Published:Updated:

திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி தயாரிக்கவில்லை! கனிமொழி

திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி தயாரிக்கவில்லை! கனிமொழி
திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி தயாரிக்கவில்லை! கனிமொழி

திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி தயாரிக்கவில்லை! கனிமொழி

திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி தயாரிக்கவில்லை! கனிமொழி

சிதம்பரம்; திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி தயாரிக்கவில்லை என்றும் தமிழக மக்களுக்காக மக்களால்  தயாரிக்கப்பட்டதுதான் திமுக தேர்தல் அறிக்கை  என்று சிதம்பரத்தில்  கனிமொழி எம்.பி பேசினார்.       
                           
சிதம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.செந்தில் குமாரை ஆதரித்து, சிதம்பரம் மேலவீதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “ செய்வீர்களா?செய்வீர்களா? என்று உங்களிடம் கேட்டவர், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த   5 வருடத்தில் ஒன்றுமே செய்யவில்லை. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், பொது மக்கள், என்று யாரையுமே சந்திக்காத ஒரே முதல்வர்  ஜெயலலிதாதான்.

ஒரு முதல்வர் கோட்டைக்கு வருவதென்பது  தேர் திருவிழாபோல இருக்கிறது இந்த ஆட்சியில். 5 வருடத்தில் எந்த நிர்வாக முடிவும் எடுக்கவில்லை.

எந்த அதிகாரியும், எந்த அமைச்சரும், பொது மக்களும் சென்று பார்க்க முடியாதவராக முதல்வர் ஜெயலலிதா உள்ளார். இந்த அம்மையாருக்கு வெயில் சுட்டு எரிப்பது கூட தெரியவில்லை. அதிமுகவினர் பகல் 2 மணி, 3 மணி  என கூட்டத்திற்கு மக்களை அழைத்து வந்து வெயிலில் சாகடிக்கிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி தயாரிக்கவில்லை. தமிழகத்து மக்களாக தயாரிக்கப்பட்டதுதான் திமுக தேர்தல் அறிக்கை. ஜெயலலிதா மக்களுக்கு தரமற்ற இலவச பொருட்களை கொடுத்து ஏமாற்றி விட்டார். மின்கட்டணம், பால், பஸ் கட்டணம் அனைத்தையும் உயர்த்திவிட்டு, உள்கட்டமைப்புகள் எதுவும் செய்யவில்லை. மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது எதுவுமே கிடைக்கவில்லை இந்த 5 வருடத்தில்,எந்த கால்வாய்களும்,ஏரிகளும் தூர் வாரப்படவில்லை. தூர் வாரி இருந்தால் இந்த வெள்ள பாதிப்பு கடலூர் மாவட்டத்தில்  ஏற்பட்டு இருக்காது.

கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிக்ஸி,​​ கிரைண்டர்,​​ மின்விசிறி எதுவும் ஓட​வில்லை.​ அதை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.​ ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்​ப​ட​வில்லை.​ மின் கட்டணம்,​​ பேருந்துக் கட்டணம்,​​ பால் ஆகியவை விலை உயர்த்தப்பட்​டது.​ 5 ஆண்டு​களாக சாலைகள் போடப்படவில்லை.​ முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது.​

கட​லூர் மாவட்​டத்​தில் வெள்ள நிவா​ர​ணம் முறையாக வழங்கப்படவில்லை.​ மின்வெட்டே இல்லை என்று முதல்வர் பொய் சொல்கிறார். ஒரு தொழிற்சாலை கூட ஏற்படுத்தி தரவில்லை.தமிழக விவசாயிகளுக்கு சரியான விலை கொடுக்கப்படவில்லை. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் கள்.பெண்கள் மதுவிலக்கு கேட்கிறார்கள். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு தான். திமுக ஆட்சிக்கு  வந்தால் அண்ணாமலை பல்கலைக் கழக பிரச்சினைகள்   அனைத்தும் தீர்க்கப்படும். பிச்சாவரம்,சிதம்பரம், சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், கால்வாய்கள் தூர்வாரப்படும் என்றார்.

மேடையில் கனிமொழி பேசிக்கொண்டிருந்த அதேநேரம் 'இவங்க என்னமோ இப்போதான் புதுசா கட்சி துவங்கி ஆட்சிக்கு வரப்போறவங்க மாதிரி பேசறாங்க. இவங்க ஆட்சியில் இதையெல்லாம் முறையாக செய்திருந்தா இப்போது ஏன் இவர்கள் மக்களிடம் ஓட்டு கேட்டு வர்ற நிலை வந்திருக்கு. ' என்றார் நம் அருகிலிருந்து முதியவர் ஒருவர்.

அட, உண்மைதான்!

- மு.ஜெயராஜ், த.எழிலரசன்
(மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

அடுத்த கட்டுரைக்கு