Published:Updated:

தமிழ் தெரியாமல் தவித்த ஐபிஎஸ் அதிகாரி மர்ம சாவு... அதிர்ந்து நிற்கும் காவல்துறை!

தமிழ் தெரியாமல் தவித்த ஐபிஎஸ் அதிகாரி மர்ம சாவு... அதிர்ந்து நிற்கும் காவல்துறை!
தமிழ் தெரியாமல் தவித்த ஐபிஎஸ் அதிகாரி மர்ம சாவு... அதிர்ந்து நிற்கும் காவல்துறை!

தமிழ் தெரியாமல் தவித்த ஐபிஎஸ் அதிகாரி மர்ம சாவு... அதிர்ந்து நிற்கும் காவல்துறை!

சென்னை; எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீசர்ஸ் மெஸ்சில் தங்கியிருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிஷ் இன்று காலை அவருடைய அறையில் பிணமாக கிடந்தது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

32 வயதை தொட்டுக் கொண்டிருக்கும் ஹரிஷ் திருமணமாகாதவர். பெங்களூருவைச் சேர்ந்த ஹரிஷ்,  2009-ம் வருடத்திய ஐ.பி.எஸ். பேட்ச். பொதுவாகவே வெளிமாநில கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகள், தமிழ்நாட்டில் சர்வீஸ் செய்வதை அதிகமாக விரும்புவார்கள். இங்குள்ள மக்களின் பண்பு, ஒரு சில மாநிலங்களில் 'கிடைப்பது' போல் அல்லாமல் இங்கு கிடைக்கும் கூடுதல்  மரியாதை, பாதுகாப்பு அம்சம் இப்படிப் பல விஷயங்கள் இதில் அடக்கம்.

தமிழ்நாட்டில் பணியாற்றிட ஆசைப்பட்டால் மட்டும் போதாது. யு.பி.எஸ்.சி விதிகளின்படி,  பணியாற்றிட விரும்பும் மாநில மொழியில் தேர்வெழுதி முறைப்படி தேர்ச்சி பெற்றால்தான் அந்த மாநிலத்தில் பணியாற்றிட முடியும்.

அசோக்குமார் (டி.ஜி.பி.), ஐ.பி.எஸ், திரிபாதி, ஜார்ஜ்,  அசுதோஷ் சுக்லா, அம்ரீஸ் பூஜாரி பிரவீன்குமார், அனில்குமார் சிங் என, பல வெளிமாநில கேடர் ஐ.பி.எஸ்-கள் தமிழ்நாட்டில் சர்வீஸ் செய்வது இப்படித் தேர்வு எழுதிதான். மதுரை தல்லாகுளம் சப்-டிவிஷனில் பணியில் இருந்த காலத்தில் இருந்தே  தமிழ்வழி தேர்வுக்கு முயற்சித்து... முயற்சித்து அதில் தோல்வி கண்டு வந்திருக்கிறார் ஹரிஷ்.

இரண்டுநாட்கள் முன்னர் எழும்பூரில் அவர் தங்கியிருந்த ஐ.பி.எஸ். ஆபீசர்ஸ் மெஸ்சுக்கு,  அவர் தந்தை பெங்களூருவில் இருந்து வந்து பார்த்து, மகனுக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போயிருக்கிறார். அந்த ஆறுதல் "கண்டிப்பாக" 'தமிழ்நாட்டில் பணியாற்றிட நீ தேர்ச்சி பெற்று விடுவாய்' என்பதாகத்தான் இருந்திருக்கும்.

"ஹரிஷ் தங்கியிருந்த அறை,  இன்று காலை வெகுநேரமாகியும் திறக்காமல் இருக்கவே 'சர்வீஸ்' செக்‌ஷன் 'பாய்ஸ்'கள் கதவைத் தட்டியுள்ளனர். பதில் இல்லாமல் போகவே ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது ஹரிஷ் கட்டிலில் தூக்கத்தில் கிடப்பது போல் கிடந்தார். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போய்ப் பார்த்த பின்னர்தான் அவர் இறந்து போயுள்ளது தெரியவந்தது" என்கின்றனர்  போலீஸ் தரப்பில்.

அவரது அறையில் வெகுவாக உறுத்திய ஒன்று, "நாற்பது நாட்களில் தமிழ் கற்றுக் கொள்வது எப்படி " என்ற புத்தகம்தான்.

- ந.பா.சேதுராமன்

அடுத்த கட்டுரைக்கு