Published:Updated:

இனியன் என்னும் வெறியன்!

இனியன் என்னும் வெறியன்!

இனியன் என்னும் வெறியன்!
இனியன் என்னும் வெறியன்!
இனியன் என்னும் வெறியன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புன்னகைப் பூ சிநேகாவின் முதல் படம் 'விரும்புகிறேன்'. அதற்கேற்றாற் போல் அவரை விரும்புகிறேன் என சொல்லாத ரசிகர்களே இல்லை. சிநேகா நடித்து வந்த லேட்டஸ்ட் படம் 'அச்சமுண்டு அச்சமுண்டு'!

சிநேகாவை வெறித்தனமாக 'விரும்புகிறேன்' எனக் கூறிய ராகவேந்திராவுக்கு இப்போது சட்டத்தால் 'அச்ச முண்டு'!

நடிகர் ஸ்ரீகாந்த்துடன் காதல், நடிகர் ஷாம் இவர் உதட்டைக் கடித்தார் என பலவிதப் பரபரப்புகளுக்கு ஆளான சிநேகா, அதன் பின்னர் தயாரிப்பாளர் 'நாக்' ரவியுடன் கல்யாணம் வரை பேசப்பட்டார்.

இந்தப் பரபரப்பு சர்ச்சை வரிசையில், இப்போது பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ராகவேந்திராவும் இணைந்திருக்கிறார்.

சினிமாக்களிலும், பத்திரிகைகளிலும் சிநேகாவின் விதவிதமான ஸ்டில்களைப் பார்த்து அவர் மீது பித்துப் பிடித்துவிட்டதாம் ராகவேந்திராவுக்கு! சிநேகாவை எப்படியாவது நேரில் சந்தித்துவிடவேண்டும் என நெஞ்சுக்குள் ஓர் முனைப்பு முண்டிக் கொண்டே இருந்திருக்கிறது. இதற்காகவே தயாரிப்பாளர் என சொல்லிக்கொண்டு சிநேகாவை நேரில் சந்தித்தாராம். அது முதல், அவருடைய அழகில் கிறங்கிப் போயிருக்கிறார். காதலின் உச்சம் வெறி யாக விஸ்வரூபம் எடுத்துவிட, செல்போனில்காமம் சொட்டும் எஸ்.எம்.எஸ்-களை அனுப்பி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ராகவேந்திராவை எச்சரித்திருக் கிறார் சிநேகா. ஆனாலும், குறுஞ்செய்திக் குசும்புத் தொல்லை தொடரவே, போலீஸில் புகார் செய்து விட்டார். வழக்கு சைபர் க்ரைமுக்கு போக, ராகவேந்திராவை செல்லும் கையுமாக கைது செய்துவிட்டது போலீஸ்!

இது பற்றி சைபர் க்ரைம் போலீஸின் உதவி கமிஷனர் டாக்டர் சுதாகரிடம் பேசினோம்.

''கடந்த ஆறு மாசத்துக்கும் மேலாக நடிகை சிநேகாவை டார்ச்சர் பண்ணியிருக்கிறார் ராக வேந்திரா. என்னிடம் இந்த கேஸை ஒப்படைத்த பிறகு, தீவிர விசாரணை நடத்தினோம். அப்போது பெங்களூருவைச் சேர்ந்த ராகவேந்திரா

சென்னையில் இருப்பது தெரியவந்தது. தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, கடந்த 16-ம் தேதி தி.நகரில் இருக்கும் காபி ஷாப்புக்கு வந்தார் ராகவேந்திரா. அங்கேயே வைத்து 'பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின்' கீழ் கைது செய்திருக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை ஜெயில் வாசம் அனு பவிக்க வேண்டிவரும். நீதிபதியிடம் ராகவேந்திரா மன்னிப்புக் கோரினால், தண்டனைக் காலம் குறைவதற்கு வாய்ப்புண்டு. சிறைக்குப் போன பின்னால், அவர் முகத்தில் பயம் தெரிந்தாலும்... அவருடைய சிநேகா காய்ச்சல் விட்டபாடில்லை. இப்போதும் சிநேகா தனக்கு மட்டுமே சொந்தமானவர் என்றும், தன்னைத் தவிர சிநேகாவை வேறு யாரும் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் சொல்லி வருகிறார்!'' என்றார் சுதாகர்.

