Published:Updated:

தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மீது திமுக புகார்

சென்னை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கோரி, வாக்காளர்களுக்கு அக்கட்சி பணம் அளிப்பதாக தேர்தல் ஆணையத்திடம், திமுக புகார் அளித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி மற்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஆகியோருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலு மற்றும் கட்சி வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தந்தி வாயிலாக புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரில், சங்கரன்கோவிலில் காவல்துறையின் உதவியுடன் அதிமுகவினர் பொதுமக்களுக்கு பணத்தை அளித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.