போட்டி வேட்பாளர், வேட்பாளர்கள் மாற்றம், சத்தியமூர்த்தி பவன் துவம்சம், கதர்ச்

. சட்டைகள் கிழிப்பு, தங்கபாலு வீடு முற்றுகை, கொடும்பாவி எரிப்பு... இப்படி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் நடத்திய கூத்துகள் மிக மிக மோசம்! வாக்குப் பதிவு முடிந்த பிறகும், 'அலைகள் ஓய்வதில்லை’ என்கிற ரீதியில் அதிரடிகள் தொடர்கின்றன! .
காங்கிரஸின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன் உட்பட 19 பேரை, கட்சியைவிட்டு தங்கபாலு கட்டம் கட்ட... சத்தியமூர்த்தி பவனில் மீண்டும் கொந்தளிப்பு. நடவடிக்கைக்கு உள்ளானவர்களையும், கார்த்தி சிதம்பரத்தையும் சந்தித்துப் பேசியபோது, தங்கபாலுவுக்கு எதிராகப் போட்டுத் தாக்கினர்!

எஸ்.வி.சேகர்: ''கட்சி விரோதம் என்பதற்கு என்ன அர்த்தம்? காங்கிரஸ் கூட்டணிக்காக எட்டு நாட்கள்

பிரசாரம் போனேன், இதுதான் கட்சி விரோதமா? கட்சித் தலைவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஒட்டுமொத்த உதாரணமாகத் திகழ்கிறவர் தங்கபாலு. ராகுலை சந்தித்து, சோனியா தலைமையிலான காங்கிரஸில் இணைந்தவன் நான். ஆனால், ஏதோ தங்கபாலு தனியாகக் கட்சி நடத்துவதைப் போலவும், அவர் கட்சியில்தான் நான் சேர்ந்தது போலவும் நினைக்கிறார். ஒருவரைக் கட்சியில் இருந்து நீக்க விளக்கம் கேட்டு, ஷோ காஸ் நோட்டீஸ் தர வேண்டும். இந்த அடிப்படைகூட தெரியாதவர் தங்கபாலு.

தமிழகம் முழுவதும் காங்கிரஸுக்கு எதிராகப் போட்டி வேட்பாளர்கள் நின்றபோது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மயிலாப்பூரில் உள்ளவர்களை மட்டும் அவர் குறிவைத்துக் கட்டம் கட்ட என்ன காரணம்? ஸ்ரீரங்கம் தொகுதியில் போய் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பிரசாரம் செய்தேனே... தங்கபாலு அங்கே போனாரா? அவர் ஜெ-விடம் பணம் வாங்கிவிட்டுத்தான் அந்தத் தொகுதிக்குப் போகவில்லை என்று சொல்லலாமே!

எமர்ஜென்ஸி போல இரவு 12 மணிக்கு மேல் நடவடிக்கையை அவசர அவசரமாக எடுத்திருக்கிறார். இதற்குக் காரணம், வாக்குப் பதிவு முடிந்ததுமே, மயிலாப்பூரில் தான் தேற மாட்டோம் என்று புரிந்துவிட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்தால், துணை முதல்வர் ஆகிவிடலாம் என்ற கனவு தகர்ந்து விழுந்துவிட்டது. அதனால்தான், சர்வாதிகாரத்தோடு செயல்படுகிறார்.

ஒருவேளை, வெயில் அதிகமாகிவிட்டதால் மண்டை காய்ந்துபோயிருக்கிறார்போல... எலுமிச்சம் பழத்தை வாங்கித் தலையில் தேய்த்தால்தான் தங்கபாலுவுக்குப் பித்தம் தெளியும். போட்டியிட்ட 63

தொகுதிகளிலும் காங்கிரஸை வீழ்த்த ஒரு சீமான் புறப்பட்டார். ஆனால், 100 சீமான்களுக்கு சமமாக தமிழக காங்கிரஸையே அழித்துக்கொண்டு இருக்கிறார் தங்கபாலு!

சத்தியமூர்த்திபவன் வாட்ச்மேனைக்கூட தமிழக காங்கிரஸ் தலைவராகப் போடலாம். அந்த வாட்ச்மேனுக்கு இருக்கும் விசுவாசம்கூட தங்கபாலுவிடம் இல்லை''

கராத்தே தியாகராஜன்: ''மனைவியின் வேட்புமனுவைக்கூட முறையாகப் பூர்த்திசெய்ய முடியாதவர் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவரா? வேட்பு மனுவை ஒழுங்காகப் பூர்த்தி செய்ய முடியாத ஜெயந்தி தங்கபாலுவைத்தான் முதலில் கட்சியைவிட்டு நீக்க வேண்டும். சோழிங்கநல்லூரில் இருக்கும் அவருக்குச் சொந்தமான கல்லூரியே, விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு இருக்கிறது. மெகா டி.வி. மீது காப்பி ரைட் சட்டத்தில் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, யோக்கியர் மாதிரி பேசுகிறார் தங்கபாலு. ஸீட் தரவில்லை என்று சொல்லி, அவருடைய ஆதரவாளர் சிவலிங்கம், வாசனின் கொடும்பாவியை எரித்தாரே... அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? கிருஷ்ணகிரிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றி, மகபூப் ஜான் அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பு மனுவே தாக்கல் செய்யவில்லையே... அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவர் தலைவராகி, இந்த மூன்று வருடங்களில் தனிப்பட்ட முறையில் ஒரு பொதுக் கூட்டத்தையோ அல்லது நிகழ்ச்சியையோ நடத்தி இருக்கிறாரா? நான் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகிறேன்.

ஒட்டுமொத்த காங்கிரஸையும், மிக மோசமான அழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்கிறார் தங்கபாலு. மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டியவர் தங்கபாலு!''

- எம்.பரக்கத் அலி

படம்: ச.இரா.ஸ்ரீதர்