Published:Updated:

வாக்காளர்களுக்கு பணம்: அதிமுக மீது வைகோ குற்றச்சாட்டு

விகடன் விமர்சனக்குழு
வாக்காளர்களுக்கு பணம்: அதிமுக மீது வைகோ குற்றச்சாட்டு
வாக்காளர்களுக்கு பணம்: அதிமுக மீது வைகோ குற்றச்சாட்டு
வாக்காளர்களுக்கு பணம்: அதிமுக மீது வைகோ குற்றச்சாட்டு

திண்டுக்கல்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆளும் அதிமுகவினர் பணம் கொடுத்து வருவதாக, மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்ச்சாட்டியுள்ளார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் குறித்து திண்டுக்கல்லில் அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக அரசின் 36 அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். அவர்கள் கோடி கோடியாக பணம் கொடுத்து சங்கரன்கோவில் தொகுதி மக்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.

ஆனாலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுகவின் வெற்றிவாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

விலைவாசி உயர்வு, பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு போன்றவற்றால் மக்கள் அதிமுக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். மக்கள் சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக வெற்றிபெறும்.

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டபோது பொது நிவாரண உதவி வழங்க வராத அமைச்சர்கள், தற்போது சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ளனர்.

அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தொகுதி திருப்பு முனை ஏற்படுத்தியதுபோல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மதிமுகவுக்கு திருப்புமுனையாக அமையும்," என்றார் வைகோ.