ராகவேந்திரா குறுஞ்செய்தி அனுப்பிய தற்கே கைது செய்யப்பட்டார் என்றால், 'சிநேகாதான் என் மனைவி' என்று உலக மெங்கும் கேட்கும்படி இணையதளம் மூலம் உரக்கக் கூவி வரும், லண்டனைச் சேர்ந்த இனியன் என்பவரை என்னவென்பது? இது பற்றி கிடைத்த தகவலால் மேலும் அதிர்ந்தோம்.

சுஹாசினி என்ற பெயரில்தான் சிநேகாவை அழைக்கிறார் இனியன். இதுதான் சிநேகாவின் இயற் பெயராம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இனியன், இப்போது தான் வசித்துவருவது லண்டனில் என இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 'என் மனைவி சுஹாசினி (சிநேகா) மீதான என் காதல்' என்ற பெயரில் வலைப்பக்கம் ஒன்றை (ப்ளாக்) நிறுவி, சிநேகா பற்றி கண்டபடி எழுதி வைத்திருக்கிறார் இனியன்.

அதில், 'இந்திய மற்றும் தமிழக அரசியல்வாதிகள் என்னையும், சிநேகாவையும் இணையவிடாமல் சூழ்ச்சி செய்துவருகிறார்கள்...' என அதிரடி பண்ணி, தரக் குறைவான வார்த்தைகளால் அவர்களை அர்ச்சனையும் செய்துள்ளார் இந்த சிநேகா பித்தர்! அமெரிக்க அரசியல்வாதிகள் முதல், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வரை எவரும் இனியனின் 'வசை வலை'யில் தப்பவில்லை.

அதிலிருந்து ஓரளவு நாகரிகமான சாம்பிளைப் பாருங்களேன் -

''சென்ற ஆண்டு, என் மனைவியும் இணைவியுமான சுஹாசினி (சிநேகா)

இனியன் என்னும் வெறியன்!

தமிழின உணர்வாளனான என்னை நேசிக்க ஆரம்பித்தாள். ஈழத் தமிழர்களுக்கு வேண்டிய மனித உரிமைகள், இனப் படுகொலைத் தடுப்பு, தன்னாட்சி விடுதலை குறித்த கருத்துகளை நான் பதிப்பதை அவள் விரும்புகிறாள். அவளுடைய புகழும்-அடையாளமும் தமிழின உணர்வாளனான எனக்கு பயன்படக் கூடாது என்று அவள் மேல் அழுக்காறு கொண்டு அவளை சில கயவர்கள் வீடியோ படங்களாக எடுத்து மிரட்டினர்.

நான் சிநேகாவின் கணவர் என்பதாலேயே, படித்த படிப்பு அடிப்படையில் எந்தப் பணியில் சேர்ந்தாலும், அதை அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சில வாரங்களில் ஒழித்து விடுகிறார்கள். எனக்கு வரவிருந்த பண ரீதியான பல வருவாய்களை என் தொலைபேசியை ஒட்டுக்கேட்டு, வராமல் செய்தார்கள். எங்கள் குடும்பத்தின் சொத்துகளில் ஒன்றான ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை அபகரித்தார்கள்! என் உளவியல் மருத்துவ படிப்பை முடிப்பதற்காக வைத்திருந்த பத்து லட்ச ரூபாயை வேவு பார்த்துத் திருடினார்கள்...'

