Published:Updated:

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ரயில் மறியல்!

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ரயில் மறியல்!
என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ரயில் மறியல்!

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ரயில் மறியல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடலூர்: என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடத்திய அனைத்து கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ரயில் மறியல்!

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை வலியுறுத்தி, கடந்த 22ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள். இவர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்ததால், போராட்டம் தீவிரமாகியுள்ளது.

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ரயில் மறியல்!

இந்நிலையில், என்.எல்.சி. நிர்வாகம் இதுகுறித்து தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று தி.மு.க. தலைமையில் கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கட்சியினர், அனுமதியின்றி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் என பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ரயில் மறியல்!

கடலூரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், சென்னையில் இருந்து வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து அதன் மீது ஏறி போராட்டம் நடத்தினர். இதனால்  பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ரயில் மறியல்!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், “கடந்த தி.மு.க. ஆட்சியின் போது என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வோடு, போனஸ், இரண்டுமுறை ஊதிய உயர்வு ஆகியவைகளை பெற்றுத்தந்தோம். ஆனால், இப்போதைய ஆட்சியில் தொழிலாளர்கள் கேட்கும் 24 சதவிகிதத்தைகூட வாங்கி தர முடியவில்லை.

ஆளும் கட்சியானது தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கையே கடைபிடித்து வருவதோடு, அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுக்கவில்லை. தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

-க.பூபாலன்

படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு