Published:Updated:

பாடகர் கோவன்-விஜயகாந்த் சந்திப்பு!

பாடகர் கோவன்-விஜயகாந்த் சந்திப்பு!
பாடகர் கோவன்-விஜயகாந்த் சந்திப்பு!

சென்னை: "மூடு டாஸ்மாக்கை மூடு" பாடல் புகழ் பாடகர் கோவன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து தனது பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளை வழங்கினார். 

பாடகர் கோவன்-விஜயகாந்த் சந்திப்பு!

இது தொடர்பாக விஜயகாந்த் தனது முகநூல் பக்கத்தில்," மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் திரு.கோவன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் இன்று(28.11.2015) சந்தித்தார். அப்பொழுது அவர் பாடிய பாடல்கள் கொண்ட குறுந்தகடுகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

இச்சந்திப்பின் போது தேமுதிக இளைஞர் அணி செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ், மக்கள் அதிகார மையம்த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.வழக்கறிஞர் ராஜூ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வெற்றிவேல் செழியன் ஆகியோர் உடனிருந்தனர்" என்று பதிவிட்டுள்ளார்.