய்வேன். பொதுவாக, அரசுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் எங்களுடைய பணி கடுமையாக இருக்கும். கொஞ்ச நாட்கள் ஜெயிலில் பணியாற்றினேன். ஜெயிலில் ஏராளமான சிறுமிகளும், இளம் பெண்களும் இருப்பார்கள். ஒன்பது வயதாகிவிட்டால், அவர்களில் மத விதிகளை மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக் கலாம் என்பது எங்கள் சட்டம்.

கன்னிப் பெண்களைக் கொல்ல சட்டம் இடம் தராது. அதனால் அதற்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண்ணை ஒரு வீரன் முறைப்படி 'கல்யாணம்' செய்து கொண்டு, உறவு கொள்ளவேண்டும். அப்போதுதான் மறு நாள் 'சட்டப்படி' அவர்கள் கொல்லப்பட முடியும். கன்னித் தன்மையுடன் செத்துப் போனால், மதத்தை அவமானப்படுத்திய பிறகும் அவர்கள் சொர்க்கத்துக்குப் போய் விடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறைச்சாலை டியூட்டி பார்த்ததுதான் எனக்கு மிகவும் கடினமான காலகட்டம். என்னுடைய 18 வயதிலேயே பெண்களை 'கல்யாணம் செய்து... கெடுக்கும்' பணியைக் கொடுத்தார்கள். என்னுடைய பணிக்காக என் மேலதிகாரிகளெல்லாம் என்னைப் பாராட்டுவார்கள். என் மனதோ அவமானத்திலும் குற்ற உணர்விலும் துடிக்கும். சின்னச் சின்னப் பெண்களெல்லாம் என் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அவர்களுக்கு மரணம் பயமில்லை, பாலியல் உறவில்தான் பயம்... அருவருப்பு! மேலும், எங்கே தாங்கள் நரகத்துக்குப் போய்விடுவோமோ என பயந்து அலறுவார்கள்.

சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம், கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். நாங்கள் அருகில் நெருங்குவதற்குள் செத்துப் போய்விட முயல்வார்கள். பல சமயங்களில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்துதான்,திருமணத்தை முடித்து எங்கள் 'கடமை'யைச் செய்ய வேண்டியிருக்கும்...'' என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகச் சொல்லும் அவர்,

''அந்தத் திருமணங்களெல்லாம் இங்கே சட்ட பூர்வமானவை. எனவே, சட்ட ரீதியாகவோ, மத ரீதி யாகவோ நான் எதுவும் தவறு செய்யவில்லை என்றே நம்புகிறேன். ஆனால், நான் செய்வது கொடுமை என்பது என் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்'' என கவலையுடன் முடிக்கிறார்.

இதெல்லாம் நடப்பது மனித உரிமைகள் பற்றி மூச்சுக்கு முந்நூறு தடவை குரல் எழுப்பும் நவநாகரிக யுகத்தில்தானா..? இதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்று அறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பது உலக சமுதாயத்தின் கடமை அல்லவா! யார் செய்யப் போகிறார்கள் அதை?