Published:Updated:

விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!

விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!
விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!

விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை ஏன் தெரியுமா என்று தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டத்தில் விளக்கினார் பிரேமலதா.

விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் தினத்தை ஒட்டி, தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கவிருந்த கூட்டம், மாலை 5 மணி வரை தள்ளிப் போனது. அதுவரை, விஜயகாந்த் நடித்த படங்களின் பாடல்களுக்கு மேடையில் நடனக் கலைஞர்கள் ஆட்டம்போட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்து வந்திருந்த மகளிர் அணி உறுப்பினர்கள், நிகழ்ச்சி தொடங்கியவுடன் அனைத்துக் கட்சிகளையும் விளாசத் தொடங்கினர். ''அன்புமணிக்கு என்ன தகுதி இருக்கிறது கேப்டன் பற்றிப் பேச? அவர் மாநாட்டை ஜபக் கூட்டம் போல் நடத்துகிறார். ஒரு தெருவில் இரண்டு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது, சீமான் பேசிய ஆடியோவை போட்டு விட்டேன். நாய்களே ஓடிவிட்டது. அந்த நாஞ்சில் சம்பத் பல நூறுக்கும், காருக்கும் விலை போகிறவர். அந்த அம்மாவுக்கு வயதாகிவிட்டாலும் இன்னும் "செல்வி" என்றே போட்டுக் கொள்கிறார். அவர் கட்சியில் இருக்கும் மற்ற பெண்களும் இப்படித் தான் செய்கின்றனர் என்று ஆளாளுக்கு வசைப்பாடினர்.

விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!

முதலில் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்தை தெரிவித்து கொண்டு தன் உரையை ஆரம்பித்த பிரேமலதா, ''மகளிர் அணி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக தேசய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சகோதரிகள் இங்கு மஞ்சள் சீருடை உடுத்தி ஆண்களுக்கு நிகராக வீர நடை போட்டு வந்துள்ளனர். இதற்கு முழுக் காரணம் ராணுவக் கட்டுப்பாட்டோடு இந்தக் கழகத்தை வழி நடத்திச் செல்லும் கேப்டன்தான். ஒரு ஆண்மகன் பொதுக் கூட்டத்திற்கு வருவது சாதாரண விஷயம். ஆனால், இத்தனை பெண்கள் கூடி வருவது நாம் இதுவரைக் கண்டிராதது.

ஜெயலலிதா முதலில் மூன்று "P"யை வைத்து ஆட்சி நடத்தினார். தற்போது நம்பரை வைத்து ஆட்சி நடத்துகிறார். 'P' என்றால் Police, Press, Panneerselvam. இவர்களை வைத்துதான் ஆட்சி நடத்தினார். இப்போது "நம்பர்" ஆட்சி செய்து வருகிறார். 110 விதி, எதற்கெடுத்தாலும் 144 தடை, ஐவர் அணி என இது இன்னொரு பக்கம் இருக்கிறது. நம்பர்களை சொல்லி பெண்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா.

விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!

தே.மு.தி.க. கட்சி, கேப்டன் ரசிகர் மன்றாமாக இருந்து இப்போது அரசியல் கட்சியாக மாறியுள்ளது. பேசத் திராணியின்றி முற்றிலும் முடங்கிப் போயிருக்கிறார் ஜெயலலிதா. நம் தயவு இல்லை என்று சொன்னவுடன், வேட்பாளர் பட்டியலை அவர்களால் அறிவிக்க முடியவில்லை.

இத்தனை வருடங்களாக இல்லாமல், தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய மோடிக்கு கடிதம் எழுதுகிறார். அவருடைய நோக்கமெல்லாம், மறுபடியும் பொதுமக்கள் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்க வேண்டும் என்பது தான்.

காவல் துறை ஏவல் துறையாக மாறி, ஏளனம் செய்யக் கூடிய துறையாகி விட்டது. மழைக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரண நிதி, கட்சி அலுவலகத்தில் இருந்தோ, அவர் சொந்தக் காசில் இருந்தோ கொடுக்கப்பட வில்லை. அது மத்திய அரசாங்கம் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. உங்களில் எத்தனை பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது? 40 லட்சம் பேருக்கு இன்னும் நிவாரண நிதி சென்றடையவில்லை என்று அறிக்கை வந்துள்ளது.

நம்மூர் பெண்களை 100 ரூபாய் சேலைக்கு அலைக்கழித்து, தன்மானத்தை இழக்கச் செய்கிறார். எங்காவது இலவசம் என்றால் ஆண்கள் முந்தியடித்துச் சென்று வாங்கி பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் டாஸ்மாக்கை நோக்கித் தான் ஓடுவார்கள். கேப்டன் சொல்வது போல, "வறுமை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும். வறுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தால் தான் இலவசம் ஒழியும்!"

இந்த ஐந்து வருடங்களில், மாதத்திற்கு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு வைப்பேன் என்று அந்த அம்மா கூறினார். எங்கு வைத்தார்? இது சாதனை ஆட்சி அல்ல. வேதனை ஆட்சி.

தி.மு.க. - தில்லு முல்லுக் கட்சி. அ.தி.மு.க. - அனைத்திலும் தில்லு முல்லுக் கட்சி. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. மூவருக்கும் முழுப் பக்க விளம்பரம் தேவைப் படுகிறது. தே.மு.தி.க. செய்யப்போவது, நேர்மையான் அதிகாரிகளைக் கொண்டு லஞ்சம் இல்லாத ஆட்சி.

