'மதிமுக கட்டுப்பாட்டில் தேமுதிக!'- திமுகவில் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பகீர்!

 

தேமுதிக திருப்பூர் மாவட்டச் செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். அப்போது, மதிமுக கட்டுப்பாட்டில் தேமுதிக இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டார்.

திருப்பூர், தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக இருந்தவர் கீர்த்தி சுப்பிரமணியம். இவர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, பல்லடம் தொகுதியில் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் பல்லடம் தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் கீர்த்தி சுப்பிரமணியம் அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து தே.மு.தி.க.வில் இருந்து விலகிய சுப்பிரமணியம், மேல்மருவத்தூரில் தங்கியிருந்த மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று தி.மு.க.வில் சேர்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுப்பிரமணியம், "தேர்தலில் போட்டியிட கண்டிப்பாக சீட் தருவதாக கட்சி தலைமை கூறி இருந்தது. ஆனால், தற்போது பல்லடம் தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதில் எங்களுக்கு உடன் பாடு இல்லை. நான் ஏமாற்றப்பட்டதால் தி.மு.க.வில் சேர்ந்தேன். தற்போது தேமுதிக, மதிமுக கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று கூறினார்.
 
ஏற்கனவே விஜயகாந்த் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 3 எம்.எல்.ஏ.க்களும், 6 மாவட்டச் செயலாளர்களும் தே.மு.தி.க.வில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!