- இப்படியெல்லாம் வெறி பிடித்து எழுதியிருக்கும் இனியன், அடுத்து தமிழகத்தின் பெரிய அரசியல் தலைவர்களையெல்லாம் பழிகூறி எழுதியிருக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது, 'மண்டைக்குள் குரல்' கேட்கும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது! இனியனின் இந்த ஏடாகூட பிளாக் பற்றியும், ராகவேந்திரா பற்றியும் சிநேகாவிடமே பேசினோம் -

''சினிமா தயாரிப்பாளர் என்று சொல்லித்தான் முதலில் என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார் அந்த ராகவேந்திரா. 'ஆட்டோகிராப் பாகம்-2' தயாரிக்க விரும்புவதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் என்னைக் கேட்டார். ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு என்ன மரியாதை கொடுப்பேனோ, அந்த மரியாதையை அவருக்கு நான் கொடுத்தேன். தயாரிப்பாளர் என்று சொல்லி, என் குடும்பத்தி னரிடமும் மெள்ள பழகினார். இருந்தாலும், அவருடைய நடவடிக்கைகள் என்னை எப்படியாவது அடைய வேண்டும் என்கிற தவறான நோக்கிலேயே இருக்க, அவரை இயக்குநர் சேரனிடம் அனுப்பி வைத்தேன். ராகவேந்திரா சரியான நபரல்ல என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட சேரன் என்னை எச்சரித்தார். அதோடு சரி... சந்திப்பை நான் தவிர்த்துவிட்டேன். ஆனால், ராகவேந்திராவிடமிருந்து ஒரு நாளைக்கு ஐம்பது எஸ்.எம்.எஸ்-கள் வரை வரும். ஒன்றுக்கும் பதில் அனுப்ப மாட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் டீஸன்ட்டாக இருந்த

எஸ்.எம்.எஸ்-கள் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஆபாசமாக மாறின. நான் அவனை பலதடவை எச்சரித்தேன். போலீ ஸுக்குப் போவேன் என்று மிரட்டினேன். 'எனக்கு போலீஸில் பெரிய ஆட்களெல்லாம் தெரியும்...' என்று சொல்லி கெக்கே பிக்கேயென்று சிரித்தான். இந்த வெறுப்பை தாங்க முடியாமல், செல்போன் எண்களை மூன்று முறை மாற்றினேன். இருந்தாலும், எப்படியோ எண்களை கண்டுபிடித்து வக்கிர எஸ்.எம்.எஸ்-கள் மூலம் துரத்தினான். ஒருமுறை என்னுடைய பிறந்தநாளுக்கு பொக்கே அனுப்பினான். ராகவேந்திராவிடமிருந்து வந்த பொக்கே என்று தெரிந்ததும், அதனை தூக்கி வெளியில் வீசினேன். கொஞ்ச நேரத்தில் அவனிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ்... 'என்ன பொக்கேவை தூக்கி வெளில வீசிட்டியா?' என்று!

இப்படியே அவன் டார்ச்சர் தாங்க முடியலை. சில நேரங்களில் நான் ஷ¨ட்டிங்கில் இருக்கும்போது ஸ்பாட்டுக்கு வந்துவிடுவான். காவலர்களை விட்டு துரத்தியடிப்பேன். இருந்தாலும், அவன் ஓயவில்லை. எப்படியாவது திருந்தி விடுவான் என்று பொறுமை காத்தேன். ஒருகட்டத்தில் நிலைமை மோசமாகவும்தான் போலீஸில் புகார் கொடுத்தேன்.

'மோனிகா மனசுலயும் நான்தான்!'

ராகவேந்திரா, இனியன் ஆகியோரின் நடவடிக்கை குறித்து மனோதத்துவ சிகிச்சையாளரான பேராசிரியர் பெரியார்தாசனிடம் கேட்டோம்.

''ராகவேந்திராவுக்கு இருக்கறது இன்பாக்சுவேஷன். சிநேகாவை சினிமாவுல

இனியன் என்னும் வெறியன்!

பார்த்து ஆசைப்பட்டிருக்கார். 'ஒரு படத்துல ஒரு ஹீரோவோட ஒட்டி உரசி டூயட் பாடினவர், இன்னொரு படத்துல வேற ஹீரோவோட சேர்ந்து நடிக்கிறார். நம்மகிட்டேயும் நடிகருங்க மாதிரி வசதியெல்லாம் இருக்கே, அவங்ககூட சேர்ந்து நடிக்கிறவர் நம்மகூடவும்சேர்ந்து வாழ்வார்' என்கிற பணக்கொழுப்புதான் ராகவேந்திராவை ஆட்டிப்படைச்சிருக்கு. இதுமாதிரி காம்ப்ளெக்ஸ் இருக்குறவங்க, ஒவ்வொரு செயலையும் திட்டம் போட்டு செய்வாங்க. தண்டனை கொடுத்துட்டா திருந்திடுவாங்க.