தொடர்ந்து அவர் பேசுகையில், '' கடந்த எம்.பி. தேர்தலில் 14 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட்டது. அதில் கிடைத்த வாக்குகளை மட்டும் வைத்து கணக்கு போட்டீர்கள். மீதி இருக்கும் 26 தொகுதிகளின் கணக்கு எங்கே போனது? ஜெயலலிதாவிற்கு பிடித்தது தான் கருத்துக் கணிப்பு. அது கருத்துக் கணிப்பல்ல, கருத்துத் திணிப்பு.

கேப்டன் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். அவருக்கு சைனஸ் பிரச்னை உள்ளது. ஒரு மூக்கு எப்போதுமே அடைத்து தான் இருக்கும். அவருக்கு டான்சில்ஸும் உள்ளதென்று எத்தனை பேருக்குத் தெரியும்? எம்.ஜி.ஆர். குண்டடிப்பட்டபோது, பேசுவது புரியவில்லை என்றார்கள். காமராஜர் படிக்கவில்லை என்றார்கள். ஆனால், இன்றுவரை அனைவர் மனதில் இருப்பதும் அவர்கள் இருவரும் தான். விஜய்காந்தும் அதுபோன்றவர் தான்" என்று பேசி முடித்தார்.

அதன் பிறகு மேடைக்கு பலத்த கர ஒலிகளுக்கு நடுவே வந்த விஜயகாந்த, ''விஜயகாந்திற்கு பேசத் தெரியாது என்கிறார்கள். என் கட்சியைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்கள் யாரும் வழி நடத்த வேண்டாம். அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் ஜால்ரா அடிக்கத் தான் லாயக்கு. விஜயகாந்த் எங்கு போகப் போகிறார். தி.மு.க.வா? பா.ஜ.க.வா? உங்களுக்கு என்ன? இதை என் கட்சி தொண்டர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும்" என்றார்.

அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு தொண்டர் எழுந்து, "தலைவா, நம்ம தான் கெத்து!" என்று கத்த, "நான் பேசும்போது குறுக்க பேசக் கூடாது" என்று அவரை அதட்டி அமர வைத்து தொடர்ந்த விஜயகாந்த், ''என்னைப் பற்றி பேசுவதைப் போல ஜெயலலிதா அம்மாவைப் பற்றியும் பேசுங்களேன். பத்திரிக்கையாளர்களுக்கான உரிமையை தே.மு.தி.க என்றுமே வழங்கிவிடும்.

யாருடனும் நான் பேரம் பேசவில்லை. என்னைத் தேடி வந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த முறை தே.மு.தி.க தனித்துப் போட்டியிடப் போகிறது!" என்று விஜயகாந்த் கூறியவுடன், அரங்கமே ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. உடனே, ''இங்கு வந்திருக்கும் மகளிர் அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த "மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" என்று கூறி அத்துடன் தன் உரையை முடித்துக் கொண்டார்

சில ருசிகர துளிகள்...

* சினிமா பாடல்களுடன் துவங்கிய   பொதுக்கூட்டத்தில், தேச தலைவர்களை போல் வேடமிட்டவர்களின் ஆடல் பாடலுடன் நடனம் நடைபெற்றது

* சில மாவட்ட செயலாளர்கள் திருவள்ளூவர், பாரதியாரின் பாடல்களை விஜயகாந்துக்கும், பிரேமலாதவிற்கு ஒப்பிட்டு பேசினர்.

*
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் இதையெல்லாம் பேசுங்கள் என்று அறிவுறுத்தியதாக இந்த பொதுக்கூட்டம் இருந்தது.

* சென்னை மேற்கு மாவட்ட    செயலாளர் மகாலட்சுமி, நாஞ்சில் சம்பத்தை திட்டி தீர்த்தார். அதேபோன்று, பா.ம.க. ராமதாஸ், நாம் தமிழர் சீமான் என தே.மு.தி.க.வை விமர்சனம்  செய்கிறவர்களையும் அவர் விளாசி தள்ளினார்.

* இந்த மகளிரணி பொதுக்கூட்டத்திற்கு பிரேமலதாவின் அம்மா வந்திருந்தார். அவரை தே.மு.தி.க. பிரமுகர்கள் கை தாங்களராக பிடித்து அழைத்து வந்து அமர வைத்தனர். அவர், முதல் முறையாக இந்த மகளிரணி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

* இந்த பொதுக்கூட்டத்தில், முதலமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு எப்படி இருக்குமோ அப்படியே, தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையின் உளவுப்பிரிவினர் போல் அவர்களில் சிலர், ஆங்காங்கே கண்காணித்து கொண்டிருந்தனர்.

* விஜயகாந்த பேசிய முடிக்கும்போது கடைசியாக, பெறுப்பாக நீங்கள் அனைவரும் வீடு போய் சேர்ந்தீர்களா என்று மாவட்ட செயலாளர்களிடம் கேட்பேன்" என்று அன்போடு கூறி முடித்தார்

மு.சித்தார்த்
- கே.புவனேஸ்வரி

படங்கள்:
மா.பி.சித்தார்த்
(மாணவ பத்திரிக்கையாளர்)

அடுத்த கட்டுரைக்கு