பிப்.15 முதல் தமிழகத்தில் போலி வாக்காளர்கள் களையெடுப்பு!

பிப்ரவரி 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தெரிவித்துள்ளார்.
 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினேன். வாக்காளர்களுக்கு பணம், பரிசு உள்ளிட்டவை கொடுப்பதை தடுக்க வேண்டும், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும், இலவசங்கள், பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க வேண்டும். பதட்டமான வாக்குச்சாவடிகளில்  கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

சட்டமன்ற தேர்தலை நடுநிலையுடன் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். வாக்குப்பதிவை அதிகரிக்க சமூக வலைதளம் மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். 9 வட மாவட்டங்களில் துணை ராணுவம், அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். 20 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். வாக்குச்சாவடி மையங்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன.

தமிழகத்தில் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 18 வயது முதல் 19 வயது வரை 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிப்ரவரி 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!