Published:Updated:

அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க தமிழக காங். கோரிக்கை

அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க தமிழக காங். கோரிக்கை
அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க தமிழக காங். கோரிக்கை
அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க தமிழக காங். கோரிக்கை

சென்னை: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், 'இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இருந்ததாக ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு அறிக்கை தந்துள்ளது. அந்த அறிக்கையில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன.

உரிமை மீறல்கள் என்ன என்பதை கண்டறிய இலங்கை அரசு ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவின் வழி காட்டுதலும் இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உலகிலேயே மனித உரிமை மீறல்களுக்கு விருது வாங்கக்கூடிய அளவுக்கு தகுதி பெற்ற அமெரிக்கா ஒரு தீர்மானத்தை ஐ.நா. சபையில் கொண்டு வருகிறது.

இலங்கையில் யார் கால் ஊன்றுவது என்று சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு நடைபெற்று வரும் சர்வதேச அரசியல் போட்டிகளின் காரணமாக இந்த தீர்மானத்தை அமெரிக்க கொண்டுவந்தாலும் கூட, இலங்கையில் மிகப் பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது என்று அறிந்த பிறகும் மனிதர்களின் உரிமைக்கு முக்கியத்துவம் தருகிற இந்திய திருநாடு குரல் கொடுத்தாக வேண்டும்.

இப்போது தீர்மானம் வந்துவிட்ட நிலையில் இந்திய அரசு அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்' என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.