நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.2,200 வழங்க வேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,200 ஐ கொள்முதல்  விலையாக அறிவித்து உத்தரவிடவேண்டும் என்று பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் தமிழக  அரசை வலியுறுத்தியுள்ளார்.

   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "  நடப்பு பருவத்திற்கான நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சாதாரண நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1460 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1520 ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இந்த விலை போதுமானதல்ல.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1424 செலவு ஆவதாக மதிப்பிடப்பட்டிருந்தது. லாபமே இல்லாமல் கிட்டத்தட்ட உற்பத்தி செலவை கொள்முதல் விலையாக அறிவிப்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்பது தான் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை ஆகும். அதன்படி, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,200 கொள்முதல் விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!