Published:Updated:

இப்போது நிஜ சந்தோஷ்...

இப்போது நிஜ சந்தோஷ்...

ஜூ.வி. ஆக்ஷன் ஃபாலோ - அப்!
இப்போது நிஜ சந்தோஷ்..!
இப்போது நிஜ சந்தோஷ்...

கும்பகோணம் திருமஞ்சன வீதியில் ஒரு கையால் டிரவுசரையும், இன்னொரு கையால் இடுப்புக்கு வெளியே பிதுங்கிக் கொண்ட சிறுநீரக குழாயையும் பிடித்து நடந்த சிறுவன் சந்தோஷ் பற்றி... கடந்த 02.08.09-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் 'மூன்று வருடங்களாக மூத்திர வாழ்க்கை' என்ற தலைப்பில் கண்ணீர்க் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இப்போது நிஜ சந்தோஷ்...

இப்போது சந்தோஷின் மூன்று வருடப் போராட்டம் ஓர் இனிய முடிவை எட்டி, மற்ற குழந்தைகளைப் போல கைவீசி நடக்கத் தயாராகிவிட்டான் சந்தோஷ்.

சந்தோஷ் பற்றிய கட்டுரையை எழுதிக் கொண்டே... அவனை சென்னை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். சுகா தாரத் துறை அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடமும் சந்தோஷ் பற்றி நாம் தெரிவிக்க... அமைச்சரின் முயற்சியால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான் . விறுவிறு வேகத்தில் சிகிச்சை களும் மேற்கொள்ளப்பட்டன.

சந்தோஷுக்கு நியூக்ளியர் ஸ்கேன் (nuclear scane) செய்யப்பட்டதில், இடது பக்க கிட்னியை விட, வலது பக்க கிட்னியின் செயல்பாடு குறைவாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. அதனால் உடனடியாக சந்தோஷுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட் டாயமும் ஏற்பட்டிருக்கிறது. இது தெரிந்து மருத்துவமனைக்கே நேரில் வந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சந்தோஷின் குடும்பத்தினரிடம் ஆறுதலாகப் பேசினார். டாக்டர்களுக்கும் அக்கறையாக அட்வைஸ் கொடுத்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு

இப்போது நிஜ சந்தோஷ்...

செல்லப்பட்டான் சந்தோஷ். ஆபரேஷன் மூல மாக இடுப்பு பகுதியில் துருத்திக் கொண்டிருந்த சிறுநீரகக் குழாயை (ureter) சரிசெய்து உடலுக்குள் பொருத்திய மருத்து வர்கள் டீம், இடுப்பு பகுதியில் சிறுநீர்க் கசிவு நிகழாதபடியும் தடுக்கும் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தது. தற்போது முழுமையாக குணமடைந்திருக்கும் சந்தோஷுக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தையல் பிரிக்க வேண்டியதுதான் பாக்கி!

சந்தோஷுக்கு சிகிச்சை அளித்த குழந்தைகள் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரும் பேராசிரியருமான சரவண பவனை சந்தித்து, ஜூ.வி சார்பில் நன்றி கூறினோம்.

''சந்தோஷுக்கு எக்டோபிக் கிட்னி பிரச்னை கிடையாது. பிறக்கும்போதே சிறுநீர்ப் புறவழி ஜவ்வில் அடைப்பு ஏற்பட்டி ருந்ததால், சிறுநீர் வெளியேற முடியாத நிலை உண்டாகி இருக்கிறது. அதனால் சிறுநீர்ப் பை, சிறுநீர்ப் பாதை, சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டது. அதனால்தான் இதற்கு முன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சந்தோஷுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், யூரிட் ராஸ்டமி என்கிற அறுவை சிகிச்சையை செய்து, சிறுநீரக அடைப்பை நீக்கி இருக் கிறார்கள். ஆனாலும், சந்தோஷின் குடும் பத்தினர் அடுத்தடுத்து சிகிச்சையைத்

இப்போது நிஜ சந்தோஷ்...

