Published:Updated:

விஜயகாந்தின் தனித்து போட்டி அறிவிப்பு... தலைவர்களின் கருத்துக்கள்!

விஜயகாந்தின் தனித்து போட்டி அறிவிப்பு... தலைவர்களின் கருத்துக்கள்!
விஜயகாந்தின் தனித்து போட்டி அறிவிப்பு... தலைவர்களின் கருத்துக்கள்!

விஜயகாந்தின் தனித்து போட்டி அறிவிப்பு... தலைவர்களின் கருத்துக்கள்!

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தனித்து போட்டி என்ற அறிவிப்பு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

விஜயகாந்தின் தனித்து போட்டி அறிவிப்பு... தலைவர்களின் கருத்துக்கள்!

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தே.மு.தி.க. மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு கட்சியின் தலைவர்களும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அழகிரி...

தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்ற விஜயகாந்தின் முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறும்போது, ''தி.மு.க.வில் ஸ்டாலின் உள்ளவரை கூட்டணிக்கு விஜயகாந்த் வரமாட்டார். தனித்து போட்டி என்ற விஜயகாந்தின் அறிவிப்பு, தி.மு.க.விற்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது" என்று தெரிவித்து உள்ளார்..

விஜயகாந்தின் தனித்து போட்டி அறிவிப்பு... தலைவர்களின் கருத்துக்கள்!

தமிழிசை...

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவிக்கும்போது, ''விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த முயற்சிக்கு இது தோல்வி அல்ல. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என முயற்சி செய்தோம்.

கூட்டணி அமையாவிட்டாலும் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்கும். அந்த துணிச்சல் பா.ஜ.க.வுக்கு இருக்கிறது. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் அவரவர் பலத்தை காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.

திருமாவளவன்...

விஜயகாந்தின் தனித்து போட்டி அறிவிப்பு... தலைவர்களின் கருத்துக்கள்!

தனித்து போட்டியிடும் தே.மு.தி.க. அறிவிப்பை வரவேற்பதாக திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ''வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்தை அழைத்தோம்.

தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுவது ஜனநாயகத்தை பலப்படுத்துவதாக அமையும். இதன் மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை ஏற்படுத்துவார்கள்" என்றார்.

இதேபோல் விஜயகாந்தின் தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

விஜயகாந்தின் தனித்து போட்டி அறிவிப்பு... தலைவர்களின் கருத்துக்கள்!

அன்புமனி...

பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமனி ராமதாஸ் இது குறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தனித்துப் போட்டி என்ற விஜயகாந்த் அறிவிப்பு நம்பகத்தன்மை அற்றது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டி என அறிவித்து இருந்தார் விஜயகாந்த். கடைசி நேரத்தில் பா.ஜ.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு