Published:Updated:

அணை பிரச்னை.. தமிழக கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன: ஜெ.

விகடன் விமர்சனக்குழு
அணை பிரச்னை.. தமிழக கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன: ஜெ.
அணை பிரச்னை.. தமிழக கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன: ஜெ.
அணை பிரச்னை.. தமிழக கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன: ஜெ.

சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழக கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதன் காரணமாக, முல்லைப் பெரியாறு விவகாரத்துக்காக, சிறப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு பாதுகாப்பு தொடர்பாக பிரதமருக்கு அனுப்பட்ட கடிதத்துக்கு, அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை என்றும் முதல்வர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மேலும், கேரள எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், அங்கு பாதுகாப்புப் பணியில் தமிழக போலீஸார் கூடுதலாக குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.