ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல் | puthiya tamilagam party candidates list released

வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (20/04/2016)

கடைசி தொடர்பு:13:04 (20/04/2016)

ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல்

 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு நான்கு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளன.

இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் மீண்டும் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். வாசுதேவநல்லூர் தொகுதியில் அன்பழகனும், ஸ்ரீவில்லிபுத்தூரில் முத்துக்குமாரும், கிருஷ்ணராயபுரத்தில் வி.கே.ஐயரும் போட்டியிடுகின்றனர். இவை அனைத்தும் தனித் தொகுதிகள் ஆகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்