Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட தமிழக அரசு முன்வர வேண்டும்:மு.க.ஸ்டாலின்!

சென்னை: நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட தமிழக அரசு முன்வரவேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், 

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்கள் வரிப்பணத்தில் அரசியல் எதிரிகளைப் பழிதீர்க்க முனைந்த அதிமுக அரசின் தலையில் உச்ச நீதிமன்றம் குட்டு வைத்து கண்டித்திருக்கிறது. மக்கள் பாடகர் திரு கோவன் அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை தமிழக அரசு சென்றிருந்தது.

தமிழக அரசின் முறையீட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபட நிராகரித்துள்ளது. சாமான்ய மக்கள் கலைஞனின் சுதந்திரத்தையும் பேச்சுரிமையையும் உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது. அத்தோடு, தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரான இதுபோன்ற வழக்குகளில் ஏன் ஆஜராகிறீர்கள் என தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியையும் நீதியரசர்கள் கடிந்து கொண்டிருக்கிறார்கள்.

திரு கோவன் அவர்கள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை விடிவுபெற அர்ப்பணிப்போடு பாடிவரும் ஒரு கலைஞர். காவல்துறை விசாரணைக்கு வருமாறு அழைத்தால் வரத் தயாராக இருப்பவர். உச்ச நீதிமன்றம் வரை சென்று, அதுவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரையே அமர்த்தி அவரை சிறையில் தள்ளத் துடிப்பது, அரசியலில் எதிர்க்கருத்து கொண்டோரைப் பழிவாங்க எந்த எல்லைக்கும் அதிமுக அரசு செல்லும் என்பதை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தி இருக்கிறது.

இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 190-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளைத் தொடுத்திருக்கிறது. ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய சகிப்பத்தன்மை அதிமுக அரசுக்குத் துளியும் இல்லை என்பதன் வெளிப்பாடே இது. ஆட்சியின் செயலற்ற தன்மையையும் தோல்வியையும் மறைப்பதற்காகவும், விமர்சிக்கும் தலைவர்களையும் பத்திரிகைகளையும் அலைக்கழித்து அச்சுறுத்தவுமே அவதூறு வழக்கு எனும் ஆயுதத்தை அதிமுக அரசு பயன்படுத்தி வருகிறது. அவதூறு வழக்குகளைத் தொடுப்பதில் முதலிடத்துக்கு வந்திருப்பது தமிழகத்துக்குப் பெருமை அல்ல. உயரிய ஜனநாயகப் பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டுக்கு இழுக்கு.

அருவருக்கத்தக்க நாலாந்தர நடையில் விமர்சித்துவிட்டு, ஆட்சியாளர்களிடம் சரணடைந்தவுடனே துதிபாடிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறப்பட்டுள்ளதன் மூலம், அரசியல் காரணங்களுக்காகவே அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன ஏற்கெனவே அம்பலமாகி இருக்கிறது.

அரசின் தவறுகளையும் தோல்விகளையும் சுட்டிக்காட்டி விமர்சிப்பது, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் உள்ள அடிப்படைக் கடமை. நியாயமான விமர்சனங்களைக்கூட அவதூறாகவும் ராஜதுரோகச் செயலாகவும் பார்க்கும் பார்வைக் கோளாறில் இருந்து மீண்டு, நிலுவையில் உள்ள அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட தமிழக அரசு முன்வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்தும், மக்கள் மன்றத்தின் கோபத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ள அதிமுக அரசுக்கு இதைத்தவிர வேறு வழியில்லை." என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close