நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட..! மனோபாலா கலகல | Manobala campaign

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (06/05/2016)

கடைசி தொடர்பு:15:35 (06/05/2016)

நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட..! மனோபாலா கலகல

 

'நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டாய்' என்று ஒரு படத்தில் நடிகர் வடிவேலு புலம்புவது போல ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று திருவாரூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் மனோபாலா இவ்வாறு பேசினார்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் நேற்று அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர் செல்வத்தை ஆதரித்து இயக்குநரும், நடிகருமான மனோபாலா பேசுகையில், 94 வயதில் முதல்வர் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு, இது தான் எனக்கு கடைசித் தேர்தல் என்று கூறி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. இவர் இதேபோலவே ஒவ்வொரு தேர்தலிலும் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்.  காமராஜரை பார்த்து உங்களுக்கு இன்னும் முதல்வர் பதவி தேவையா என்று கேள்வி கேட்ட நீங்கள், 94 வயதில் முதலமைச்சராக வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.

நாங்கள் கேட்கிறோம், ஏன் உங்கள் வீட்டிலேயே ஒருவர் இருக்கிறார்.  துணை முதல்வராக இருந்த ஸ்டாலினை முதல்வராக்க வேண்டியது தானே. 'நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டாய்' என்று ஒரு படத்தில் நடிகர் வடிவேலு புலம்புவது போல ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார்.  அதிமுக வேட்பாளர்களும், வாக்காளர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். காரணம் வெற்றி நம் பக்கம் என்பதால் தான்.

திமுக ஆட்சியில் பதினெட்டு மணிநேரம் மின்வெட்டு இருந்தது.  மருத்துவர்கள் கூட அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தவித்தனர்.  திமுக ஆட்சியில் நிலவிய மின் பற்றாக்குறையால் ஏற்பட்ட இருளை மீட்டெடுத்து மின்மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றியவர் ஜெயலலிதா. மாணவர்களுக்கு காலணி முதல் கணினி வரை கொடுத்து கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

தவிர தாய்மார்கள் குழந்தை பெற்றால் மட்டும் போதும், அக்குழந்தை வளர அம்மாபெட்டகம் மூலம் பதினாறு பொருள்களை கொடுத்துள்ளார்.  ஜெயலலிதாவின் திட்டங்களால் மகிழ்ச்சியாக வாழ்ந்த மக்கள் அதே மகிழ்ச்சியில் இருக்க மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
        
கூடா நட்பு கேடாய் விளையும் எனக்கூறிய மனோபாலா, காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஏன் கூட்டணி வைத்தார்கள். ஈழத் தமிழர்களை கொன்று குவித்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செய்தி, படம்: த.க.தமிழ் பாரதன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்