Published:Updated:

கண்ணீரில் மிதக்கும் புட்டபர்த்தி...

''அன்பின் போதனை எப்போதும் இருக்கும்!''

கண்ணீரில் மிதக்கும் புட்டபர்த்தி...

''அன்பின் போதனை எப்போதும் இருக்கும்!''

Published:Updated:

''சாய் பாபா பிரிந்தார்!'' என்கிற சோகச் செய்தி, கடந்த ஞாயிறு காலை 7.40 மணிக்குத் தெரிய வர... உலகமெங்கும் கோடிக்கணக்கான பாபா பக்தர்கள் அதிர்ந்தனர். கடைசியாக ஒரு தரம் அவரது முகத்தைத் தரிசிக்க புட்டபர்த்தி நோக்கி அடக்க முடியாத அழுகை​யோடு வந்த வண்ணம் லட்சக்கணக்கான பக்தர்கள்!        

கண்ணீரில் மிதக்கும் புட்டபர்த்தி...

மூன்று நாட்களுக்கு முன்பே புட்டபர்த்தியில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுவிட்டது. 15 செக் போஸ்ட்கள், பாதுகாப்புக்கு 7 ஆயிரம் போலீஸார், பக்தர்களைக் கட்டுப்படுத்த அலையலையாய் பேட்ஜ்

##~##
அணிந்த சத்ய சாய் சேவா சமிதி தொண்டு ஊழியர்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின்னர்தான், அந்த துக்கச் செய்தி அறிவிக்கப்பட்டது.

''கடந்த மாதம் மார்ச் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்​பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாபா. கல்லீரல், மண்ணீரல்  என உடலின் முக்கிய உறுப்புகள் படிப்படியாக அடங்கி... இறுதியில் இதயமும் அமைதி​யானது!'' என்கிற செய்தியை சத்ய சாய் சூப்பர் ஸ்பெஷா​லிட்டி மருத்துவமனையின் இயக்குநர் ஏ.என்.சாஃபா அறிவித்தபோது, உலகமெங்கும் உள்ள பக்தர்கள் உடைந்து அழுதனர்.

பிரஷாந்தி நிலைய வாசலில் படம் எடுத்துக்கொண்டு இருந்த மீடியாக்களிடம் நெஞ்சில் அறைந்தபடி ஓடிவந்த ஒரு வெள்ளைக்கார பக்தை, ''பாபா இறக்கவில்லை. அவர் பகவான். மரணித்ததாகச் சொல்வது பொய்!'' என்றபடியே கதறலோடு மயங்கிச் சரிந்தார்.

பாபாவின் பிரிவால் மீளாத் துயரில் பக்தர்கள் கதறு​வது ஒரு புறம்... மறுபுறமோ, 'இத்தனை ஆண்டுகளாக பாபா கட்டிக்காத்த சேவை நோக்கிலான சொத்துகளுக்கு வாரிசு யார்?’ என்ற கேள்வி மறுபுறம் கிளம்பி உள்ளது.

''178 நாடுகளில் உள்ள கிட்டதட்ட

கண்ணீரில் மிதக்கும் புட்டபர்த்தி...

2 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிப்பது யார் என்பதுதான் இப்போதைய கேள்வி!

சத்ய சாய் அறக்கட்டளையின் சொத்துகளை நிர்வகிக்க, பாபாவின் உதவியாளர் சத்தியஜித்துக்கும், பாபாவின் தம்பி ஜானகிராமனின் மகனும் பாபா அறக்கட்​டளையின் உறுப்பினருமான ரத்னாகருக்கும் வாய்ப்பு இருக்கிறது.  

33 வயதான சத்தியஜித், 5 வயதில்  இருந்தே பாபாவுடனே இருக்கிறார். எம்.பி.ஏ. முடித்த சத்தியஜித், கடந்த 6 ஆண்டுகளாக பாபாவுடன் இருந்து பிரஷாந்தி நிலைய நிர்வாகத்தை பாபாவின் மேற்பார்வையில் நிர்வகித்தார். 36 வயதான ரத்னாகர், 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தையும் பாபாவின் தம்பியுமான ஜானகிராமனின் மறைவுக்கு பிறகு அறக்கட்டளையின் உறுப்பினர் ஆனவர். அறக்கட்டளைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க, ஒரு வாரமாக அறக்கட்டளை உறுப்பினர்களான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சக்ரவர்த்தி, முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.என்.பகவதி உட்பட பலரும் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.

அனந்தப்பூர் மாவட்டத்தின் தலைவராக 1976-ல் பதவியேற்றவர் கே.சக்ரவர்த்தி. இவர் தனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாபாவின் தீவிர பக்தராக முழு நேரமும் ஆசிரமத்தில் பல்வேறு பொறுப்​பு​களை வகித்துள்ளார். இவரிடமோ  அல்லது சத்யஜித்திடமோ பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சு இருக்கிறது.

இந்த விஷயத்தில் அறக்கட்டளை நிர்வாகத்துக்குள் மாற்றுக் கருத்துகள் ஏதும் இருந்தாலும் அதை விரைவாகவும் சுமூகமாகவும் தீர்ப்பதற்கான வேலைகள் நடக்கும். காரணம், இப்படியரு சர்ச்சைக்கு இடம் கொடுத்தால் , ஆந்திர அரசாங்கம் இந்த அறக்கட்டளையை நாட்டுடமையாக்கும் முயற்சியில் இறங்கிவிடும். சேவை உணர்வை மட்டுமே முழு வாழ்க்கையாகக் கொண்டு, சத்ய சாய்பாபாவின் பாதங்களைப் பணிந்து வந்த அறக்கட்டளை உறுப்பினர்களின் மீது உலகம் எங்கிலும் உள்ள பக்தர்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற நோபெல் அமைப்பின் அங்கத்தினர்களேகூட, சத்ய சாயி அறக்கட்டளை தூய நோக்கோடு செயல்படும் விதத்தைக் கண்டு பிரமித்து தங்கள் வியப்பை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை இந்த அறக்கட்டளை என்றென்றும் காப்பாற்ற வேண்டும்.. காப்பாற்றும்?'' என்கிறார்கள் பிரஷாந்தி நிலையத்தின் மீது தங்கள் உயிரையே வைத்திருக்கும் பக்தர்கள்..

அன்பைப் போதித்த பாபாவின் சொத்துகள், எப்போதும் ஏழைகளுக்கு உதவும்விதமாகவே இருக்கட்டும்!

- புட்டபர்த்தியில் இருந்து

இரா.வினோத்