Published:Updated:

அணை விவகாரம்: தமிழக நலன் சார்ந்தே செயல்படுவோம்: ஞானதேசிகன்

Vikatan Correspondent
அணை விவகாரம்: தமிழக நலன் சார்ந்தே செயல்படுவோம்: ஞானதேசிகன்
அணை விவகாரம்: தமிழக நலன் சார்ந்தே செயல்படுவோம்: ஞானதேசிகன்

மதுரை, ஜன. 7: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழக நலன் சார்ந்தே செயல்படுவோம் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

அணை விவகாரம்: தமிழக நலன் சார்ந்தே செயல்படுவோம்: ஞானதேசிகன்

முல்லைப் பெரியாறு அணை-கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னைகளில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சிக்கு என சில சங்கடங்கள் உள்ளன. ஆனால், அப்பிரச்னை ஏற்பட்ட நாளிலிலிருந்து காங்கிரஸ் மாநிலத் தலைமையும் சரி, மத்திய அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள் என அனைவருமே தமிழகத்தை ஆதரித்து அறிக்கை விடுத்தும், மக்களவை முன்பு போராடியும், பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியும் வந்துள்ளோம்.

 கேரளத்திலும், மத்தியிலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, தமிழக காங்கிரûஸப் பொறுத்தவரை முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழக மக்கள் நலனை முன்னிறுத்தியே செயல்படும். தமிழக மக்கள் நலன் சார்ந்தே கட்சி இயங்கும். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அப்படி இல்லாமல் பிரதமர் எப்படி இதில் தலையிட்டு சமரசம் செய்ய முடியும்?

மீனவர் பிரச்னை: மீனவர் பிரச்னையில் இலங்கை மீனவர்களுடன் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன் அடிப்படையில், நமது மீனவர் சங்கப் பிரதிநிதிகளை சென்னை வந்த பிரதமருடன் சந்திக்க வைத்து மனு அளிக்க வைத்துள்ளேன். மனு அடிப்படையில் இலங்கை அரசுடன் பேசி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதுகுறித்து விரிவாக இப்போது பேசுவது சரியல்ல.

 கூடங்குளம் பிரச்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடுவோருக்கு வெளிநாட்டு பின்னணி இருக்கிறதா என மத்திய,மாநில அரசுகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். போராட்டக் குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளதாக மத்திய அரசுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, மாநில அரசும் மத்திய அரசுடன் இணைந்து போராட்டக் குழுவினர் மீது நடவடிக்கை எடுத்து கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட வழி ஏற்படுத்துவது அவசியம். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்க தமிழக காங்கிரஸ் வலியுறுத்தும் என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது பேச்சை முழுவதுமாக வாபஸ் பெறவில்லை. கேரள இடைத்தேர்தல் குறித்த கருத்தையே வாபஸ் பெற்றுள்ளார். மாநில எல்லை சீரமைப்பு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் சேர்ப்பது குறித்து பேசுவது சரியல்ல.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது ஏற்கெனவே தமிழக போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர். அதனடிப்படையில் நடவடிக்கை தொடர வேண்டும் என்றார்.