Published:Updated:

'எனக்கு முகநூல் கிடையாது; நான் திமுக-வை விமர்சிக்கவில்லை!'- மு.க.அழகிரி

மதுரை: எனது முகநூல் பக்கத்தில் நான் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து அழகிரி கூறிய கருத்துக்கு, அண்மையில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் "திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன். பலமுறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும்.

இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால் கட்சியைப்பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது" என்று அழகிரி பெயரிலான முகநூல் ஒன்றில் கூறப்பட்டிருந்தது.

'எனக்கு முகநூல் கிடையாது; நான் திமுக-வை விமர்சிக்கவில்லை!'-  மு.க.அழகிரி

இதற்கு மு.க.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''இன்று (நேற்று) 17.02.2016 மாலை எனது முகநூல் பக்கத்தில் நான் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. எனக்கு முகநூல் பக்கம் கிடையாது. நான் அப்படியொரு செய்தி கொடுக்கவில்லை. இந்த செய்தியை முற்றிலும் மறுக்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு