Published:Updated:

நிதி ஒதுக்கவில்லை.. இரட்டை ரயில் பாதை பணி முடிய 3 ஆண்டாகும்... இதுதான் பதில்!

Vikatan Correspondent
நிதி ஒதுக்கவில்லை.. இரட்டை ரயில் பாதை பணி முடிய 3 ஆண்டாகும்... இதுதான் பதில்!
நிதி ஒதுக்கவில்லை.. இரட்டை ரயில் பாதை பணி முடிய 3 ஆண்டாகும்... இதுதான் பதில்!

மதுரை முதல் குமரி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில்குமார் கர்க் தெரிவித்தார்.

நிதி ஒதுக்கவில்லை.. இரட்டை ரயில் பாதை பணி முடிய 3 ஆண்டாகும்... இதுதான் பதில்!

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி திறக்கப்பட உள்ள இந்த எஸ்கலேட்டர் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க், "பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அதிகமான வசதிகள் செய்யப்படுகிறது. மதுரை முதல் குமரி வரையிலான இரட்டை ரயில்பாதைக்கான பணிகளை தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டிலும் 100 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பணிகள் மெதுவாகவே நடக்கிறது. இந்த பணிகள் முடிவடைய மூன்று வருட காலமாகும். செங்கோட்டை முதல் கேரளாவின் புனலூர் வரையிலான மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 

நிதி ஒதுக்கவில்லை.. இரட்டை ரயில் பாதை பணி முடிய 3 ஆண்டாகும்... இதுதான் பதில்!

மலைப்பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த பணிகள் மெதுவாக நடந்தது. இன்னும் ஒரு குகைப்பாதை அமைக்கும் பணி மட்டுமே நிறைவடைய வேண்டியதிருப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மார்க்கத்தில் ரயில்கள் செல்லத் தொடங்கும்’’ என்றார்.

-ஆண்டனிராஜ்

படங்கள்:
எல்.ராஜேந்திரன்