தொடராததுதான் பிரச்னையாகி விட்டது. இப்போது மறுபடியும் யூரிட்ராஸ்டமி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சந்தோஷின் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு விட்டன. ஆனாலும், அடுத்தடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சந்தோஷின் குடும்பத்தினர் கிட்னியின் வேலைத் திறன், சிறுநீரகப் பாதையில் உள்ள கிருமிகள், ரத்தத்தில் உள்ள உப்புச் சத்து குறித்தெல்லாம் அடிக்கடி பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம். தாளாத துன்பத்தோடு எங்கோ திரிந்துகொண்டிருந்த அந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சிகிச்சை கிடைக்கச் செய்த ஜூ.வி-க்கு எங்கள் மருத்துவத் துறை சார்பாக நன்றிகள்!'' என்றார் டாக்டர் சரவணபவன்.

இடுப்பைத் தடவிப் பார்த்தபடி அமர்ந்திருந்த சிறுவன் சந்தோஷ், நம்மைக் கண்டதுமே சந்தோஷம் அலையடிக்க ஓடி வந்தான். ''அண்ணே... இப்போ எனக்கு இடுப்புல இருந்து ஒண்ணுக்கு வாரது நின்னுடுச்சு. இடுப்புல ஆபரே ஷன் பண்ண புண்ணு ஆறின உடனே வீட்டுக்குப் போயிடலாம்னு சொல்லிட்டாங்க. இனி யாரும் என்னைய 'ரெட்டை பைப்'னு கேலி பண்ண மாட்டாங்க. இடுப்பெல்லாம் ஈரமாகிட்டதால, இது நாள் வரைக்கும் நல்ல டிரஸ் போட முடியாம இருந்தேன். இனி இஷ்டம் போல எந்த டிரஸையும் போட்டுப் பார்க்கலாம்...'' என அந்த ஐந்து வயதுப் பிஞ்சு, பெயருக்கேற்றாற் போல் சந்தோஷமாகச் சிரிக்க, சிலிர்த்துப் போனோம்.

குழந்தைகள் நல மருத்துவ மனையின் இயக்குநரான சாரதா சுரேஷ், ''சந்தோஷ் டிஸ்சார்ஜ் ஆகிப் போனாலும் எங்க குழந்தைதான். எங்க கான்டாக்ட் நம்பர் தொடங்கி எல்லா விவரத்தையும் அவன் பாட்டிகிட்ட கொடுத் திருக்கிறோம். அவங்க எப்ப வேணும்னாலும் எங்களோடு பேசலாம்!'' என்றார் தாய்மைத் தன்மையோடு.

நாம் அங்கிருந்தபடியே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை தொடர்புகொண்டு சந்தோஷ் சார்பில் நன்றி சொன்னோம்.

''ஒரு சிறுவனின் பரிதாப நிலையை எங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்த ஜூ.வி-க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். சுகாதார மேம்பாடுகள் எவ்வளவு அவசியமோ, தனி மனித துயரங்களைத் துடைப்பது அதைவிட முக்கியமானது. முதல்வர் கலைஞர் கற்றுக் கொடுத்திருக்கும் இந்த மந்திர வார்த்தைகளின் வழி நின்று, சந்தோஷுக்கு உரிய தீர்வை உண்டாக்கிய டாக் டர்கள் டீமுக்கு ஜூ.வி. வாயிலாகவே என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று வருடங்களாக மூத்திர வாழ்க்கைக்கு ஆளாகித் தவித்த சந்தோஷுக்கு, உரிய விடிவு பிறந்ததில் எல்லோருக்கும் சந்தோஷமே!'' என்றார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

இப்போது நிஜ சந்தோஷ்...

இதற்கிடையில் சமூக நல ஆர்வலரான சைதை துரைசாமி நம்மைத் தொடர்பு கொண்டு, ''சந்தோஷின் நிலையை ஜூ.வி-யில் படித்ததும் கண்கலங்கி விட்டேன். அவனுடைய மேல் படிப்புக் கான உதவிகள் அனைத்தையும் நானே செய்கிறேன்...'' என ஈகைக் கரம் நீட்டி யிருக்கிறார்.

நல்ல இதயங்கள் இன்னும் இன்னும் இப்படி முன்னால் வந்தால், யாருக்கும் கண்ணீர் நிரந்தரமில்லைதானே..!

- இரா.சரவணன்
படங்கள் கே.கார்த்திகேயன்