அடுத்ததா நீங்க சொல்ற இனியன், 'ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர்' நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பாரதிராஜாவுலேர்ந்து, சசிக்குமார்வரைக்கும் என்னோட கதையைத்தான் படமாக்குறாங்க என்று புளுகுவார்கள். அடுத்த ஜனாதிபதி நான்தான்னு சொல்லிட்டு டீ வாங்கி கொடுக்கச் சொல்லிக் கேட்பாங்க. மோனிகா லெவின்ஸ்கி மனசுல நான்தான் இருக்கேன்ம்பாங்க. இதுமாதிரி பேர்வழிகள் பொதுவா நண்பர்கள்கிட்டேதான் புருடா விடுவாங்க. இப்ப 'ப்ளாக்' அது-இதுனு வந்துட்டதால, உலகறிய தங்கள் நோயை வெளிப்படுத்திக்கறாங்க. கண்டுபிடிச்சு உடனே சிகிச்சை தராட்டி இவங்க நிலைமை ரொம்ப மோசமாயிடும்!'' என்றார்.

லண்டனில் வசிக்கும் இனியன் தன்னுடைய வெப்சைட்டில் என்னைப் பற்றி மோசமாக எழுதிவருவது குறித்து எனக்கும் தகவல் சொன்னார்கள். யார் இந்த இனியன்? ஏன் என்னை இப்படி அவதூறாக வம்புக்கு இழுக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. அவனும் என்னைப் பற்றி மோசமாக எழுதுவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அவன் மீதும் போலீஸில் புகார் கொடுப்பேன்.

இப்படித்தான் கொஞ்ச காலத்துக்கு முன்னால, ஒருத்தன் எனக்கு டார்ச்சர் கொடுத்தான். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் நான் படாதபாடு பட்டேன். இப்ப என்னான்னா, ராக வேந்திரா, இனியன் என்று யார் யாரோ தொல்லை கொடுக்கிறார்கள். நடிகை என்றால், வெளிப்படையான எதிர்ப்பு யுத்தத்துக்கு

இனியன் என்னும் வெறியன்!

வரமாட்டார்கள்... அப்படியே வந்தாலும் இந்த சமுதாயத்தில் நடிகைக்கு ஆதரவாகத் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்கிற எண்ணமா இவர்களுக்கு? யாராக இருந்தால் என்ன... சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதானே... சட்டத்தின் துணைகொண்டு என்னை அவமானப்படுத்துபவர்களுக்கு பாடம் புகட்டாமல் ஓயமாட்டேன்...'' என்றார் ஆவேசம் தெறிக்க.

''திரும்பத் திரும்ப ராகவேந்திராவின் தொல்லை தொடர்ந்ததால் மூன்று செல் போன்களை மாற்றிவிட்டேன்!'' என்று கூறுகிறார் சிநேகா. ''சாதாரண காலேஜ் மாணவிக்கே இதுபோல் மிரட்டல் வந்தால் சட்டென்று சைபர் க்ரைமுக்குப் போய் உதவி நாடுகிற இந்த யுகத்தில்... எதற்காக ராகவேந்திராவின் மிரட்டல்களை இத்தனை நாளும் தனக்குள்ளேயே சிநேகா பொத்தி வைத்துக்கொண்டார்?'' என்பது தற்போது எழுகிற கேள்வி. அதேபோல், தான் அனுப்பிய பொக்கேவை சிநேகா வெளியில் தூக்கி எறிந்தால், அது உடனே ராகவேந்திராவுக்கு எப்படித்தெரிந்தது? இவையும் இந்த விவகாரத்தின் கேள்விகள்.

ஒன்று மட்டும் நிச்சயம்... பேரும், புகழும், செல்வாக்கும் இருந்தால்கூட பிரபல நட்சத்திரம் தனது பிரைவஸிக்கு கொடுக்க நேர்கிற விலை மிக அதிகம்தான்!

- எம்.குணா