Published:Updated:

திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறாது: ஜிகே வாசன் அதிரடி!

திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறாது: ஜிகே வாசன் அதிரடி!
திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறாது: ஜிகே வாசன் அதிரடி!

திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறாது: ஜிகே வாசன் அதிரடி!

சென்னை: தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெறாது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான  பலம் த.மா.கா.வுக்கு இல்லை. எனவே, மக்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைத்து த.மா.கா. போட்டியிடும்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருப்பதால், அந்த கூட்டணியில் த.மா.கா. இடம் பெறாது. எக்காரணத்தைக் கொண்டும் த.மா.கா.வின் தனித்தன்மையை இழக்க மாட்டோம். காங்கிரசில் இருந்த 75 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளால் தொடங்கப்பட்டது இந்த கட்சி. எனவே, ஒரு போதும் காங்கிரஸ் உள்ள கூட்டணியில் இடம் பெறமாட்டோம்.

அடுத்த வாரத்தில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு