'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!’

. - கறுத்த மைக் பிடித்து கட்டைக் குரலில் கருப்பசாமி பாட ஆரம்பித்தால், குதூகலிக்கும் கூட்டம் 'ஒன்ஸ்மோர்’ கேட்கும். அவர்கள் கேட்காவிட்டாலும் பாடுவார் கருப்பசாமி. மதுரையில் சமீபத்தில் அ.தி.மு.க. கூட்டிய மெகா கூட்டத்தில் மெட் டெடுத்துப் பாடி 'அம்மா’வின் மனதில் இடம் பிடித்த கருப்பசாமி, தொகுதி மக்கள் மனதில் இடம்பிடித்து இருக்கிறாரா?!.
சங்கரன்கோவில் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகத் தொடர்ந்து மூன்றாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இதோ 15 ஆண்டுகளை முடிக்கப்போகிறார் கருப்பசாமி. சங்கரன்கோவில் அருகில் உள்ள புளியம்பட்டியில் வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர். அ.தி.மு.க-வின் உறுப்பினராக ஆரம்பித்து, ஒன்றிய, நகரச் செயலாளர் களுடன் சேர்ந்து

சுறுசுறுவெனக் கட்சி வேலை செய்தவர். ஒரு கட்டத்தில் சங்கரன்கோவில் ஒன்றியச் செயலாளர் பொறுப்புக்கு வந்து அத்தனை பேரையும் ஆச்சர்யப்படவைத்தார்.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், 1996-ம் ஆண்டு தேர்தலில் தலைமை இவரை சங்கரன்கோவில் தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது. அ.தி.மு.க-வின் கோட்டை என்பதால், மிக எளிதாக ஜெயித்த கருப்பசாமி சட்டசபை நோக்கி நடந்தபோது, 'எலேய் கருப்பு இது கனவா... நெனவாலே?’ என்று ஆச்சர்யத்தில் தன் கையை தானே கிள்ளிக்கொண்டாராம். 15 ஆண்டுகள் உருண்டோடியும், இன்னமும் அதே ஆச்சர்யத்தில் இருப்பதுதான் கொடுமை!

குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியப் பகுதிகளை ஒரு ரவுண்ட் வந்து மக்களிடம் பேசியபோது ''எங்க மன சறிஞ்சு சொல்றோம்... இந்த மனுஷனாலே (கருப்பசாமி) தொகுதிக்கு அஞ்சு பைசாவுக்கு பிரயோசனம் இல்லே. மழைக் காலம் வந்தா, கொஞ்சம் தப்பிச்சோம். மத்தபடி தொகுதி முழுக்கத் தண்ணீர்ப் பிரச்னை பேயாட்டம் ஆடுது. ஓரளவு படிச்சுட்டு நல்ல வேலை கிடைக்காம வெட்டியா அலையுற இளந்தாரிக ஏகப்பட்ட பேரு இருக்குறாக. ஒரு தொழிற்சாலை, ஒரு கவர்மென்ட் கம்பெனியும் கொண்டுவரலை. எதையும் இந்த எம்.எல்.ஏ. பண்ணலை. இவரு கொஞ்சம் முயற்சி பண்ணி இருந்தா... மெடிக்கல் காலேஜ், இன்ஜினீயரிங் காலேஜ், கவர்மென்ட் காலேஜ்னு கொண்டு வந்திருக்கலாம். ம்ஹூம்... எதுவும் செய் யலை. இவரு முதல் தடவையா எம்.எல்.ஏ-வான வருஷத்தில் பிறந்த குழந்தைங்ககூட இன்னிக்கு பத்தாம் கிளாஸ் பாஸ் பண்ணிடுச்சுங்க. ஆனா, ஒரு உருப்படியான திட்டத்தையும் கொண்டுவராம கருப்பசாமி ஃபெயிலாகிக் கிடக்குறார்!'' என்று

பஞ்ச் வைத்தனர்.

இந்தத் தொகுதியில் ஓரளவு செல்வாக்கு வைத்திருக்கும் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், புதிய தமிழகம் போன்றவை அ.தி.மு.க-வுடன் கூட்டணி யில் இருக்கின்றன. ஆனாலும்கூட அவர்கள் கருப்பசாமியை விமர்சிக்கத் தயங்கவில்லை. ''அ.தி.மு.க-வோட வலுவான தொகுதிங்கிறதால், கூட்டணிக் கட்சிகளுக்கு இதை விட்டுக்கொடுக்க அநேகமா அந்த அம்மா விரும்ப மாட்டாங்க. வர்ற தேர்தல்ல அ.தி.மு.க-வுக்காகப் பிரசாரம் பண்றதுக்கு எந்தத் தைரியத்தில் போகப்போறோம்னு எங்களுக்குத் தெரியலை. அந்த அளவுக்கு எம்.எல்.ஏ. தன்னோட பெயரைக் கெடுத்து வெச்சிருக்கார். கருப்பசாமியோட காலத்தில், அவரோட முயற்சியில் கொண்டுவந்ததா சொல்லிக்க, எந்தத் திட்டமும் இல்லை. அஞ்சு வருஷம் ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சராவும் இருந்திருக்கிறார். சரி, தலித் மக்களுக்காச்சும் ஏதாச்சும் பண்ணி இருக்காரான்னு பார்த்தா... அதுவும் கிடையாது! சங்கரன்கோவில் தொகுதி மக்கள் கொதிச்சுக்கிடக்கிறாங்க!'' என்று கூட்டணிக் கட்சியினரே புலம்பிச் சலிக்கிறார்கள்.

