நடிகர் சிவாஜி யாருக்கு சொந்தம்? விஜயதாரணிக்கு ஜெயலலிதா பதில்! | Actor Shivaji Ganeshan not only belong to a particular party says Jayalalitha

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (26/08/2015)

கடைசி தொடர்பு:18:45 (26/08/2015)

நடிகர் சிவாஜி யாருக்கு சொந்தம்? விஜயதாரணிக்கு ஜெயலலிதா பதில்!

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தம் கொண்டாடி பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு, தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, விதி எண் 110-ன் கீழ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர், "பேரவைத் தலைவர் அவர்களே, நடிகர் திலகர் சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர். ஆகவே, அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்