அவதூறு செய்தி: ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் விஜயதாரணி! | Vijayatharani notice to jayalalithaa

வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (17/10/2015)

கடைசி தொடர்பு:19:16 (17/10/2015)

அவதூறு செய்தி: ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் விஜயதாரணி!

தூத்துக்குடி: அதிமுக நாளிதழில் தன்னை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 

காங்கிரஸ் கட்சியின் 2வது மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமார், நடிகை குஷ்பு, விலவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய விஜயதாரணி, "கடந்த 9-ம் தேதி அதிமுக நாளிதழில் 'சாட்டை' என்ற பெயரில் என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. என் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவர் மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டேன்" என்று ஆவேசத்துடன் கூறினார்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முதன் முறையாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, மன்னிப்பு கேட்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-எஸ்.சரவணப்பெருமாள்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்