அட, காங்கிரஸ் சீனியர்களுக்கு வாய்ப்பளித்த ஜி.கே.வாசன்! | TN Assembly elections: TMC candidate list Release

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (19/04/2016)

கடைசி தொடர்பு:12:58 (19/04/2016)

அட, காங்கிரஸ் சீனியர்களுக்கு வாய்ப்பளித்த ஜி.கே.வாசன்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 26 தொகுதிகளுக்கான தமாகா வேட்பாளர் பட்டியலை,  அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியுடன்,  ஜி.கே.வாசனின் தமாகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் தமாகாவுக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  கூட்டணியில் உள்ள கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், கடைசியாக தமாகா இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்

1) ராயபுரம் - பிஜூ சாக்கோ
2) மயிலாப்பூர் - ஏ.எஸ்.முனவர் பாட்சா
3) காட்பாடி - டி.வி.சிவானந்தம்
4) அணைக்கட்டு - பி.எஸ்.பழனி
5) வாணியம்பாடி - ஞானசேகரன் முன்னாள் எம்எல்ஏ
6) பர்கூர் - எம்.ஆர்.ராஜேந்திரன்
7) கிருஷ்ணகிரி - ஆர்.ஜெயப்பிரகாஷ்
8) திருக்கோவிலூர் - டி.ஜி.கணேஷ்
9) சங்ககிரி - கே.செல்வகுமார்
10) சேலம் வடக்கு - ஆர்.தேவதாஸ் முன்னாள் எம்பி

11) நாமக்கல் - என்.இளங்கோ
12) பெருந்துறை - சண்முகம்
13) மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முகசுந்தரம்
14) மடத்துக்குளம் - ஏ.எஸ்.மகேஸ்வரி முன்னாள் எம்எல்ஏ
15) கிருஷ்ணராயபுரம் (தனி) - கே.சிவானந்தன்
16) முசிறி - எம்.ராஜசேகரன் முன்னாள் எம்எல்ஏ
17) கடலூர் - ஏ.எஸ்.சந்திரசேகர்
18)  பூம்புகார் - எம்.சங்கர்
19) பாபநாசம் - எஸ்.டி.ஜெயக்குமார்
20) திருமயம் - பி.எல்.ஏ.சிதம்பரம்

21) மேலூர் - டி.என்.பாரத் நாச்சியப்பன்
22) கம்பம் - ஓ.ஆர்.ராமச்சந்திரன் முன்னாள் எம்எல்ஏ
23) விளாத்திகுளம் - பி.கதிர்வேல்
24) ஸ்ரீவைகுண்டம் - எஸ்.டி.ஆர்.விஜயசீலன்
25) தென்காசி - என்.டி.எஸ்.சார்லஸ்
26) கிள்ளியூர் - ஜான் ஜேக்கப் எம்எல்ஏ

சட்டமன்ற தேர்தலில், யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக பல மாதங்களாகவே போக்கு காட்டி வந்தார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், ஆனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், இதனாலேயே கூட்டணி அமையவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியில் கூட்டணி சேர்வதாக ஜி.கே.வாசன் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தேர்தலி்ல் நான் போட்டியிட மாட்டேன் என்றும் ஜி.கே.வாசன் அறிவித்துவிட்டார். கூட்டணியால் அதிருப்தி அடைந்த பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட சில நிர்வாகிகள் தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இந்த சூழ்நிலையில், தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து தொகுதி பங்கீடு வரை தமாகாவுக்காக உழைத்த ஞானதேசிகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவரே இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்