Published:Updated:

ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி!

விகடன் விமர்சனக்குழு
ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி!
ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி!

தூத்துக்குடி: தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி!

'நமக்கு நாமே' என்ற விடியல் மீட்பு பயணத்தை கடந்த 2 நாட்களாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அந்த பயணத்தின் மூன்றாம் நாளான இன்று, தூத்துக்குடி மாவட்டம் பொன்னன்குரிச்சியில் விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.

அப்போது அவர் விவசாயிகளிடம் கூறும்போது, ''மக்களை நேரடியாக சந்தித்து, குறைகளை கேட்டறிந்து தீர்ப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். நான் பயணம் செய்யும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள பிரச்னைகளை கேட்டு வருகிறேன். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி!

விவசாயிகளுக்கு எதிரான நிலம் எடுப்பு மசோதாவை எதிர்த்து வாக்களித்தது தி.மு.க. விவசாயிகளின் கடன் ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது தி.மு.க. ஆட்சியில் தான். அதை தலைவர் கலைஞர் அறிவித்தபோது நாங்களே நம்பவில்லை. ஆனால் கலைஞர் தள்ளுபடி செய்து சாதித்து காட்டினார். இந்த ஆண்டு மட்டும் 68 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

அனைகளை தூர்வாருவதற்கும், அதை கண்காணிப்பதற்கும் தமிழ்நாட்டில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமைத் தீர்பாயம் உத்தரவிட வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள், ஆட்சியாளர்களின் நெருக்கடி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அந்த வகையில் விஷ்ணுபிரியா தற்கொலையை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போதாது. அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.  தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது" என்றார்.

அதன்பின் அங்கிருந்து கிளம்பிய ஸ்டாலின் குரும்பூர் வந்தார். அங்கு பஜார் வீதியில் நடந்து சென்றபடியே பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் நலம் விசாரித்தபடியே குறைகளை கேட்டறிந்துவிட்டு அங்கிருந்து முக்கானி என்ற ஊருக்கு சென்றார்.