Published:Updated:

தனித்து போட்டி என்ற விஜயகாந்தின் முடிவு - மக்கள் கருத்து என்ன? (வீடியோ)

Vikatan Correspondent
தனித்து போட்டி என்ற விஜயகாந்தின் முடிவு - மக்கள் கருத்து என்ன? (வீடியோ)
தனித்து போட்டி என்ற விஜயகாந்தின் முடிவு - மக்கள் கருத்து என்ன? (வீடியோ)

மிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்து வந்தன.

ஆனால், இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் (10-ம் தேதி) சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த தே.மு.தி.க. மகளிர் தின விழாவில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

அவரது இந்த முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

விஜயகாந்த்தின் தனித்து போட்டி என்ற முடிவு சரியானதுதானா? இதனால், அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டது விகடன்.