வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (16/02/2016)

கடைசி தொடர்பு:15:20 (16/02/2016)

இடைக்கால பட்ஜெட் பொய் புனைவுகளின் தொகுப்பாகவே உள்ளது: கருணாநிதி காட்டம்!

சென்னை: அதிமுக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை ஜெயலலிதா பாராட்டு புராணமாகவும், பொய் புனைவுகளின் தொகுப்பாகவும் இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், "  ஐந்தாண்டு காலச் சாதனையா?

தமிழ்நாட்டின் கடன் சுமை 2,47,031 கோடி ரூபாய் !

அ.தி.மு.க. ஆட்சியின் இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையைப் புரட்டிப் பார்க்கும்போது, ஐந்தாண்டு கால இருண்ட வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பார்ப்பதைப் போல இருக்கிறது; விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் விளிம்பில் இருக்கும் தமிழக மக்களுக்கு கடுகளவேனும் ஆறுதல் அளிப்பதாக இல்லை.

இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை பற்றி விமர்சனம் செய்த அவர்களுடைய தொலைக்காட்சியே முதலமைச்சருக்கு ஓ.பி.எஸ். புகழாரம் - தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிய ஜெயலலிதா - மக்கள் மனம் மகிழ வளர்ச்சியை ஏற்படுத்திய ஜெயலலிதா - இலங்கைப் பிரச்னையில் உலகக் கவனத்தை ஈர்த்த ஜெயலலிதா என்று வர்ணித்ததைப் போல, பாராட்டு புராணமாகவும், பொய் - புனைவுகளின் தொகுப்பாகவும்தான் இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்