Published:Updated:

7 மாதங்களுக்கு முன்பே விடுவிக்கப்படுகிறார் நடிகர் சஞ்சய் தத்!

7 மாதங்களுக்கு முன்பே விடுவிக்கப்படுகிறார் நடிகர் சஞ்சய் தத்!
7 மாதங்களுக்கு முன்பே விடுவிக்கப்படுகிறார் நடிகர் சஞ்சய் தத்!

புதுடெல்லி:  நடிகர் சஞ்சய் தத்,  வரும் பிப்ரவரி 27-ம் தேதி புனே எரவாடா சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 மாதங்களுக்கு முன்பே விடுவிக்கப்படுகிறார் நடிகர் சஞ்சய் தத்!

தனது தண்டனையை குறைக்கக் கோரி மகாராஷ்டிரா அரசிடம் அவர் தாக்கல் செய்த மனுவை மாநில உள்துறை ஏற்றுக் கொண்ட நிலையில் சஞ்சய் தத்தின் விடுதலை தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்த தாக சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கெனவே 18 மாத சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்ட அவர் எஞ்சியிருந்த தண்டைனையை மட்டும் அனுபவிக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் அவர் அவ்வப்போது பரோலில் வெளிவந்து சென்றார். அவரது பரோல்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இருப்பினும் தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி மகாராஷ்டிர மாநில அரசிடம் சஞ்சய் தத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நன்னடத்தையின் அடிப்படையில் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற சிறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று, அவரை தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன்னரே விடுவிக்க மகராஷ்ட்ரா அரசு முடிவு செய்துள்ளதாகவும்,  அவர் வருகிற பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.