சங்கரன்கோவில் நகரம் மற்றும் நீலித நல்லூர் பகுதிகளில் இறங்கிப் பேசினோம். ''இந்த ஏரியாவில் 'பூ’ விளைச்சல் அதிகம். ஏற்றுமதியாகிற அளவுக்குத் தரமான பூக்கள் விளையுது. ஆனா, இந்தப் பூக்களைக்

கெடாமல் பதப்படுத்திவைக்க நவீன வசதிகள் இல்லை. கருப்பசாமிகிட்டே இதைப் பல தடவை வலியுறுத்தியும் கண்டுக்காமல் இருக்கிறார். இதே அளவுக்கு மோசமான நிலைமைதான் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கும். கிராமத்தில் பிறந்த மனுஷனான கருப்பசாமி இப்படி விவசாயிங்களுக்கு வஞ்சனை பண்றதை என்னன்னு சொல்றது?

நீலிதநல்லூர் பகுதியைத் தொழில் வளர்ச்சியில பின் தங்கிய ஏரியாவா அரசாங்கமே அறிவிச்சிருக்கு. இங்கே தொழில் வளத்தை ஏற்படுத்தக் கோடிக்கணக்கில் அரசாங்கமே கடன் தரும். ஆனா, கருப்பசாமி அதுக்காகவும் எதுவும் பண்ணலை. செங்குந்த முதலியார் சமுதாயத்தினர் நிறைய இருக்கிறதால், ஜவுளித் தொழில் பிரதானமா இருந்துச்சு. ஆனா, பாருங்க... அந்தத் தொழிலை ஸ்திரப்படுத்த நூற்பாலை எதுவும் ஏற்படுத்தப்படாத காரணத்தால், அந்தத் தொழிலும் நொடிஞ்சுகிடக்குது. சங்கரன்கோவில்ல கட்டப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் இருபது வருஷத்துக்கு மேலாகியும் திறக்கப்படாமக்கிடக்குது. இதுக்கும் முயற்சி பண்ணாததுதான் கருப்பசாமியோட சாதனை...'' என்று நக்கலாக நிறுத்தினார்கள்.

கருப்பசாமி மீது மக்கள் மத்தியில் இருக்கும் கசப்பு உணர்வால் வரும் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதி எளிதாகத் தங்களது கைகளில் வந்து சேர்ந்துவிடும் என்பது ஆளும் தி.மு.க-வின் எதிர்பார்ப்பு.

கருப்பசாமியின் சொந்தக் கட்சியான அ.தி.மு.க. புள்ளி களிடம் பேசியபோது சாதக, பாதகங்களை சரிசமமாகச் சொன்னார்கள். ''மூன்று முறை எம்.எல்.ஏ-வா இருந்தும் பெயர் சொல்ற அளவுக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரலைங்கிறது உண்மை. வருஷா வருஷம் ஒரு எம்.எல்.ஏ. நிதியில், பள்ளிக் கட்டடங்கள், சத்துணவுக் கூடம், கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கான உபகரணங்கள், சின்னச் சின்னப் பாலங்கள் போன்ற பணிகள் ரெகுலரா நடந்திருக்கு. தன்னோட நிதியைப் பள்ளிக்கூடங்களுக்கு வழங்க அதிகமா ஆர்வம் காட்டுறது மட்டுமே அவரோட சிறப்பம்சம்.

யாரையும் லேசுல பகைச்சுக்க மாட்டாரு. யாரைப் பார்த்தாலும் 'வணக்கம் பாண்டியா, வணக்கம் பாண்டியா’ன்னு கும்பிடு போட்டே காலத்தை ஓட்டிட்டு இருக்கிறார். பதவி இருக்கிற ஜோர்ல அடாவடித்தனம், நில அபகரிப்பு, ஆள் கடத்தல்னு எந்த இம்சையும் கொடுத்துச் சர்ச்சையில் சிக்காம இருக்கிறது இவரோட பெரிய ப்ளஸ். இவரு எந்த நல்லதும் பண்ணலை. அதே நேரத்தில், எந்தக் கெட்டதும் பண்ணலை. அதனால், 'நரி, வலம் போனா என்ன இடம் போனா என்ன? மேலே பாய்ஞ்சு பிறாண்டாம இருந்தா சரி’ன்னு மக்கள் விட்டுட்டாங்க.

கருப்பசாமியின் கிராமத்தனம் அம்மாவுக்குப் பிடிச்சிருக்கிறதாலே, தொடர்ந்து எம்.எல்.ஏ. வாய்ப்பு தந்து, கட்சியின் 'அமைப்புச் செயலாளர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்’னு பொறுப்பு கொடுத்து உட்கார வெச்சிருக்காங்க. தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் தரணும்கிறதும் அதுக்கு ஒரு காரணம். ஆனா, இவர் அப்படிப்பட்ட அம்மாவோடபெருமையை உயர்த்துற மாதிரி எதையும் செய்யலை. 15 வருஷத்தில், அம்மா அறிவிச்ச ஒரு போராட்டம் கூட சங்கரன்கோவில்ல நடந்ததில்லை. சங்கரன் கோவில் யூனியன் ஆபீஸ்ல அமைச்சர் தமிழரசி யோட ஃபங்க்ஷனை எதிர்த்து இவர் பண்ணிய அதிரடி மட்டும்தான் உருப்படி. மற்றபடி இங்கே ஆளும் கட்சிக்காரங்க ஆட்டம் ஏகத்துக்கும் இருக்குது. அம்மாவோட முகத்துக்காக இவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக்கிட்டு இருக்கிற மக்கள் மத்தியில இந்த முறை பெரிய மாற்றம் தெரியுறது உண்மை!'' என்கிறார்கள்.

அந்தத் தொகுதியை விட்டு நகரும் போது, நம் காதுகளைக் கடந்து சென்ற பாடல்...

'நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன்

தானும் கெட்டார்...’

- என்று நீண்டது!